தம்பி விஜய்க்காக ஓடோடி வந்து வாழ்த்துச் சொன்ன சீமான்.. இப்பவே அஸ்திவாரம் போட்டுட்டாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கும், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தவெக தொண்டர்களுக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய்யை அரசியல் களத்திற்கு ஆரம்பம் முதலே வரவேற்று வரும் சீமான், 2026 சட்டசபை தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதனால் இன்று முதல் பதிவு செய்யப்பட்ட கட்சியாக மாறியுள்ளது தவெக. இந்த அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தவெக தொண்டர்கள் இதனை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

vijay tvk seeman

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ள நிலையில், முதல் மாநில மாநாட்டுக்குத் தமிழக காவல்துறையும் நிபந்தனைகளுடன் அனுமதி தந்திருக்கிறது. இதனால், தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் படு உற்சாகத்தில் இருக்கிறார்கள். இந்த மாதம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற இருக்கிறது.

விஜய் இன்று வெளியிட்ட அறிக்கையில், தவெகவை அரசியல் கட்சியாக பதிவு செய்து, தேர்தல் அரசியலில் பங்குபெற தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது எனவும், திசைகளை வெல்வதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு திறந்துள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும், தடைகளை தகர்த்தெறிந்து தமிழக மக்களுக்கான அரசியல் கட்சியாக வலம் வருவோம் என்றும் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை அதிகாரப்பூர்வமான அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கும் நோக்கில், என் ஆருயிர் இளவல், அன்புத்தளபதி விஜய் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்தமையை இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டிருக்கிற செய்தியறிந்து பெருமகிழ்ச்சியடைகிறேன்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத் தம்பி விஜய் அவர்களுக்கும், அதன் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரர் புஸ்ஸி ஆனந்த் அவர்களுக்கும், ஏனைய நிர்வாகிகள் அனைவருக்கும் என் அன்பினையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

விஜய்யின் அரசியல் வருகை குறித்தும், அவருடன் கூட்டணி வைப்பீர்களா? எனக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் சீமான் நேர்மறையான பதில்களையே தெரிவித்திருந்தார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடக்கும் மாநாட்டுக்கு அழைப்பு வந்தால் நிச்சயம் செல்வேன். 2026-ல் விஜய்யுடன் ஒன்று சேர வாய்ப்பு அமையுமானால் அதற்காக காத்திருக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார் சீமான்.

தொடர்ந்து, சீமான், விஜய்யை என் தம்பி என்று குறிப்பிட்டு பேசி வருகிறார். அரசியல் கட்சி ஆரம்பித்தது முதலே விஜய்யை முதல் ஆளாக வரவேற்று கருத்து தெரிவித்து வருகிறார். 2026 சட்டசபை தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தான், விஜய்யின் கட்சி தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளதற்கும் முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்து உள்ளார் சீமான்.

vijay tvk seeman
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+