Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா மட்டுமல்ல. இந்தியாவில் புதிதாக அச்சுறுத்தும் இரட்டை தொற்று.. மழையால் பெரும் சவால்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்பு கொரோனா மட்டுமே பெரும் பிரச்சனையாக இருந்தது. ஆனால் இப்போது டெங்கு, மலேரியா மற்றும் எலிக்காய்யச்சலுடன் கொரோனா பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பருவ மழை காலம் என்பதால் கொரோனா உடன் பருவ காய்ச்சல்களும் சேர்ந்து வருகிறது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

காய்ச்சல் வந்தாலோ கொரோனா.. தொண்டை லேசாக கரகரவென இருந்தால் கொரோனா இருக்கலாம் என நினைத்து உடனே பரிசோதிக்க ஓடிய மக்கள் மிக அதிகம். கொரோனா அந்த அளவிற்கு மக்களை பாடுபடுத்தியது.

ஆனால் இப்போது கொரோனா சாதாரண விஷயமாக மக்களால் பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்று இந்தியாவில் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் பருவகால தொற்று பாதிப்பும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

கொரோனாவுடன் மலேரியா

கொரோனாவுடன் மலேரியா

சிலருக்கு டெங்கு, மலேரியா, எலி காய்ச்சலுடன் சேர்ந்தும் கொரோனாவும் வந்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. டெல்லியில் ஒரு மருத்துவமனையில் 30 வயது மலேரியா நோயாளிக்கு, பரிசோதனையில் டெங்குவும், கொரோனாவும் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், கொசு அதிகம் உள்ள பகுதிகளில் டெங்கு, மலேரியா வருவது இயல்பு. எனவே து காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அப்படி பரிசோதனை செய்யும்போதுதான், அந்த இளைஞருக்கு டெங்கு, மலேரியாவுடன் கொரோனாவும் இருப்பது உறுதியாகி உள்ளது.

இளம் வயதில் உயிரிழப்பு

இளம் வயதில் உயிரிழப்பு

அந்த நோயாளிக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அல்லது உடல் உறுப்பு பாதிப்புகள் இல்லை. ஆனாலும். ஒரே நேரத்தில் கொரோனா, டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் தாக்கியதால், தீவிர சிகிச்சை அளித்தும் இளம் வயதிலேயே அவர் இறந்து விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதேபோல் மற்றொரு மருத்துவமனையில் 14 வயது சிறுவனுக்கு பரிசோதனை செய்தபோது, டெங்குவும், கொரோனாவும் இருப்பது தெரியவந்தது.. கொரோனா அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்கு டெங்கு, மலேரியா மற்றும் எலிக்காய்ச்சல் உள்ளதா என கவனம் செலுத்தி வருகிறார்கள் மருத்துவர்கள்.

மழைக்காலத்தில் பரவும்

மழைக்காலத்தில் பரவும்

இந்தியாவில் டெங்கு காய்ச்சல் ஜூலை மாதத்தில் துவங்கி, அக்டோபரில் உச்சம் அடையும். நவம்பர், டிசம்பரில் குறைந்துவிடும்.. மத்திய அரசு புள்ளி விவரங்களின்படி, கடந்த 2015ம் ஆண்டில் டெங்குவால் 99,913 பேர் பாதிக்கப்பட்டார்கள். இதில் 220 பேர் இறந்துள்ளனர். கடந்த ஆண்டில் 1,57,315 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 166 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டில் கடந்த ஜூலை மாதம் வரை 12,078 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 8 பேர் இறந்ததாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மலேரியா அதிகம்

மலேரியா அதிகம்

இந்த சூழலில் தான் சமீபத்திய ஆய்வில், மலேரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 44 சதவீதம் பேருக்கு டெங்குவும் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எனவே . கொரோனா ஒரு பக்கம் பாதிக்கும் என்றால் மலேரியா, டெங்கு உள்ளிட்டவையும் மக்களை பாதிக்க தொடங்கி உள்ளது.. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த போராடி வரும் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு புதிய சவாலை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+