திருவொற்றியூரில் சீமானுக்கு பலத்த அடி.. தலைசுற்ற வைக்கும் வாக்கு வித்தியாசம்!
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தோல்வியடைந்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை கிளைமேக்ஸ் நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. இதில், அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் திமுக, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்கிறார்.
அதேபோல், திமுக கூட்டணி கட்சிகளும் கணிசமான இடங்களில் சிறப்பான வெற்றிகளை பதிவு செய்து வருகின்றன. காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக என அனைத்து கூட்டணி கட்சிகளும் பல இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

முதல்வராகும் ஸ்டாலின்
தற்போது இரவு 9 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 159 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதர கட்சிகளில் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக ஆகிய மூன்றும் எந்த இடத்திலும் முன்னிலையில் இல்லை.

சீமான் தோல்வி
இந்த சூழலில், சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரும் தோல்வியை சந்தித்துள்ளார். இதில், திமுக வேட்பாளர் கே.பி.சங்கரைவிட 37,510 வாக்குகள் குறைவாக பெற்று சீமான் தோல்வி அடைந்துள்ளார்.

3வது இடம்
திருவொற்றியூர் தொகுதியில் காலை முதலே திமுக வேட்பாளர் சங்கர் தொடந்து முன்னிலை பெற்று வந்த நிலையில், அவர் வெற்றிப் பெற்றிருக்கிறார். அதிமுக வேட்பாளர் குப்பம் இந்த தொகுதியில் இரண்டாம் இடம் பிடித்தார். எனினும், நாம் தமிழர் கட்சியின் மற்ற வேட்பாளர்கள் 10,000க்கும் குறைவாக வாக்குகள் பெற்ற நிலையில், சீமான் இங்கு 35க்கும் அதிகமான வாக்குகளை கடந்தார்.

மூன்றாம் இடம்
ஒட்டுமொத்தமாக, தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி அல்மோஸ்ட் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவுகிறது. எனினும், பல இடங்களில் மூன்றாம் இடம் பிடித்துள்ளதால், தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுக்கும் நிலையில் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் முழு அதிகாரப்பூர்வ எண்ணிக்கை கிடைத்த பிறகே அனைத்து விவரங்களும் தெரியவரும். நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவிகிதமும் அப்போது தெரியவரும்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications