'எவரையும் கவர்ந்திழுக்கும் நடைஉடை பாவனை'.. நடிகர் ரஜினிக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் மட்டுமின்றி பல மாநில மக்களையும் தனது நடிப்பு ஸ்டைலால் கட்டி வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

இன்று முழுவதும் சமூக வலைத்தளங்களில் #HBDSuperstarRajinikanth என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டானது. நடிகர் ரஜினிகாந்துக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரபலங்கள், இயக்குனர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மோடி, ஸ்டாலின் வாழ்த்து

மோடி, ஸ்டாலின் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், 'நடிகர் ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்; தனது அற்புதமான நடிப்பால் மக்களை தொடர்ந்து மகிழ்விக்கட்டும். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தரட்டும்' என்று கூறியுள்ளார்.

வாழ்த்து செய்தி

வாழ்த்து செய்தி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 72 ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவர் இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களை தன்னிகரற்ற தனது ஆளுமையால் மகிழ்விக்கும் நல்ல உடல்நலத்துடன் திகழு விழைகிறேன்' என்று கூறியுள்ளார்.

சீமான் வாழ்த்து

சீமான் வாழ்த்து

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட அவர், 'அளப்பெரும் நடிப்பாற்றலாலும், தனக்கே உரித்தான தனித்துவமிக்க உடல்மொழியாலும், எவரையும் கவர்ந்திழுக்கும் நடைஉடை பாவனைகளாலும் உலகப்புகழ்பெற்று தமிழ்த்திரையுலகின் முன்னணி திரைநட்சத்திரமாக விளங்கும் மூத்த திரைக்கலைஞர் ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது மனம்நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்' என்று வாழ்த்தியுள்ளார்.

Recommended Video

    Superstar Rajini Birthday Special | Best of Thalaivar Styles, Punch, comedies | Filmibeat Tamil
    சேரனுக்கும் பிறந்தநாள்

    சேரனுக்கும் பிறந்தநாள்

    இதேபோல் இன்று பிறந்தநாள் காணும் இயக்குனர் சேரனுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள சீமான், ' தமிழர்களின் அறம்சார்ந்த வாழ்வியலை திரைமொழியில் காட்சிப்படுத்தி, கலைவடிவத்தில் ஆவணப்படுத்தும் பெரும்பணியைச் செய்யும் ஆகச்சிறந்த படைப்பாளி, மண்ணின் மீதும், மக்களின் மீதும் பற்றுறுதிகொண்ட மகத்தான திரைக்கலைஞன் அன்புஇளவல் இயக்குனர் சேரன் அவர்களுக்கு உளப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள்' என்று கூறியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+