கிங் ஆக வாய்ப்பில்லை.. சூழலை உணர்ந்த விஜய்.. கிங் மேக்கர் ஆனால் போதும்.. தவெக மாஸ்டர்பிளான்
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) முக்கியப் பங்காற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்வி விஜய்க்கும் எழுந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது விஜயும் நாம் தனியாக ஆட்சி அமைக்க முடியுமா என்ற கேள்விகளை கேட்க தொடங்கி உள்ளாராம்.
ஏற்கனவே ஆளும் திமுக, முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. முக்கியமாக சிறுபான்மையினர் வாக்குகளை பிடிக்க திமுக தீவிரமாக செயல்படுகிறது. கிறிஸ்துவர்களின் வாக்குகளை கவர ஆளும் திமுக தரப்பு முக்கியமான சில திட்டங்களை வகுத்து வருகிறதாம். அதன் ஒரு கட்டமாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நெல்லையில் திமுக கிறிஸ்துமஸ் விழாக்களை கொண்டாட உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக இதற்கான திட்டங்களை ஆளும் திமுக வகுத்து வருகிறதாம்.

திமுக பிளான்
விஜய் கிறிஸ்துவ பின்னணியை கொண்டவர். அவரின் கட்சிக்கு நிதி கொடுக்கும் பல்வேறு பணக்காரர்கள் கிறிஸ்துவ பின்னணியை கொண்டவர்கள். விஜய்க்கு ஆலோசனைகளை வழங்கும் சில தலைகளும் கூட கிறிஸ்துவ பின்னணியை கொண்டவர்கள். விஜய் குறி வைப்பதில் முக்கியமானது கிறிஸ்துவர்களின் வாக்குகள். இத்தனை காலம் அந்த வாக்குகள் திமுகவிற்கு சென்றது. தற்போது அந்த வாக்குகள் விஜய்க்கு செல்லும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
உளவுத்துறை சார்பாக ஆளும் திமுகவிற்கு சில எச்சரிக்கைகள் சென்றுள்ளதாம். உளவுத்துறை தகவல்கள் கூறுகையில், பாரம்பரியமாக திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்கும் சிறுபான்மையினர் வாக்குகள், விஜய்யின் அரசியல் வருகையால் புதிய அழுத்தங்களைச் சந்திக்கக்கூடும். கிறிஸ்தவ வாக்காளர்கள் ஆதரவு குறைந்தால் ஆளும் கூட்டணிக்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் தகவல் சென்றுள்ளதால் ஆளும் திமுக கிறிஸ்துவர்கள் வாக்குகளை கைப்பற்ற தீவிரமாக காய் நகர்த்தி வருகிறதாம்.
அதிமுக பிளான்
ஆனால், எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுகவிடம் அதே வேகம் தென்படவில்லை. இன்னும் கூட்டணி அமைக்க முடியாமல், உட்கட்சி பிரச்சனையை தீர்க்க முடியாமல் எடப்பாடி திணறி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய் 'கிங்மேக்கராக' உருவெடுப்பார் என்ற வாதங்கள் வைக்கப்படுகின்றன. விஜய் திமுகவின் சிறுபான்மையினர் வாக்குகளை உடைப்பார். பெண்களின் வாக்குகளை பிரிப்பார். அதிமுகவின் பாரம்பரிய திமுக எதிர்ப்பு வாக்குகளை உடைப்பார். எம்ஜிஆர் ரசிகர்களை தங்கள் பக்கம் கொண்டு வர தீவிரமாக முயல்வார். அவர்களின் வாக்குகளை உடைப்பார் என்று வாதம் வைக்கப்படுகிறது.
1. திமுகவினர் மைனாரிட்டி வாக்குகள்.
2. திமுகவின் பெண் வாக்காளர்கள்.
3. அதிமுகவின் திமுக எதிர்ப்பு வாக்குகள்.
4. அதிமுக பக்கம் செல்லாத இளைஞர்கள் வாக்குகள்.
இந்த வாக்குகளை மொத்தமாக உடைத்து தன் பக்கம் விஜய் இழுத்து செல்வார் என்று வாதம் வைக்கப்படுகிறது.
விஜய்க்கு செல்லும் 25 சதவிகித வாக்குகள்
பெண் வாக்காளர்களிடையே, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிணைப்பை வேறு தலைவர்கள் பெறவில்லை. அவர் மறைந்தபின், மாத உதவித்தொகை போன்ற நலத்திட்ட வாக்குறுதிகளால் பெண்கள் திமுகவை நாடினர். தற்போது, சட்ட ஒழுங்கா பற்றிய கவலைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிப் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தரவுகள்படி, 2020-2023இல் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் கணிசமான உயர்வு அடைந்து உள்ளது. போக்சோ (POCSO) சட்ட வழக்குகளான பாலியல் வன்முறை, அத்துமீறல், கடத்தல் போன்றவற்றிலும் பெரும் அளவில் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக திமுகவுக்குப் பெண் வாக்காளர்களைத் தக்கவைப்பதில் சவால் உள்ளது. விஜய் சில ஆதரவைப் பெற்றாலும், இந்த அதிருப்தியால் அதிமுகவே அதிக லாபம் அடையும் வாய்ப்புகளும் உள்ளன.
விஜய் வாக்குகளை பிரிப்பர்
இன்னொரு பக்கம் பட்டியல் சமூகத்தினர் அதிருப்தி அதிகரித்துள்ளது. எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுகவின் ஆதரவுத் தளமாக இருந்து திமுகவுக்கு மாறிய இவர்களிடையே, அண்மையில் சாதி வன்முறைகள், கொலைகள், தாக்குதல்கள், பட்டியல் சமூகப் பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்துள்ளன. இப்போக்குகள் கோபத்தையும் அந்நிய உணர்வையும் உருவாக்கி, சிலரை விஜய் போன்ற மாற்றுகளை நாடத் தூண்டுகிறது.
தமிழக வெற்றி கழகத்துக்கு (TVK) வலுவான அமைப்புக் கட்டமைப்பு இல்லை. வாக்குச்சாவடி குழுக்கள், உள்ளூர் தலைவர்களை கட்சி உருவாக்க இன்னும் போராடி வருகிறார். தமிழக வாக்காளர்கள், தங்களைச் சந்தித்து உள்ளூர் பிரச்சினைகளில் ஈடுபடும் வேட்பாளர்களையே பொதுவாக விரும்புகின்றனர். இதுவே விஜய்யின் மிகப்பெரிய பலவீனம்.
சிறுபான்மையினர் வாக்குப்பதிவு தற்போது தெளிவாக உள்ளது. இஸ்லாமியர்கள் பெரும்பாலும் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு. கிறிஸ்தவர்கள் மாற்றத்தை நோக்குகின்றனர். விஜய் அவர்களில் ஒரு பகுதியினரை ஈர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிங் மேக்கர்
இதை எல்லாம் உணர்ந்தே தான் கிங் ஆக முடியாது என்றால் கிங் மேக்கர் ஆகிவிடுவோம் என்று விஜய் நினைக்கிறாராம். அதாவது ஆட்சியை பிடிக்க முடியாது. ஆனால் ஆட்டத்தை கலைப்போம். 20-25 சதவிகித வாக்குகளை பிரிப்போம். அப்படி செய்தால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்றாலும் ஆட்சியில் அமர போவது யார் என்பதை நாங்களே தீர்மானிப்போம்.
அதாவது நாம்தான் கிங் மேக்கர். நம்முடைய ஆதரவு உள்ளவர்களே ஆட்சியை பிடிப்பார்கள் என்ற சூழலை விஜய் உணர தொடங்கி உள்ளாராம். இதனால் அதற்கு ஏற்றபடி வரும் நாட்களில் காய் நகர்த்துவார் என்று கூறப்படுகிறது.
-
புதுவையில் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மாஜி பாஜக அமைச்சருக்கு சீட் கொடுத்த விஜய்.. முழு லிஸ்ட் -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
Aadhav Arjuna: தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தமிழ் வழியில் கல்வி பயின்றவரா? உண்மை என்ன! -
"எம்ஜிஆர் போல இன்னொருவர் வர வாய்ப்பில்லை.." சிவகுமார் திட்டவட்டம்.. பாய்ந்து வரும் விஜய் ரசிகர்கள் -
தவெகவில் இணைந்த அன்றே சீட் கொடுத்த விஜய்.. பாஜகவில் இருந்து தாவி உடனே வேட்பாளர் ஆன சாய் சரவணன்! -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி -
சொதப்பும் ஸ்டாலின்.. திமுகவுக்கு எதிராக திரும்பும் வன்னியர் வாக்கு! தலித் வாக்குகளை பிரிக்கும் விஜய்












Click it and Unblock the Notifications