வாழ்ந்தா.. இங்கதான் வாழனும்! இரவை சிறப்பாகும் நகரங்களில் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்தியன் சிட்டி!
சென்னை: இரவு யாருக்குதான் பிடிக்காது. அப்பேற்பட்ட இரவை சிறப்பானதாக காட்டும் சில நகரங்கள் இருக்கின்றன. சர்வதேச அளவில் இப்படியான நகரங்களை லிஸ்ட் எடுத்தபோது, அதில் ஒரே ஒரு இந்திய நகரம் இடம் பிடித்திருக்கிறது.
பாதுகாப்பு உணர்வு, சமூகமாக பழகுதல், பிடித்த இடத்திற்கு செல்லும் வாய்ப்புகள், சிறந்த பொழுதுபோக்கு போன்றவற்றின் அடிப்படையில் இந்த நகரங்களை 'டைம் அவுட்' இதழ் மற்றும் 'இன்ட்ரெபிட் டிராவல்' நிறுவனம் லிஸ்ட் அவுட் செய்திருக்கிறது.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் பாங்காக் உள்ளது. இரண்டாவது பெர்லின், மூன்றாவது நியூயார்க். இப்படி தொடர்ந்து வெளிநாட்டு நகரங்களே லிஸ்ட்டில் இடம் பிடித்திருக்கின்றன. சரி, இந்தியன் சிட்டி எதுவும் கிடையாதா? என்று தேடி பார்த்தால்.. 19வது இடத்தில் பெயர் இருக்கிறது. பொதுவாக இந்தியாவில் மும்பை, டெல்லி போன்ற நகரங்கள்தான் இரவு நேரத்தில் சிறப்பான அனுபவத்தை தரும் என்று சொல்வார்கள். ஆனால், பெங்களூர்தான் சிறப்பான அனுபவத்தை தரும் என்று பட்டியலிடப்பட்டிருக்கிறது. இந்த லிஸ்ட்டில் இடம் பெற்றிருக்கும் ஒரே நகரம் பெங்களூர்தான்.
இந்த நகரத்தை பொறுத்தவரை, புதிய மனிதர்களை சந்திப்பதற்கும், பாதுகாப்பாக உணர்வதற்கும், தங்களுக்கு பிடித்தமான ரசனை கொண்ட குழுக்களுடன் இணைவதற்கும் இந்த நகரம் மிகவும் ஏற்ற இடம் என்று மக்கள் கூறுகின்றனர்.
- இரவு வாழ்க்கையின் தரம் - 71 புள்ளிகள்
- சமூக உணர்வு - 82 புள்ளிகள்
- மலிவு விலை - 54 புள்ளிகள்
- தெருவோர கடைகளை விரும்புவோர் - 55%
- சதாரண பார்களை விரும்புவோர் - 50%
என மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. பெங்களூர் மக்கள் இரவு நேரத்தில் வீதிக்கு வர முக்கிய காரணம், எளிதாக கிடைக்கும் உணவுகள்தான். இரவு நேரத்தில் நீங்கள் எந்த ஏரியாவில் இருந்தாலும், இரவு நேர கஃபேக்ககள், நள்ளிரவு உணவகங்களுக்கு ஈஸியாக போய்விட முடியும். இதுபோன்ற கடைகள்தான் இரவு நேரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.
இங்கு ஆடம்பரமான கிளப்புகள் மட்டுமல்லாது, மக்கள் சாதாரணமாக உட்கார்ந்து பேசக்கூடிய 'கேஷுவல் பார்கள்' மற்றும் 'பப்' கலாச்சாரம் மிக அதிகம். 50%க்கும் அதிகமான மக்கள் இதை விரும்புகின்றனர். அதேபோல பெங்களூர் மக்கள் 'மைக்ரோபுரூவரிகளை' அதிகம் விரும்புகின்றனர். மைக்ரோபுரூவரி என்பது, அங்கேயே நேரடியாக பியர் தயாரித்து அங்கேயே வாடிக்கையாளர்களுக்கு ஃப்ரெஷ்ஷாக பரிமாறும் ஒரு சிறிய மதுபான உற்பத்தி நிலையமாகும்.
வெளியில் ஒயின் ஷாப்களில் பியர் வாங்கி குடிப்பதற்கும், இங்கு விநியோகிக்கப்படும் பியருக்கும் வித்தியாசம் இருக்கும். இங்கு பியர் நேரடியாக பெரிய டேங்குகளில் தயாரிக்கப்பட்டு உடனுக்குடன் விநியோகிக்கப்படும். இதில் எந்தவிதமான பதப்படுத்தும் வேதிப்பொருட்களும் சேர்க்கப்படுவதில்லை. Toit, Biere Club, Pecos போன்ற பாரம்பரிய மைக்ரோபுரூவரிகள் பெங்களூரின் சிறந்த அடையாளமாக இருக்கிறது. இதெல்லாம்தான் பெங்களூரை இரவு நேர வாழ்க்கைக்கு ஏற்ற நகரமாக மாற்றியிருக்கிறது.


Click it and Unblock the Notifications
