சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீங்க மட்டும் தான் பண்ணுவீங்களா.. நாங்களும் பண்ணுவோமே.. இறங்கி அடிக்கும் அமமுக!

Google Oneindia Tamil News

திமுகவும், அதிமுகவும் மாறி மாறி விளம்பரங்கள் செய்து வரும் நிலையில் அமமுகவும் விளம்பர படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. தொழில், கல்வி, விவசாயம் உள்ளிட்ட அம்சங்களை முன்வைத்து விளம்பரங்களை அமமுக வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக-பாஜக-பாமக மற்றும் சில கட்சிகள் இணைந்து ஒரு அணியாகவும், திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட சில கட்சிகள் இணைந்து ஒரு அணியாகவும் சந்திக்கின்றன

இதேபோல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சமக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஒரு அணியும், டிடிவி தினகரனின் அமமுக, விஜயகாந்தின் தேமுதிக, எஸ்டிபிஐ மற்றும் சில கட்சிகள் இணைந்து ஒரு அணியாகவும் தேர்தலை சந்திக்கின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி தனியாக தேர்தலை சந்திக்கிறது. ஐந்து முனை போட்டி நிலவுவதால் யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

வெற்றி நடை போடும்

வெற்றி நடை போடும்

இந்நிலையில் அதிமுக சார்பில் வெற்றி நடை போடும் தமிழகமே என்ற விளம்பரமும், அதிமுக அரசின் சாதனைகளை சொல்லி ஒரு விளம்பரமும், திமுகவை விமர்சித்து ஒரு விளம்பரமும் ஓடிக்கொண்டிருக்கிறது. இததவிர அதிமுகவின் வாக்குறுதிகளை முன்வைத்து பல விளம்பரங்களை அதிமுகவினர் சமூக வலைதளங்களிலும், பத்திரிக்கைகள் மற்றும் ஆன்லைன் ஊடகங்களில் செய்து வருகிறார்கள்.

திமுக விளம்பரம்

திமுக விளம்பரம்

அதேநேரம் திமுகவோ ஸ்டாலின் தான் வர்றாரு, விடியல் தரப்போறாரு என்று விளம்பரம் செய்து வருகிறத. இதுதவிர திமுக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நல்லது நடக்கும் என்று கூறி விளம்பரங்களும், அதிமுகவை விமர்சித்து விளம்பரங்களும் வெளியாகி வருகின்றன. மேலும் அதிமுகவின் வெற்றி பாஜகவின் வெற்றி என்றுகூறியும், பாஜக வந்தால் பெரிய பிரச்சனை வரும் என்று கூறியும் திமுக சமூக வலைதளங்களில் தீவிரமாக விளம்பரம் செய்து வருகிறது.

டிடிவி தினகரன் விளரம்பரம்

டிடிவி தினகரன் விளரம்பரம்

இந்நிலையில் பிரதான கட்சிகளாக அதிமுக, திமுக இரண்டுமே சமூக வலைதளங்களில் விளம்பரம், கருத்து மோதல்களில் பிஸியாக இருக்கும் நிலையில், இவர்களுக்கு போட்டியாக அமமுகவும் விளம்பரங்களை எடுத்து வெளியிட்டு வருகிறது. அமமுக ஆட்சிக்கு வந்தால் 60 நாளில் தொழில் தொடங்க அனுமதி அளிக்கப்படும் என்ற வாக்குறுதியை முன்வைத்து விளம்பரம் ஒன்று வருகிறது.

வேகமாக பரவி வருகிறது

வேகமாக பரவி வருகிறது

இதேபோல் டிடிவி தினகரனை முன்னிலைப்படுத்தி ஒரு விளம்பரம், மாணவிகளுக்கு நாப்கின் வழங்கப்படுவது குறித்து ஒரு விளம்பரம், குக்கர் சின்னத்திற்கு ஒரு விளம்பரம், பெண்களை குறிவைத்து ஒரு விளம்பரம் என அடுத்தடுத்து விளம்பரங்களை வெளியிட்டுள்ளது அமமுக. இந்த விளம்பரங்களை எல்லாம் சமுக வலைதளங்களில் அமமுகவினர் பரபரப்பி வருகிறார்கள்.

English summary
Not only DMK and AIADMK, ammk also publish video advertisements in social media for assembly election 2021. Ammk publishes advertisements on business, education and agriculture.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X