திடீரென நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்த நாம் தமிழர் சீமான்.. டிரெண்டாகும் போட்டோ
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த்தை திடீரென சந்தித்துப் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்தும் இருவரும் ஆலோசித்தாக கூறப்படுகிறது. இது தொடர்பான போட்டோவும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தமிழ்நாட்டில் அடுத்த சட்டசபைத் தேர்தல் 2026ம் ஆண்டு தான் நடைபெற இருக்கிறது. ஆனால், இப்போது அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ஆளும் தரப்பில் மாநிலம் முழுக்க முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

சீமான்- ரஜினி சந்திப்பு: மறுபுறம் அதிமுகவும் திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசத் தொடங்கிவிட்டது. இதுபோக தமிழக அரசியலில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய்யும் தனது அரசியல் கட்சியின் பணிகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறார். இதனால் இப்போதே தமிழ்நாடு அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இதற்கிடையே இப்போது தமிழக அரசியலில் புயலைக் கிளப்பும் வகையில் முக்கிய சந்திப்பு நடந்துள்ளது.
சீமான் விமர்சனம்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவர் நடிகர்கள் அரசியலுக்கு வருவதைத் தொடர்ந்து எதிர்த்து வருபவர். குறிப்பாக ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த போது அதை மிகக் கடுமையாக எதிர்த்துப் பேசியவர். தமிழினத்தின் பெருமையும், வரலாறும் தெரியாதவர் எதற்காக எங்களை ஆள வேண்டும் என்று அப்போது கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், தமிழர் அல்லாதவர் இங்குத் தமிழ்நாட்டில் அரசியலுக்கு வரக்கூடாது என்றும் கூறியிருந்தார். ஓரிரு முறை மிகக் கடுமையான வார்த்தைகளைக் கொண்டும் அவர் விமர்சித்து இருந்தார்.
அதேநேரம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போவதில்லை என்று அறிவித்தவுடன், சீமான் தனது விமர்சனங்களை நிறுத்திக் கொண்டார். குறிப்பாக 2022 டிசம்பர் மாதம், ரஜினிகாந்த்தை அரசியல் ரீதியாக விமர்சித்த போது கடும் சொற்களைப் பயன்படுத்தியது காயப்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன் என்று கூட கூறியிருந்தார். ரஜினி அரசியலைக் கடுமையாக விமர்சித்த சீமான், அவர் அரசியலுக்கு வரவில்லை என்றவுடன் தனது நிலைப்பாட்டை மொத்தமாக மாற்றியிருந்தார்.
என்ன நடந்தது: இந்தச் சூழலில் சீமான் இப்போது திடீரென நடிகர் ரஜினிகாந்த்தைச் சந்தித்துப் பேசியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இருவரும் தமிழ் சினிமா குறித்தும் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் பேசியதாகக் கூறப்படுகிறது. தமிழக அரசியலில் விஜய் வருகையை இப்போது சீமான் கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரஜினிகாந்தை சீமான் சந்தித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த்தை சீமான் நேரடியாகச் சந்தித்துள்ளார். போயஸ் கார்டனில் இருக்கும் நடிகர் ரஜினி இல்லத்திற்குச் சென்ற சீமான், அவரை சந்தித்துப் பேசியிருக்கிறார். சுமார் 40 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை இந்தச் சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் சினிமா உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இருவரும் உரையாடியுள்ளனர். தமிழ்நாடு அரசியலில் இந்த சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-
என்னோட 4% வாக்கு வங்கியை 2% மாத்த இன்னொருத்தன் வந்துட்டானா.. அண்ணாமலையால் புலம்பும் சீமான்.. மீம்ஸ்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications