தங்கம் இருக்கட்டும்.. இனிமேல் வெள்ளியும் வாங்கி வச்சுக்கோங்க! விலை தாறுமாறாக உயரப்போகிறது!
சென்னை: சர்வதேச அளவில் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இனி எதிர்காலத்தில் தங்கத்திற்கு இணையாக வெள்ளியின் மதிப்பு மாறினால் கூட வியக்க வேண்டியது இல்லை. இனி வரும் காலங்களில் தொடர்ந்து வெள்ளியின் மதிப்பு உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. கடந்த 12 வருடங்களில் இல்லாத புதிய விலை உயர்வை வெள்ளி அடைந்து உள்ளது.
சென்னை - ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை (1 கிராம்) ₹ 7,555 ஆகவும், இதேபோல் 24 கேரட் தங்கம் விலை ₹ 8,242 (1 கிராம்) ஆகவும் உள்ளது. வெள்ளியின் விலை ரூ.100 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.1,02,100-க்கு விற்பனையானது. 22 காரட் தங்கத்தின் விலையும் ரூ.10 உயர்ந்து, 10 கிராமிற்கு ரூ.72,990க்கு விற்பனையானது. இதன் மூலம்

கடந்த 12 வருடங்களில் இல்லாத புதிய விலை உயர்வை வெள்ளி அடைந்து உள்ளது. இந்தியாவில் தங்கம், வெள்ளி வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெள்ளி, தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முந்தைய ஆண்டை விட 2024 முதல் பாதியில் இந்திய தங்கத்தின் தேவை 1.5% அதிகரித்துள்ளது. தேவை அதிகரிக்க அதிகரிக்க விலை அதிகரிக்கும். இதனால் எதிர்காலத்தில் இதன் மதிப்பு மேலும் உயரும்.
சிறிய சிறிய இறக்கங்கள் அவ்வப்போது இருந்தாலும்.. 2024ம் ஆண்டு முழுக்கவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தபடியே இருக்கிறது. அந்த வகையில் தங்கத்தின் விலை வரும் நாட்களும் மேலும் உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை, தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முந்தைய ஆண்டை விட 2024 முதல் பாதியில் இந்திய தங்கத்தின் தேவை 1.5% அதிகரித்துள்ளது. தேவை அதிகரிக்க அதிகரிக்க விலை அதிகரிக்கும். இதனால் எதிர்காலத்தில் இதன் மதிப்பு மேலும் உயரும்.
2022 ஆம் ஆண்டில், 14KT, 18KT, 20KT, 22KT, 23KT மற்றும் 24KT ஆகிய ஆறு தங்க பிரிவுகளுக்கு இந்திய தரநிலைப் பணியகம் (BIS) ஹால்மார்க் செய்வதை கட்டாயமாக்கியது. இந்தியா உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோர் ஆகும். இந்தியாவின் தங்கத்தின் தேவை அடுத்த ஆண்டு 750 டன்களைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா வங்கிகள் வட்டி மதிப்பை குறைந்துள்ளன. இதனால் டாலர் மதிப்பு மேலும் குறையும். இதனால் தங்கத்தின் விலை உயரும். வரும் நாட்களில் தங்கத்தின் விலை உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தற்போது வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து உள்ளது. இந்த முடிவு டாலரை பலவீனப்படுத்தி உள்ளது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு $2,592.39 ஆக உயர்ந்தது. அதே நேரத்தில் அமெரிக்க தங்கத்தின் எதிர்கால விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $2,598.60 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் தங்கத்தின் விலையும், இந்திய ரூபாயின் மதிப்பும் சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பைப் பொறுத்தது. சந்தையில் தங்கத்தின் விலை அமெரிக்க டாலரின் விலை சரியும் போதெல்லாம் உயரும். அதேபோல் அமெரிக்க டாலர் மதிப்பில் உயர்வு ஏற்பட்டால், தங்கத்தின் மதிப்பு குறையும்.












Click it and Unblock the Notifications