"நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன்”.. அபிநயா வெளியிட்ட பதிவால் ஷாக்! உடனே வந்த அடுத்த போஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் சீமான் மீது குற்றம்சாட்டி, வரிசையாக அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இந்நிலையில் நாதக நிர்வாகி அபிநயா, கட்சியை விட்டு விலகுவதாக எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். ஆனால், அவர், நாம் தமிழர் கட்சியை விட்டு விலகும் நிர்வாகிகளை கிண்டல் செய்யும் விதமாக அவ்வாறு பதிவிட்டுள்ளதாக தெரிகிறது.

கடந்த சில நாட்களாகவே நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து தாமாக விலகி வருகின்றனர்.

seeman naam tamilar katchi vijay

நாதக நிர்வாகிகள் விலகல்: கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் தலைமையில் அண்மையில் அறிவித்தனர். அதைத்தொடர்ந்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் சுகுமார், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியுள்ள முக்கிய நிர்வாகிகள் விஜய் கட்சியில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. அதையொட்டியே அவர்கள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் நாட்களில் மேலும் பல முக்கிய நிர்வாகிகளும் கட்சியில் இருந்து விலகி, விஜய் கட்சியில் இணையத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

அபிநயா பொன்னிவளவன்: அண்மையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் நாதக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டவர் அபிநயா. 65,381 வாக்குகள் பெற்று நான்காவது இடம் பிடித்திருந்தார். சில நாட்களிலேயே மீண்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளராக களமிறக்கப்பட்டார் அபிநயா பொன்னிவளவன். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 10,602 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தார்.

இந்நிலையில், அபிநயா பொன்னிவளவன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்த நான், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகுகிறேன்" எனப் பதிவிட்டார். இதைப் பார்த்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கட்சி விலகல் கடிதம்: கட்சி விலகல் கடிதம் என தலைப்பிட்டு அவர் பகிர்ந்திருந்த பதிவில், "நான் கடந்த 4 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியில் பயணிக்கிறேன். படிக்காத நான் மேடை பேச்சாளராக எண்ணி முதன்முதலாக விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் பேச முயற்சி செய்தேன் முடியவில்லை.. பெண்களுக்கு 50% இடம் என்ற கட்சியில்.. துணிவுள்ள, கொள்கைப் பிடிப்புள்ள எனக்கு வேட்பாளராக வாய்ப்பு தரப்படவில்லை.

தொகுதி பொறுப்பில் உள்ள என் கணவரிடம் சீமான் அவர்கள் "நான் பொதுக்கூட்டத்தில் அமர்வதற்காக ஆடம்பரமான பிரத்தியேக நாற்காலி வாங்க சொத்தை விற்று 5 லட்சம் தர வேண்டும்" என்று கட்டாயப்படுத்தியதால் மிகுந்த மன உளைச்சல் அடைந்தேன். இதனால் நான் கட்சியிலிருந்து விலகுகிறேன். இதுவரை என்னுடன் பயணித்த உறவுகளுக்கு நன்றி இப்படிக்கு நான்.." எனக் குறிப்பிட்டிருந்தார்.

கிண்டல் பதிவு: ஆனால், அபிநயா இந்தப் பதிவை, சீமான் மீது குற்றம்சாட்டி கட்சியை விட்டு விலகி வரும் நிர்வாகிகளை கிண்டலாக விமர்சிக்கும் வகையில் பதிவிட்டுள்ளதாகத் தெரிகிறது. எனினும், பலரும், அபிநயா வெளியிட்ட பதிவை சீரியஸ் எனக் கருதி, 2 தேர்தல்களில் அடுத்தடுத்து வாய்ப்பு கொடுத்த சீமான் மீது நீங்களே குற்றம்சாட்டலாமா என கொதித்தெழுந்தனர்.

seeman naam tamilar katchi vijay

இந்நிலையில், மீண்டும் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அபிநயா, "சில அவதூறுகளின் அவதூறுகளை அருவருப்பாக்கும் செய்திகள், தான் வீழ்ந்தாலும் தன் இனம் வாழ வேண்டும் என்ற தத்துவத்தை ஏற்ற தலைவன் வழி நடக்கும் எங்களை ஒன்றும் செய்யாது.! பேரன்பும் பெருங் கோபமும் கொண்ட என்னுயிர் அண்ணன் சீமான் வாழும் சம காலத்தில் நான் வாழ்வதையே பெருமையாக கருதுகிறேன்!! என் உயிர் மூச்சு உள்ளவரை அண்ணனின் விரல் பிடித்து அரசியலில் பயணிப்பேன்..!!" என்று தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும், கட்சியை விட்டு விலகும் நிர்வாகிகளை விமர்சிக்கும் வகையில், தாங்கள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவது போல பொய்யான பதிவுகளை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+