செந்தில் பாலாஜியை சிக்க வைக்க ஒரு ஆதாரம் கூட இல்லையாம்.. தவெக எம்எல்ஏக்கள் பேரம் வழக்கில் டிவிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காததால் தவெக குதிரை பேரம் பேசி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். மறுபக்கம் தவெக எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் பேசிய வழக்கில் யூடியூபர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி, அவரின் சகோதரர் அசோக் இருப்பதாக தவெக கூறி வருகிறது. ஆனால் வழக்கில் செந்தில் பாலாஜியை சிக்க வைப்பதற்கான போதிய ஆதாரம் காவல்துறைக்கு கிடைக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

தவெக எல்எல்ஏக்கள் இளையராஜா, விஜய் ஆகியோரை ரூ.3 கோடிக்கு பேரம் பேசியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சென்னை திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அரும்பாக்கத்தை சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு நெருக்கமான 14 பேர் தற்போதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில் செந்தில் பாலாஜி, அவருடைய தம்பி அசோக்குமார் இருப்பதாக தவெக புகார் கூறியது.

Senthil Balaji case

தவெக எம்எல்ஏக்கள் பேரம்

இந்த வழக்கில் செந்தில் பாலாஜி, அசோக் ஆகியோர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுள்ளனர். வழக்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான ஆதாரங்கள் காவல்துறைக்கு கிடைக்கவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "யூடியூபர் திருநாவுக்கரசு தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்கள். அவர் தன்னுடைய
தொழில் நிமித்தமாக அரசியல் கட்சியினர், செய்தியாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

ஒரு எம்எல்ஏவை விலைக்கு வாங்கினால் ரூ.5 கோடி கொடுப்பதாக அவரிடம் பேரம் பேசப்பட்டது. 15 எம்எல்ஏக்களை வாங்கி ரூ.75 கோடி சம்பாதிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளார். தன்னுடைய பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்களை தெரிவிக்க திருநாவுக்கரசு மறுக்கிறார். கைதான திருச்சியைச் சேர்ந்த நரேஷ், கரூரை சேர்ந்த கார்த்திக் மற்றும் ரமேஷ் உள்ளிட்டோர் திருநாவுக்கரசுக்கு யூடியூப் சேனல் வழியாக நண்பர்களாகியுள்ளனர்.

ஆதாரம் சிக்கவில்லை

சென்னை சூளைமேடு பகுதியில் தீபம் பைனான்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் கருணாநிதி, சரவணன ஆகியோரு டனும் திருநாவுக்கரசு நட்பாக பழகி உள்ளார். இவர்களுக்குள்
அவர்களிடம் பணம் கொடுத்து வைத்திருந்ததாக திருநாவுக்கரசு கூறினார். தீபம் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து ரூ.2.82 கோடி பறிமுதல் செய்தோம். இந்த பணம் நட்பின் அடிப்படையில் பரிமாறப்பட்டதாக தெரிகிறது. ஆனால் திருநாவுக்கரசுவிடம் செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகியோர் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரம் சிக்கவில்லை" என்றனர்.

செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகியோரை நோக்கி தான் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் குற்றத்தை நிரூபிக்குமளவுக்கு ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் இல்லை. எனவே, கைது எண்ணிக்கையை அதிகரித்து, தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க நினைத்த மோசடிகளை தடுத்து விட்டோம் என்கிற பிம்பத்தை காவல்துறை கட்டமமைக்கிறது என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+