Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனிதான் மெயின் பிக்சர்! அடுத்த சில நாட்கள்தான்.. கூடாரம் காலி! அதிமுகவிலிருந்து பலர் வெளியேற முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இப்போது நடப்பதோ மழைக்காலம்.. ஆனால் அதிமுகவிற்கு மட்டும் அது இலையுதிர் காலம். அதாவது இரட்டை இலையில் இருந்து பல இலைகள் உதிர்ந்து விழுந்து வேறு கட்சிக்கு பறந்து செல்லும்.. இலையுதிர் காலம் இது!

ஆம்.. அதிமுகவில் இருந்து வரும் நாட்களில் பல மூத்த தலைவர்கள் வெளியேற முடிவு செய்துள்ளதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவில் இருந்து கடந்த சில நாட்களாகவே பலர் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். சமீபத்தில் முன்னாள் அதிமுக எம்.பி. மைத்ரேயன், அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவரை உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர். "திமுக ஆட்சியில் தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதியானது. இரண்டாவது இடத்திற்குத்தான் போட்டி நடக்கும்" என்று மைத்ரேயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Not Just Sengottaiyan Many leaders may leave the AIADMK party soon says sources

சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த அன்வர் ராஜாவின் முடிவு பல விவாதங்களை எழுப்பியுள்ளது. அதிமுகவின் முக்கியமான இஸ்லாமிய முகங்களில் ஒருவரான அன்வர் ராஜா, திமுகவில் இணைந்தது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இவர் அதிமுகவின் அமைப்புச் செயலாளராகவும், முன்னாள் எம்.பி.யாகவும் இருந்தார்.

அதேபோல் ஆலங்குளம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரும் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த நிலையில், எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த மனோஜ் பாண்டியன் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துவிட்டார்.

லிஸ்ட் கூடிக்கொண்டே போகிறது

இப்படி வரிசையாக அதிமுகவில் இருந்து வெளியேறும் தலைகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. எங்கடா இங்க இருந்த என் டீமை காணோம் என்று ரியாஸ் கானிடம் மாட்டிக்கொண்ட வடிவேல் தனது அடியாட்களை தேடுவது போல எடப்பாடி பழனிசாமி திரும்பி பார்க்கும் முன் கட்சியில் இருந்து கொத்து கொத்தாக ஆட்கள் வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள்.

அந்த வகையில்தான் அதிமுகவில் இருந்த செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில் அவர் தற்போது விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்துள்ளார். நேற்று முதல் நாள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவர் நேற்று தவெகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் செங்கோட்டையன் இந்த முடிவை எடுத்துள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். தவெகவில் இணையும் முன் நேற்று இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்ற கோபிசெட்டிபாளையம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது டீசர்தான்

அதிமுக தரப்பில் விசாரித்ததில் இது வெறும் டீசர்தான் என்கிறார்கள். மெயின் பிக்சர் இனிதான் என்கிறார்கள். அதாவது கொங்கு மண்டலத்தில் இருந்து இன்னொரு தலைவர், சென்னையில் இருந்து ஒருவர், டெல்டாவில் இருந்து இருவர் என்று இன்னும் 4 தலைகள் விரைவில் தவெகவிற்கு தாவ போகிறார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த அதிமுக தலைகளிடம் செங்கோட்டையன்தான் பேசி வருகிறாராம். சிட்டி டிஸ்மாண்டில் என்று ரஜினி சொன்னதும் ரோபோ சிட்டி உடல் பாகங்களை அகற்றுவது போல.. அதிமுகவின் பாகங்களை செங்கோட்டையன் ஒவ்வொன்றாக அகற்றி தவெகவிற்கு கொண்டு வரப்போகிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அடுத்த சில நாட்களில் இதனால் சுடசுட.. பல அரசியல் திருப்பங்கள் நடக்கலாம் எனப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+