பாகிஸ்தான் நம்மை தாக்கியதா? ஒரெயொரு போட்டோ காட்டுங்க? சென்னையில் சவால் விட்ட அஜித் தோவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஐஐடியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ‛‛இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக கூறும் வெளிநாட்டு ஊடகங்கள், சேதமடைந்த பகுதிகளின் ஒரு போட்டோவை காட்ட முடியுமா?'' என்று நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சவால் விடுத்தார்.

சென்னை ஐஐடியில் 62வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இதில் நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பாகிஸ்தானுக்கு எதிராக துல்லியமாக தாக்குதல் நடத்திய ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி விளக்கம் அளித்தார்.

nsa-ajit-doval-slams-foreign-media-over-false-reporting-on-operation-sindoor-and-seeks-proof-of-dama

அதேவேளையில் பாகிஸ்தான் தாக்குதலில் நம் நாடு பாதிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்ட வெளிநாட்டு ஊடகங்களுக்கு மேடையில் வைத்தே சவால் விடுத்தார். இதுதொடர்பாக அஜித் தோவல் பேசியதாவது:

‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து துல்லியமாக தாக்கினோம். வேறு எந்த இடத்தையும் நாம் தாக்கவில்லை. பாகிஸ்தானில் யார் யார் எங்கே இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து இந்த தாக்குதல் துல்லியமாக நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கை அனைத்தும் வெறும் 23 நிமிடங்களில் முடிந்துவிட்டது.

நள்ளிரவு 1.05 மணிக்கு தொடங்கிய ஆபரேஷன் நடவடிக்கை நள்ளிரவு 1.28 மணிக்குள் முடிவடைந்தது. அதன்பிறகு, வெளிநாட்டு பத்திரிகைகளில் நிறைய விஷயங்கள் கூறப்பட்டன. பாகிஸ்தான் அதைச் செய்தது. இதை செய்தது என்று செய்திகள் வெளியிட்டன. ஒரு புகைப்படம், ஒரெயாரு புகைப்படம் இந்திய சேதத்தை காட்டும் வகையில் இடம்பெறவில்லை.

இந்திய உள்கட்டமைப்புக்கு எந்த சேதம் அல்லது ஏதாவது ஒரு கண்ணாடி உடைந்துள்ளது என ஒரு புகைப்படத்தையாவது காட்ட முடிந்ததா? இப்போது தான் சேட்டிலைட் வசதிகள் உள்ளதே. ஒரெயாரு போட்டோவை காட்டுங்கள். நியூயார்க் டைம்ஸ் போன்ற வெளிநாட்டு ஊடகங்கள், மே 10ம் தேதிக்கு முன்பு முன்பும், பின்பும் எடுக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானத் தளங்களின் புகைப்படங்களை காட்டின. பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்கும் திறன் நமக்கு உள்ளது’’ என்றார்.

இதன்மூலம் பாகிஸ்தான் இந்தியாவை தாக்கியதாக செய்தி வெளியிட்ட வெளிநாட்டு ஊடகங்களுக்கு சவால் விடுத்தார். மேலும் அவர் தொடர்ந்து பேசும்போது, ‛‛ஆபரேஷன் சிந்தூரில் உள்நாட்டு தயாரிப்பு ஆயுதங்களின் பங்களிப்பு பெருமையளிக்கிறது. நாம் நமது உள்நாட்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்.

இங்கு ஆபரேஷன் சிந்தூரை குறிப்பிட வேண்டும். நம் நாட்டின் தயாரிப்புகள் மிகச்சிறப்பாக பணியை செய்தன. பிரம்மோஸ் ஏவுகணையாக இருந்தாலும் சரி, அது நமது ஒருங்கிணைந்த விமான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பாக இருந்தாலும் சரி. அதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்.

இந்தியா ஒரு நாடாக பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. அது ஒரு அரசாக புதியதாக இருக்கலாம். இன்னும் 22 ஆண்டுகள் கடந்தால் நாம் சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை நிறைவு செய்யப் போகிறோம். அப்போது நீங்கள் உங்கள் தொழில் வாழ்க்கையின் உச்சத்தில் இருப்பீர்கள்.

சீனர்கள் 5G-ஐ உருவாக்க 12 ஆண்டுகள் எடுத்துக்கொண்டு சுமார் 300 பில்லியன் டாலர்களை செலவிட்டனர். நம்மிடம் அவ்வளவு நேரமோ பணமோ இல்லை. நாம் யார் பக்கம் திரும்பினோம். அதனால்தான் (ஐஐடி மெட்ராஸ் இயக்குனர்) பேராசிரியர் வி. காமகோடிக்கு நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன் என்று சொன்னேன்.

நம்பகமான ஆதாரங்களை நாங்கள் விரும்பினோம். தனியார் துறையுடன் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்க நாங்கள் விரும்பினோம். சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குள் இது சாத்தியமாகிவிட்டது. இதில் நிறையபேர் பங்களிப்பு செய்துள்ளனர்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+