கமல் முதல் தேர்தல்ல தோத்துப் போயிட்டார்தான்.. ஆனால் விதை.. இவங்க போட்டது!!
சென்னை : நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிக்ருமான கமல் கோவை தெற்கு தொகுதியில் பாஜக.,வின் வானதி சீனிவாசனிடம் தோல்வி அடைந்தார். தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே கமல் துரதிஷ்டவசமாக தோல்வி அடைந்தார்.
இருந்தாலும் 22 வது சுற்று ஓட்டு எண்ணிக்கை வரை கமல் முன்னிலையிலேயே இருந்து வந்தார். ஆனால் கடைசி 2 சுற்றுகளில் வானதி சீனிவாசன் முன்னிலை வகித்து, வெற்றி பெற்றார். 1728 ஓட்டு வித்தியாசத்திலேயே வானதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி 154 தொகுதிகளில் போட்டியிட்டும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அந்த கட்சியில் கமலை தவிர மற்றவர்கள் முன்னிலையில் கூட வரவில்லை. பெரும்லாபான தொகுதிகளில் கமல் கட்சிக்கு 4 வது இடம் தான் கிடைத்தது. கமல் மட்டுமல்ல இந்திய அளவில் பிரபலமான சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் பலரும் தாங்கள் முதலில் போட்டியிட்ட தேர்தலில் தோற்று தான் போய் உள்ளார்கள். அவர்கள் பற்றிய விபரங்களை இங்கே பார்க்கலாம்.

குல் பனாங்
2014 ல் நடந்த லோக்சபா தேர்தலில் சண்டிகரில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட இவருக்கு முதன் முதலில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பாஜக.,வின் கிர்ரோன் கரிடம் தோல்வியை தழுவினார்.

ராக்கி சாவந்த்
இவர் 2014 லோக்சபா தேர்தலின் போது ராஷ்டிரிய ஆம் என்ற கட்சியை துவங்கினார். ஆனால், அந்த தேர்தலில் வட மேற்கு மும்பை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

மகேஷ் மஞ்சிரேக்கர்
மகேஷ், 2014 லோக்சபா தேர்தலில் மும்பையின் வட மேற்கு தொகுதியில் மகாராஷ்டிர நவ நிர்மான் மேனா வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால் சிவ சேனாவின் கஜானன் கிர்திகரிடம் தோல்வி அடைந்தார்.

ரவி கிஷான்
காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர், 2014 லோக்சபா தேர்தலில் உத்திரபிரதேசத்தின் ஜவுன்பூர் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் தோல்வி அடைந்து, பிறகு 2019 ல் பாஜக.,வில் இணைந்தார். பாஜக.,வில் இணைந்த பிறகு உத்திர பிரதேசத்தின் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி அடைந்தார்.

ஸ்மிருதி இரானி
இவர் 2003 ல் பாஜக.,வில் இணைந்து, மகாராஷ்டிர இளைஞரணி துணை தலைவரானார். 2004 ல் நடந்த லோக்சபா தேர்தலில் டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் கபில் சிபிலை எதிர்த்து போட்டியிட்டு தோற்றார். ஆனால் அதற்கு அடுத்தடுத்த தொகுதிகளில் வெற்றி பெற்ற இவர், தற்போது அமேதி தொகுதி எம்பி.,யாகவும், மத்திய ஜவுளி மற்றும் மகளிர் - குழந்தைகள் மேம்பாட்டு துறைகளின் அமைச்சராக இருந்து வருகிறார்.

மனோஜ் திவாரி
2009 லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு தனது அரசியல் பயணத்தை துவக்கினார் மனோஜ் திவாரி. ஆனால் கோரக்பூர் தொகுதியில் பாஜக.,வின் யோகி ஆதித்யநாத்திடம் தோல்வி அடைந்தார்.

பிரகாஷ் ஜா
3 முறை லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு, ஒவ்வொரு முறையும் தோல்வி அடைந்தார். 2004 ல் தனது சொந்த தொகுதியான சம்பரன் தொகுதியில் போட்டியிட்டும் தோற்றார். 2009 ல் லோக் ஜனசக்தி கட்சி சார்பில் போட்டியிட்டும் தோற்றார். 2014 ல் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிட்டும் தோற்றார்.

ராஜேஷ் கன்னா
1991 லோக்சபா தேர்தலில் டெல்லியில் காங்கிரஸ் சார்பில் தனது முதல் தேர்தலில் போட்டியிட்ட இவர், பாஜக.,வின் எல்கே அத்வானியிடம் தோற்றார். சினிமாவில் உச்ச நடிகராகவும், அதிக ரசிகர்களை கொண்ட புகழ்பெற்றவராக இருந்தும் இவர் தோற்றார்.

சத்ருகன் சின்ஹா
சக நடிகரான ராஜேஷ் கன்னாவை எதிர்த்து, தனது முதல் தேர்தலில் போட்டியிட்ட சத்ருகன் சின்ஹா தோல்வி அடைந்தார். காங்கிரஸ், பாஜக என மாறி மாறி சென்றும் வெற்றி கிடைக்கவில்லை.

பவன் கல்யாண்
2014 ல் ஜன சேனா என்ற கட்சியை துவக்கிய பவன் கல்யாண், 2019 லோக்சபா தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால் இரண்டிலுமே இவர் தோல்வி அடைந்தார்.












Click it and Unblock the Notifications