“அடடே..! வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு சூப்பரான செய்தி” - பேரவையில் அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!
சென்னை: வெளிநாடு வாழ் தமிழர்கள் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
Recommended Video
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது.
தற்போது வெளிநாடுகளில் வசித்தாலும், வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளவர்கள் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டும் என தொடர்ச்சியாக கோரப்பட்டு வருகிறது.

என்.ஆர்.ஐ வாக்குரிமை
இந்தியாவில் ஒவ்வொரு பொதுத்தேர்தல் நடக்கும்போதும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டும் எனும் கோரிக்கை வலுப்பெறுவது வழக்கம். தமிழகத்தில் கடந்தாண்டு நடந்து முடிந்த சட்டப்பேரவையின்போதும் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையில் தீவிரம் காட்டவில்லை.

தபால் வாக்கு
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தபால் வாக்குரிமையை வழங்க இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.
பாதுகாப்புப் படை வீரர்களுக்காக மின்னணு தபால் வாக்குரிமை திட்டம் வெற்றிகரமாக அமல் செய்யப்பட்டிருக்கிறது. இதே திட்டத்தை வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நீட்டிப்பது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது தேர்தல் ஆணையர் பேசியிருந்தார்.

தேர்தல் ஆணையத்திடம் பெறப்படுமா?
இந்நிலையில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியன், "வெளிநாடு வாழ் தமிழர்கள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க ஒரு தெளிவான வரையறையை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெறுவதற்கு துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா" எனக் கேள்வி எழுப்பினார்.

நடவடிக்கை எடுக்கப்படும்
அதற்கு பதிலளித்த வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், "கொரோனா காலத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீடுகளில் இருந்தே வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு இருக்கும் இடத்தில் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனவே வெளிநாடு வாழ் தமிழர்கள் வாக்குகளிக்கும் உரிமை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற துறை சார்பில் முதல்வரிடம் கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும்" என பதில் அளித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications