ஆசை ஆசையா இருந்ததே பாஜக.. இப்படி ஆப்பு வச்சிட்டாரே விஜய்! திமுகவை விடுங்க.. பாஜகவிற்கு தான் சிக்கல்
சென்னை: தமிழ்நாட்டில் திமுகவின் வீழ்ச்சிக்கு விஜய் வழிகாட்டியாக இருப்பார் என்று பாஜகவினர் பலர் இணையத்தில் கருத்து தெரிவித்து வந்தனர். விஜய்யின் அரசியல் வருகையையும் கூட அவர்கள் ஆதரித்து வந்தனர்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை பாஜகவினர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாஜக ஆதரிக்க பல காரணங்கள் இருந்தன. சமீபத்தில் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் பிறந்தநாள் கொண்டாடினார். இதற்கு வாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றி அறிக்கை வெளியிட்ட விஜய், எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இதில் அண்ணாமலைக்கு எல்லாம் நன்றி சொன்ன விஜய் திமுகவிற்கு சொல்லவில்லை.

திமுக எதிர்ப்பு: தன்னுடைய அரசியல் ஸ்டாலின் அல்லது திமுகவிற்கு எதிரானது என்பதை விஜய் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் என்கிறார்கள். அதாவது திமுகதான் விஜய்க்கு வாழ்த்து சொல்லவில்லை. அதேபோல் திமுகவினர் பெயரை விஜய் தனது அறிக்கையில் கூறவில்லை.
இதன் மூலம் சைலண்ட்டாக தன்னுடைய மெசேஜை விஜய் இதன் மூலம் சொல்லிவிட்டார். யாரை எதிர்த்து தன்னுடைய அரசியல் என்று விஜய் சொல்லாமல் சொல்லிவிட்டார், என்று அக்கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
காட்டம்: ஏற்கனவே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கருத்து தெரிவித்து இருந்தார். முதல்முறையாக வாழ்த்து சொல்வதை நிறுத்திவிட்டு.. கோபமாக விஜய் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
கடந்த மாணவர்கள் மீட்டில் கூட விஜய் போதை பொருள் விவகாரத்தை குறிப்பிட்டு பேசினார். இப்படி விஜய் தொடர்ந்து திமுகவிற்கு எதிராக பேசினார். இதனால் தமிழ்நாட்டில் திமுகவின் வீழ்ச்சிக்கு விஜய் வழிகாட்டியாக இருப்பார் என்று பாஜகவினர் பலர் இணையத்தில் கருத்து தெரிவித்து வந்தனர். விஜய்யின் அரசியல் வருகையையும் கூட அவர்கள் ஆதரித்து வந்தனர்.
பாஜக ஒரு காலத்தில் எம்ஜிஆரை கொண்டாடியது. காரணம் திமுகவின் வீழ்ச்சி. அதேபோல் ரஜினியின் அரசியல் வருகையை பாஜக கொண்டாடியது. அவருக்கு பின் பாஜக இருப்பதாக கூட கூறப்பட்டது. ஆனால் ரஜினி அரசியலுக்கு வரவில்லை.
விஜய் எதிர்ப்பு: இப்படி இருக்க விஜய்யின் அரசியல் வருகை திமுகவிற்கு முடிவுரை எழுதும் என்று பாஜகவினர் பலர் விவாதங்களை மேற்கொண்டனர். ஆனால் அதே விஜய் தற்போது நேரடியாக பாஜகவின் அடிப்படை கொள்கையையே எதிர்த்து உள்ளார். பாஜக உறுதியாக இருக்கும் நீட் விவகாரத்தில் கடுமையான கருத்துக்களை விஜய் வைத்துள்ளார்.
தொடர்ந்து நடந்துவரும் குளறுபடிகளால் நீட் தேர்வு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். இனி நாடு முழுவதும் நீட் தேர்வு தேவை இல்லை என்பதுதான் இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம். நீட் விலக்குதான் இதற்கு உடனடி தீர்வு.
சிறப்பு பொதுப்பட்டியலை உருவாக்கி கல்வி, சுகாதாரத்தைத் மாநில பட்டியலில் கொண்டுவர வேண்டும், கல்வி, சுகாதாரத்தில் மாநில அரசுகளுக்கு முழு உரிமை வழங்கப்பட வேண்டும். மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு NCERT முறையில் தேர்வு வைத்தால் எப்படிச் சரியாக இருக்கும்?
தொடர்ந்து நடந்துவரும் குளறுபடிகளில் நீட் தேர்வு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். நாடு முழுவதும் நீட் தேர்வு தேவை இல்லை என்பதுதான் இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது.
நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது. 'ஒரே நாடு ஒரே பாடம் ஒரே கல்வி' என்பது கல்வி கற்கும் நோக்கத்துக்கு எதிரானது, என்று விஜய் பாஜக அரசியலுக்கு எதிராக பேசி உள்ளார்.
இதன் மூலம் தான் திமுகவை மட்டும் எதிர்க்க போவது இல்லை.. இனி பாஜகவையும் எதிர்க்க போகிறேன் என்பதை வெளிப்படையாக விஜய் அடித்து சொல்லி உள்ளார்.
-
அம்மா கொடுத்த அனுமதி.. ரஜினியை போல் விஜய்யும் எனக்கு நெருக்கம்.. ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை! -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு அப்போ பவரே இல்லையா.. வழக்கு போட முடியாது! விசாரிக்கவும் முடியாதாம்! -
“சாக்கு போக்கு சொல்லக்கூடாது”.. விஜய் பிறந்தநாளையொட்டி தவெக தொண்டர்களுக்கு அமைச்சர் ஆனந்த் அட்வைஸ்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன? -
நேர்மையாக செயல்படுங்கள்.. இல்லைன்னா தொலைச்சிடுவேன்! நகராட்சி அதிகாரிகளுக்கு விஜய் எச்சரிக்கை -
யாரு ஹீரோ? விஜய் Vs உதய்! பட்ஜெட் கூட்டத்தில் பட்டைய கிளப்புவது யார்? பரபரப்பாய் ரெடியாகும் லிஸ்ட்! -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
திமுக எதிர்த்த VB-GRAM திட்டத்தை.. அமல்படுத்தும் விஜய் அரசு! தமிழகத்துக்கு ₹5,000 கோடி கூடுதல் சுமை












Click it and Unblock the Notifications