பாஜக மட்டும் இல்லை.. அதிமுக எதிர்ப்பிலும் உறுதியாக இருக்கிறோம்.. அழுத்தமாக சொல்லும் கே.பாலகிருஷ்ணன்
சென்னை: இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வது அரை மணி நேர வேலை தான் என்றும், பாஜக மட்டுமின்றி அதிமுகவை எதிர்ப்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்துள்ளது. பேரறிஞர் அண்ணா பற்றியும், அதிமுக தலைவர்கள் பற்றியும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசி வந்தது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அதிரடியாக அறிவித்தது. வரும் லோக்சபா தேர்தல் மட்டும் இன்றி 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக அறிவித்தது.

இது பாஜக மேலிடத்திற்கு சற்று அதிர்ச்சியை கொடுப்பதாக அமைந்தது. பாஜக மீண்டும் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டுவதாகவும் ஆனால், அதிமுக தலைமை பாஜகவின் அழைப்புகளை நிராகரித்து வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. பாஜக- அதிமுக கூட்டணி முறிந்தாலும் அரசியலில் நடந்து வரும் அடுத்தடுத்த நகர்வுகள் பெரும் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது..
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியிருப்பதால் தமிழகத்திலும் கூட்டணி மாறலாம் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் அதிமுக பக்க தாவலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களிலும் அரசியல் நோக்கர்கள் மத்தியிலும் பரவலாக பேசப்படும் ஒரு கருத்தாக உள்ளது.

எனினும், விடுதலை சிறுத்தைகள் கட்சி திட்டவட்டமாக மறுப்பு தெரிவிப்பதோடு திமுக கூட்டணியில் உறுதியாக இருப்பதாக ஒரு மெசேஜையும் தெரிவித்துள்ளது. இதேபோல்தான் கம்யூனிஸ்ட் கட்சிகளும் "இந்தியா" கூட்டணியில் உறுதியாக இருப்போம் என்ற கருத்தையே துவக்கம் முதலே சொல்லி வருகிறது. அந்த வகையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பாஜக மட்டுமின்றி அதிமுகவை எதிர்ப்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வது அரை மணி நேர வேலை தான். அண்ணாமலை அரசியல் முதிர்ச்சி அற்றவராக இருக்கிறார் என்பது அவரது பேச்சிலே தெரிகிறது. பாஜக மட்டுமின்றி அதிமுகவை எதிர்ப்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications