கருணாநிதி கூட இந்த ரிஸ்க்கை எடுத்தது இல்லையே! விக்கிரவாண்டி தேர்தல்.. ஸ்டாலின் எடுத்த ரிஸ்க் முடிவு?
சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி கூட எடுக்காத ஒரு ரிஸ்க்கை முதல்வர் ஸ்டாலின் எடுத்துள்ளார். விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தீவிரமான சில ஆலோசனைகளை மேற்கொண்டு கடைசியில் சிவாவை வேட்பாளராக தேர்வு செய்துள்ளாராம்.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 39 இடங்களிலும் கிளீன் ஸ்வீப் செய்துள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் 4வது பெரிய தனி கட்சியாக மாறி உள்ளது. இந்த தேர்தலில் ஸ்வீப் செய்த ஒரே மாநில கட்சி திமுகதான்.

இந்த நிலையில் திமுகவிற்கு அடுத்த டெஸ்ட்டாக விக்கிரவாண்டி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி: விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் விதிகள் இன்றொரு நடைமுறைக்கு வருகின்றன. அடுத்த 1 மாதம் தேர்தல் தேதிகள் நடைமுறையில் இருக்கும்.
வேட்புமனு தாக்கல் : ஜூன் 14 - 21
வேட்புமனு பரிசீலனை : ஜூன் 24
வேட்புமனு திரும்பப்பெற : ஜூன் 26
வாக்குப்பதிவு : ஜூலை 10
வாக்கு எண்ணிக்கை : ஜூலை 13
வேட்புமனு தாக்கல்: விக்கிரவாண்டிக்கு ஜூலை 10-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் தொடக்கத்துக்கு இன்னும் 3 நாட்கள்தான் இருக்கின்றன. இதனால் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதில் மும்முரம் காட்டியுள்ளன.
விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து மறைந்தவர் புகழேந்தி. வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். இத்தொகுதியில் பெரும்பான்மை சதவீதம் பேர் வன்னியர்கள்தான். அதனால், இந்த முறையும் திமுகவில் வன்னியர் ஒருவருக்கே சீட் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
திமுக பிளான்: கட்சித் தலைமையும் இது குறித்து சீரியஸ் காட்டி வருகிறது. புகழேந்தியின் குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கலாமா? அல்லது மாவட்ட திமுகவில் அணி சார்ந்த முக்கிய பொறுப்பில் உள்ள வன்னியர்களில் ஒருவரை தேர்வு செய்யலாமா? என சமீபத்தில் தீவிர ஆலோசனை திமுகவில் நடந்துள்ளது.
அப்போது அமைச்சர் பொன்முடி, என மகனுக்கு வாய்ப்புத் தாருங்கள். அல்லது நான் சுட்டிக்காட்டும் நபருக்கு வாய்ப்புத் தாருங்கள். வன்னியரல்லாத ஒருவரை நிறுத்தி ஜெயிக்க வைத்துக் காட்டுகிறேன் என அழுத்தமாக வாதிட்டிருக்கிறாராம். ஆனால், பொன்முடி பேச்சுக்கு மதிப்பளித்து ரிஸ்க் எடுக்க வேண்டுமா? என யோசித்த ஸ்டாலின், அப்போது, வன்னியர் ஒருவரை உங்கள் சாய்ஸாக சொல்லுங்களேன் என கேட்க அதற்கு எந்த பதிலையும் சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளார் பொன்முடி.
இதற்கிடையே, வன்னியரல்லாத ஒருவரை நியமித்தால் விழுப்புரம் மாவட்ட திமுக வன்னியர்கள் தேர்தலில் உள்ளடி வேலைகளை செய்வார்கள் என்கிற தகவல்களும் அமைச்சர் உதயநிதி வழியாக திமுக தலைமைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாம்.
இதை எல்லாம் தாண்டித்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி கூட எடுக்காத ஒரு ரிஸ்க்கை முதல்வர் ஸ்டாலின் எடுத்துள்ளார். விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது பொன்முடியின் தேர்வு கிடையாது.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தீவிரமான சில ஆலோசனைகளை மேற்கொண்டு கடைசியில்தான் சிவாவை வேட்பாளராக தேர்வு செய்துள்ளாராம். முதல்முறையாக பொன்முடி கட்டுப்பாட்டில் உள்ள ஏரியா ஒன்றில் பொன்முடி சொல்லாத ஒருவரை ஸ்டாலின் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கருணாநிதி கூட இந்த ரிஸ்க்கை இதுவரை அங்கே எடுத்தது இல்லை என்று கூறப்படுகிறது.
அதிமுக சந்தேகம்; அதிமுக தோல்வி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவது சந்தேகம் ஆகி உள்ளது. இது தொடர்பாக உட்கட்சி அளவில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றனவாம்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்து உள்ளது.
அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. இன்றோடு 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது.
இதனால் இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கு அதிமுக யோசித்து வருகிறதாம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications