கேப்டன் மில்லர், அயலான் மட்டுமல்ல.. யாரு படம் ஓடினாலும் ஹீரோ இங்க நாங்க தான்.. மாறிய வரலாறு
சென்னை: கேப்டன் மில்லர், அயலான் மட்டுமல்ல.. இனி எந்த படம் ஓட வேண்டும், எது ஒடக்கூடாது என்பதை தீர்மானிக்கும் சக்தியாக வளர்ந்துள்ளது எது தெரியுமா? சில வருடங்களில் தமிழ் சினிமாவில் மொத்த வரலாறும் மாறி உள்ளது. அதை பற்றி இப்போது பார்ப்போம்.
இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனரான ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் பொங்கலை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ள படம் அயலான். சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோப்பிகர், கருணாகரன், நவீனாக ஷரத் கேல்கர், யோகி பாபு, கருணாகரன், பானுப்பிரியா, பாலா சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் ஏலியன் பூமிக்கு வந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து இயற்கைக்கு எதிரானவர்களை அழிப்பது தான் கதை. அறிவியல் கற்பனை கலந்த காமெடி படமான அயலான் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இதேபோல் இறுதி சுற்று படத்தின் இயக்குனரான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகி பொங்கலை முன்னிட்டு வெளியாகி உள்ள படம் கேப்டன் மில்லர். தனுஷ், சிவ ராஜ்குமார் , பிரியங்கா அருள் மோகன் , அதிதி பாலன் , சந்தீப் கிஷன் , எட்வர்ட் சோனன்ப்ளிக் மற்றும் ஜான் கோக்கன் ஆகியோர் நடித்துள்ள இந்த படம் பழங்காலத்து கதையாகும். ஆங்கிலேயர் காலத்தில் கேப்டன் மில்லராக வரும் தனுஷ், சொந்த மக்களுக்கு எதிரான ஆங்கிலேய போலீஸ் படையில் சேர்ந்தவர், பின்னாளில் மக்களுக்காக ஆங்கிலேயர்களை எதிர்ப்பது தான் கதை. இந்த படமும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
சொல்ல வந்த விஷயத்திற்கு வருவோம்.. கேப்டன் மில்லன், அயலான் மட்டுமல்ல.. இனி எந்த படம் ஓட வேண்டும்... ஒடக்கூடாது என்பதை தீர்மானிக்கும் சக்தியாக வளர்ந்துள்ளது சமூக வலைதளங்கள் தான். ஒரு படம் ஓட வேண்டுமா.. ஓடாமல் வீணாக வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் சக்தியாக சமூக வலைதளங்களில் வளர்ந்துள்ளன. குறிப்பாக ட்விட்டரில் (எக்ஸ் தளம்) வரும் கருத்துக்களே மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக சோசியல் மீடியா இன்புளுயன்சர்கள் போடும் பதிவுகள் படத்தின் வசூலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மக்கள் ஒரு படத்திற்கு போக வேண்டுமா வேண்டாமா என்பதை சோசியல் மீடியா இன்புளுயன்சர்கள் தீர்மானிக்கிறார்கள். அதேபோல் பொதுமக்கள் எப்படி சமூக வலைதளங்களில் படங்களை பற்றி கருத்து தெரிவிக்கிறார்கள். ஊடகங்களில் விமர்சனங்கள் எப்படி வந்துள்ளன. ஆன்லைன் சினிமா தளங்கள் படங்களை எப்படி விமர்சிக்கின்றன என்பதையும் பார்க்கிறார்கள். எல்லாவற்றையும் பார்த்துவிட்டே குடும்பமாகவோ அல்லது தனியாகவோ படத்திற்குபோகிறார்கள்.
முன்பெல்லாம் நண்பர்களிடம் படம் எப்படி இருக்கிறது என்று கேட்டார்கள். இப்போது சோசியல் மீடியாக்களில் வந்து பார்த்துவிட்டு முடிவெடுக்கிறார்கள். அந்த வகையில் கேப்டன் மில்லன், அயலான் மட்டுமல்ல.. யாரும் படம் ஓடினாலும் ஹீரோ இங்க சோசியல் மீடியா இன்புளுயன்சர்கள் தான் என்று சொன்னால் நிச்சயம் மிகையாகாது.. அதேநேரம் நல்ல படத்தை நன்றாக இல்லை விமர்சனம் செய்வதும், நல்லா இல்லாத படத்தை நல்ல படம் என்றும் விமர்சித்து மக்களின் கவனத்தை திசை திருப்ப முடியும் என்பதும் உண்மை..












Click it and Unblock the Notifications