விஜய்க்கு இதைவிட சிறப்பான சான்ஸ் கிடைக்காது! இன்னும் 3 நாள்தான் இருக்கு! அரசியலையே புரட்டி போடலாம்
சென்னை: தமிழ்நாட்டு அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் முக்கியமான சான்ஸ் ஒன்று நடிகர் மற்றும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு கிடைத்துள்ளது. இதை மட்டும் சரியாக விஜய் பயன்படுத்தினார் என்றால் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நடக்கும்.
தமிழ்நாட்டில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் + அதிமுக + நாம் தமிழர் கூட்டணி உருவாகலாம் என்று அதிமுக ஆதரவு ஆலோசகர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதை விட திமுக கூட்டணியை உடைப்பதே விஜயின் முக்கிய திட்டம் என்று அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவிக்கின்றனர்.

முக்கியமாக விஜய் + சீமான் இணைய வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.இவர்கள் ஒன்றாக இணைந்து கூட்டணி வைத்து திமுகவை எதிர்க்கலாம் என்று சிலர் கருத்துக்களை வைக்கின்றனர்.
விஜய் அரசியல்; தமிழ்நாட்டில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணி வைத்தால் அவர்களால் திமுக கூட்டணியை வீழ்த்த முடியுமா என்ற கேள்வி உள்ளது. இதற்கு தர்க்க அடிப்படையில் பார்க்காமல் சதவிகித அடிப்படையில் என்ன நிலவரம் என்று பார்க்கலாம்.
கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி வென்ற வாக்குகள் 46.97 சதவிகிதம் .
தனியாக திமுக வென்ற வாக்குகள் 26.93 சதவிகிதம் .
அதிமுக கூட்டணி வென்ற வாக்குகள் 23.05 சதவிகிதம் .
தனியாக அதிமுக வென்ற வாக்குகள் 20.46 சதவிகிதம் .
நாம் தமிழர் தனியாக வென்ற வாக்குகள் 8.20 சதவிகிதம்.
இதில் விஜய் வாக்கு வங்கி அதிமுகவிற்கு போனால் தேர்தல் முடிவுகள் கூட மாறும் வாய்ப்புகள் உள்ளன.
விஜயை தங்கள் பக்கம் கொண்டு வர அதிமுக திட்டமிடுவதற்கு பின் சில காரணங்கள் உள்ளன. பொதுவாக தமிழ்நாட்டில் புதிதாக நடிகர்கள் கட்சி தொடங்கினால் வாக்கு சதவிகிதம் முதல் தேர்தலில் 5 வரை இருக்கும். முறையான கட்டமைப்பு இருந்த தேமுதிகவிற்கே 5 சதவிகிதம்தான் இருந்தது. கமல்ஹாசன் கட்சி தொடங்கிய போதும் மொத்தமாக கிட்டத்தட்ட 4 சதவிகிதம் வாக்குகள் வந்தன.
விஜய் முடிவு எடுப்பாரா?: இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டு அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் முக்கியமான சான்ஸ் ஒன்று நடிகர் மற்றும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு கிடைத்துள்ளது. இதை மட்டும் சரியாக விஜய் பயன்படுத்தினார் என்றால் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நடக்கும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 10ம் தேதி நடக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்க ஜூலை 13ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. திமுக - நாம் தமிழர் - பாமக என்று மும்முனை போட்டி நிலவுகிறது.
மும்முனை போட்டி நிலவும் நிலையில், அதிமுக ஆதரவை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுள்ளார். அதன்படி, கட்சி ஆரம்பிக்கும் முன்பு ஜெயலலிதாவை ஆதரித்து.. அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தேன். இலங்கை போர் நடந்தது. என் சொந்தங்களை கொன்ற கூட்டத்திற்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ், திமுகவை எதிர்த்து அதிமுகவிற்கு ஆதரவு அளித்தேன். அதன்பின் 2011 தேர்தலில் மீண்டும் அதிமுகவிற்காக பிரச்சாரம் செய்தேன். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பிரச்சாரம் செய்தேன், என்றெல்லாம் வெளிப்படையாக சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில்தான் விஜய் சீமானுக்கு ஆதரவு கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த தேர்தலுக்கு 8ம் தேதி வரை பிரச்சாரங்களை செய்ய முடியும். ஆதரவு அரசியல் கருத்துக்களை தேர்தல் தொடர்பாக சொல்ல முடியும்.
அப்படி இருக்க விஜய் விக்கிரவாண்டி தேர்தலில் சீமானுக்கு ஆதரவு கொடுப்பாரா.. கூட்டணிக்கான அச்சாரத்தை போடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications