"கப் முக்கியம் பிகிலு!" உலக கோப்பை குறித்து சீமான் தந்த நறுக் பதில்.. அவரால சிரிக்காம இருக்க முடியல
சென்னை: இன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாகச் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பதில் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்க்கும் ஒரு தொடர் என்றால் அது கிரிக்கெட் உலகக் கோப்பை தான். இந்தாண்டு கடந்த அக்.5ஆம் தேதி உலகக் கோப்பை போட்டி தொடங்கிய நிலையில், இன்று இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றனர். இன்று பிற்பகல் இரண்டு மணிக்குப் போட்டி தொடங்கிய நிலையில், அது விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கிறது.
உலகக் கோப்பை: கடந்த 2011ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் நிலையில், அதற்கான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது என்றே சொல்லலாம். 2011இல் எப்படி நாம் உலகக் கோப்பையை வென்றோமோ.. அதேபோல மீண்டும் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே இந்தியர்களின் விருப்பமாக இருக்கிறது. இதற்குப் பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே உலகக் கோப்பை இறுதிப் போட்டி குறித்து நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பதில் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நேற்று சுதந்திரப் போராட்ட வீரர் வ.வு.சிதம்பரனாரின் நினைவு தினமாகும். இதற்காக வ.வு.சி திருவுருவப்படத்திற்கு சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சீமான்: அப்போது செய்தியாளர் ஒருவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நிலையில் அது குறித்துக் கேட்டார். அதற்குச் சீமான், "கப் முக்கியம் பிகிலு..!" என்று பிகில் படத்தின் டயலாக்கை அவர் சொல்லவே அருகில் இருந்தவர்கள் குபீரென சிரித்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் சீமானாலும் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் அவரும் கூட வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "நான் இப்போதெல்லாம் கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பதில்லை. முன்பு கிரிக்கெட் போட்டிகளை ரசித்துப் பார்ப்பேன். ஆனால், இப்போது கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பதில்லை. இப்போது அதில் ஈடுபாடு இருப்பதில்லை. எப்போது கோடிக் கணக்கில் வீரர்களை ஏலம் எடுக்கிறார்களோ.. அப்போதே விளையாட்டு முடிந்துவிட்டதாக அர்த்தம்.
சூதாட்டம்: வீரர்களுக்குக் கோடி கோடியாகக் கொடுத்து எப்போது ஏலம் எடுத்தார்களோ.. அப்போதே அது ஆன்லைன் ரம்மி போல ஒரு சூதாட்டமாகிவிட்டது. இது ரம்மியை விடப் பெரிய சூதாட்டம் அவ்வளவுதான்" என்று தெரிவித்தார். உலகக் கோப்பை குறித்த கேள்விக்கு விஜய் பட டயலாக்கை சீமான் சொன்னது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இந்த உலகக் கோப்பை தொடரைப் பொறுத்தவரை இந்தியா பலம்வாய்ந்த அணியாக இருக்கிறது. லீக் சுற்றில் டாப் இடம் பிடித்த இந்தியா, அரையிறுதியில் நியூசிலாந்தே வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு வந்தது. அதேநேரம் ஆஸ்திரேலியா லீக் சுற்றில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தாலும் அதன் பிறகு வலிமையான கம்பேக் கொடுத்தது. அவர்கள் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டியில் ஒவ்வொரு பாலும் அனல் பறக்கும் விதமாகவே சென்று கொண்டிருக்கிறது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications