பெண்கள் மட்டுமல்ல.. LQBTQ பிரிவினரையும் ஏமாற்றிய விக்ரமன்.. கிருபா ஷாக் குற்றச்சாட்டு.. என்ன நடந்தது?
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த விக்ரமன் 15 பெண்களை ஏமாற்றியது மட்டுமின்றி LQBTQ பிரிவை சேர்ந்த Queer பிரிவு ஆண்களையும் ஏமாற்றியதாக கிருபா என்ற பெண் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
LQBTQ பிரிவில் Queer பிரிவை சேர்ந்தவர்கள் என்பவர்கள் தங்கள் பாலினத்தை வெளிப்படுத்தாதவர்கள் ஆவர். அதாவது தங்களை ஆண்களாகவோ, பெண்களாகவோ அல்லது மாற்று பாலினத்தவர்களாகவோ அடையாளப்படுத்தாதவர்கள் ஆவர். இவர்களை தமிழில் புதுமர் பாலினத்தவர் ஆவர்.

பிறப்பில் ஆண், பெண்ணாக இருக்கும் யாரும் தங்களை புதுமர் பிரிவாக உணர்ந்தால் தங்களை புதுமர் என்று அடையாளப்படுத்திக்கொள்ள முடியும். அந்த வகையில் இப்படிப்பட்ட புதுமர் பிரிவை சேர்ந்த ஆண் ஒருவரைத்தான் விசிக விக்ரமன் ஏமாற்றியதாக கிருபா என்ற பெண் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் விக்ரமன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அதற்கு முன் பல்வேறு சேனல்களில் பணியாற்றி இருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் வளர்ந்து வரும் இளம் தலைவராக பார்க்கப்படுகிறார்.
இவர் மீது கிருபா முனுசாமி என்ற பெண் சில நாட்களுக்கு முன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார். தன்னை காதலித்து ஏமாற்றியதாகவும், பல பெண்களை ஏமாற்றி உள்ளதாகவும் கூறினார் . நேற்று இதே குற்றச்சாட்டுகளை மீண்டும் வைத்த கிருபா பல பெண்களிடம் காசு வாங்கி இவர் ஏமாற்றி உள்ளதாகவும் கூறினார்.

அவர் செய்துள்ள போஸ்டில், விக்ரமன் தன்னுடைய முன்னாள் காதலிகள் என்று கூறிய 15க்கும் மேற்பட்டோரிடம் பேசினேன்.
அதில்தான் விக்ரமன் பலரையும் ஏமாற்றியது எனக்கு தெரிந்தது. அவர்களில் பலருக்கு தற்போது திருமணம் ஆகிவிட்டது. அதேபோல் சில queer ஆண்களை கூட இவர் ஏமாற்றி உள்ளார். ஆண்களாக இருந்து தனது பாலினத்தை வெளிப்படுத்தாத queer ஆண்களை கூட இவர் ஏமாற்றி உள்ளார். இதனால் விக்ரமன் மீது நான் புகார் கொடுக்க போவதாக கூறினேன். இதையடுத்து உனக்கு சின்ன ஆட்களை மட்டுமே தெரியும். ஆனால் எனக்கு அரசியல் ரீதியாக பெரிய குழு உள்ளது என்று கூறி என்னை மிரட்டினார்.
அதோடு விசிக திருமாவளவன் ஆதரவையும் கேட்டார். இதனால் நான் அவருக்கு எதிராக 20 பக்க புகாரை கட்சியிடம் கொடுத்தேன். இதையடுத்து தொடக்க விசாரணை மற்றும் முதன்மை சாட்சியத்தின் அடிப்படையில் கட்சித் தலைவர் திருமா 2 வெளி உறுப்பினர்களைக் கொண்ட 5 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரிக்க சொன்னார். 20 நாட்களுக்குள் விசாரித்து அதன் அறிக்கையை சமர்ப்பிக்க சொன்னார். காதலித்து ஏமாற்றுவது, முறைகேடு, நிதி மோசடி ஆகியவற்றை நிரூபிக்கும் ஆவண ஆதாரங்கள், 8 சாட்சி ஆதாரங்களை இதில் நான் சமர்ப்பித்தேன்.

இந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க 40 நாட்கள் எடுத்துக் கொண்டது. ஒரு மாதமாகியும், அறிக்கையின் நகல் எனக்கு வழங்கப்படவில்லை. நான் ஒரு மாதமாக இடைவிடாமல் முயற்சி செய்து வருகிறேன். குழு உறுப்பினர்கள் என்னிடம் அறிக்கையை கொடுக்கவில்லை . அலுவலகப் பணியாளர்கள் அதைப் பற்றி பேச பயப்படுகிறார்கள், அந்த அறிக்கையைப் பகிர்ந்து கொள்ள பயப்படுகிறார்கள்.
விக்ரமனுக்கு எதிரான புகார்கள் உண்மையானது என்று அந்த அறிக்கை வந்ததாக கேள்விப்பட்டேன். அதோடு அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டதாக தெரிகிறது. அதனால்தான் திருமா என்னிடம் அந்த அறிக்கையை காட்டாமல் இருக்கிறாரா? என்னை பல்வேறு வகைகளில் அவர் ஏமாற்றி உள்ளார். அவர் ஐபோன், ஆப்பிள் வாட்ச், ஏர்போட்கள் என்று வாங்கியவை எல்லாம் என்னிடமிருந்து சுரண்டப்பட்டவை. அவர் ஒரு யூடியூப் சேனலை நடத்த போவதாக கூறி ஆப்பிள் லேப்டாப்பை வாங்கும்படி என்னை சித்திரவதை செய்தார். ஆனால் அதை தொடங்க கூட இல்லை அவர் தனக்குச் சொந்தமான காருக்கான டவுன்பேமென்ட் & EMIகளை என்னிடம் இருந்து கட்டாயப்படுத்தி வாங்கினார், என்று அந்த பெண் தனது புகாரில் கூறி உள்ளார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications