சமாதிக்கு மட்டும் ரூ.100 கோடி இருக்கு! ஆனா ஆசிரியர்களுக்கு ஊதியம் தர நிதி இல்லையா! சீமான் தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைநகர் சென்னையில் ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆளும் திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடி பேசினார்.

தலைநகர் சென்னையில் இப்போது ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த உண்ணா விரத போராட்டத்தில் பல ஆசிரியர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையிலும் அட்மிட் செய்யப்பட்டுள்ளனர்.

 NTK Chief Seeman attacks DMK govt on teacher protest issue

இதற்கிடையே இன்றைய தினம் தான் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், பிரச்சினை முடியும் வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

சீமான்: இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆசிரியர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் ஆசிரியர்களுக்கு ஆதரவாகக் களத்திற்கு வந்துள்ளேன். இதன் காரணமாகவே இப்போது அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளார்.. இந்த தொடர் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் இப்போது மூன்று வாக்குறுதிகளை வலியுறுத்தி சென்னையிலேயே மூன்று இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பகுதிநேர ஊழியர்களை நிரந்தரமாக வேண்டும் என்று போராட்டம். அடுத்துப் பணி வாய்ப்பு வேண்டி ஒரு பக்கம் போராட்டம். மற்றொரு இடத்தில் சம வேலைக்குச் சம ஊதியம் எனப் போராட்டம் நடத்துகிறார்கள். இது தற்போதைய கோரிக்கை இல்லை. இவர்கள் பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.. கருணாநிதி, ஜெயலலிதா ஓபிஎஸ், எடப்பாடி எனத் தொடர்ந்து போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் தீர்வு இல்லை.

ஆதரவு: தாய் தந்தைக்குப் பிறகு தெய்வத்திற்கு முன்பு ஆசிரியர்கள்தான் உள்ளனர். அடுத்த தலைமுறைக்கு அறிவை போதிக்கும் ஆசிரியர் பெருமக்களை இப்படி வீதியில் இறங்கிப் போராடும் அளவுக்குத் தள்ளியுள்ளது மிகப் பெரிய கொடுமை. மற்ற போராட்டங்களைப் போல இதைப் பார்க்கக் கூடாது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் முதல்வருக்கு நான் கோரிக்கை வைக்கிறேன்

சீமான் பெரியப்பா ஏன் இப்படி பண்ணிட்டாரு.. கேட்கும் என் மகனிடம் என்ன சொல்வேன்? வெற்றிக்குமரன் பரபர
இவர்கள் 12 ஆண்டுகளாகப் போராட்டம் நடத்துகிறார்கள். எனது அக்கா, தங்கை யாராவது மாதம் 1000 ரூபாய் வேண்டும் எனக் கேட்டார்களா.. கல்லூரியில் படிக்கும் தங்கைகள் யாராவது மாதம் 1000 ரூபாய் கேட்டார்களா.. இல்லையே. ஆனால், அங்கே மாதம் ரூ.1000 தருகிறார்கள்.. போராட்டம் நடத்துவோரின் கோரிக்கையை நிறைவேற்றுவதில்லை. செவிலியர்கள் விவகாரத்தில் இப்படி தான். கொரோனா காலத்தில் பணியமர்த்தினார்கள். இப்போது வேண்டாம் என அவர்களை நீக்குவது எந்த விதத்தில் நியாயம்.

கடும் தாக்கு: இதற்குக் கேட்டால் நிதி சிக்கல் என்கிறார்கள்.. கடலில் சமாதி கட்ட உங்களிடம் 100 கோடி ரூபாய் இருக்கிறது.. மதுரை நூலகத்தைக் கட்ட 250 கோடி ரூபாய் இருக்கா. அதெல்லாம் யாருடைய நிதி.. மாதம் 1000 ரூபாய் தருகிறார்களா.. அதை எங்கு இருந்து எடுத்தார்கள். அடுத்துத் தேர்தல் வருகிறது. அதற்கும் செலவழிக்கப் போகிறார்கள்.. அந்த நிதி எங்கிருந்து வந்ததது.

முதல்வர் ஸ்டாலின் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. அவர்கள் வாக்குறுதியாகச் சொல்வதை எதையும் நிறைவேற்றுவதில்லை.. சொல்லாதவற்றைத் தான் செய்து வருகிறார்கள். மின் கட்டணம், சொத்து வரி என அனைத்தையும் உயர்த்துகிறார்கள். இதே ஸ்டாலின் தேர்தல் வரும் முன்பு, நான் ஆட்சிக்கு வந்தால் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று ஆசிரியர்களிடம் வாக்குறுதி அளித்திருந்தார். அது என்ன போது.

வாக்கை வாங்கும் போது கொடுக்கும் வாக்குறுதி... வென்ற பிறகு அதை அவர்கள் நிறைவேற்றுவதில்லை. மற்ற திட்டங்களுக்கு எல்லாம் நிதி இருக்கிறது. ஆனால், தங்கள் வாழ்வாதாரத்துக்காகப் போராடும் ஆசிரியர்களுக்கு ஊதியம் தர உங்களிடம் நிதி இல்லையா?" என்று சீமான் காட்டமான கருத்துகளைத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+