மரங்களுக்கு முத்தம் கொடுத்த சீமான்.. திருத்தணி அருகே வரும் 30 ஆம் தேதி மரங்களின் மாநாடு!
சென்னை: திருத்தணி அருகே மரங்களின் மாநாடு நடைபெற உள்ள இடத்தை பார்வையிடச் சென்ற போது மரங்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக, "மரங்களோடு பேசுவோம்! மரங்களுக்காகப் பேசுவோம்!" என்ற தலைப்பில், வருகின்ற ஆகஸ்ட் 30 அன்று திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் மரங்களின் மாநாடு நடைபெற உள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஜூலை 10 ஆம் தேதி அன்று "மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை" என்ற தலைப்பில் ஆடு மாடுகள் மாநாடு நடத்தினார். இந்த மாநாட்டில் கால்நடைகளின் மேய்ச்சல் உரிமை, இயற்கை விவசாயம், மற்றும் நவீன வேளாண்மையால் உள்ளூர் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசியிருந்தார்.
அதற்கு முன்னதாக, பனையேறும் தொழிலாளர்களுக்காக, கள் மீதான தடையை நீக்க கோரி பனை மரத்தில் ஏறி, கள் இறக்கும் போராட்டத்தை நடத்தினார். பின்னர் மேய்ச்சல் நிலத்தை ஆக்கிரமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தினார்.
ஆடு-மாடுகள் மாநாட்டைத் தொடர்ந்து, மரங்களின் மாநாடு நடத்த இருக்கிறார் சீமான். ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெற உள்ள இந்த மாநாட்டில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையேற்க உள்ளார். இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில், நடைபெற உள்ள மரங்களின் மாநாட்டுக்கான இடத்தை இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது மரங்களுடன் சீமான் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மரங்களுக்கு முத்தம் கொடுத்து, கட்டி அணைத்தார். அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் சீமான்.
மரங்கள் மாநாடு நடைபெறும் இடத்தைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சீமான், "உலகில் உயிர்வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் மரங்கள்தான் ஜீவாதாரம். மனிதர்களின்றி மரங்கள் உயிர் வாழும். ஆனால் மரங்கள் இல்லாமல், எந்த உயிரினமும் உயிர்வாழ முடியாது." என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications