நாதக காளியம்மாள் சேர்கிறாரா? தவெகவில் இணைந்த யூட்யூபர் ராஜ்மோகன்.. பேச்சாளருக்கு சிக்கல் இருக்காது!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் ஆதவ் அர்ஜுனா, அதிமுக நிர்வாகி சிடி நிர்மல் குமார் மற்றும் யூட்யூபர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி காளியம்மாள் தவெகவில் இணையவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் நியமனத்தில் மும்முரமாக இருந்து வருகிறது. தவெக தொடங்கப்பட்டு முதலாமாண்டு நிறைவு பெற உள்ள நிலையில், அடுத்தடுத்து மாவட்டச் செயலாளர்கள் நியமனம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே 38 மாவட்டச் செயலாளர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியது.

அந்த 38 பேரில் பெரிதாக தெரிந்த முகங்கள் இல்லாததால், 2026ல் தவெக எதிர்பார்க்கும் ரிசல்ட் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இருந்தாலும் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடிகர் விஜய் தொடர்ச்சியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதேபோல் தவெகவில் ஒரு நபருக்கு ஒரு பொறுப்பு என்ற விதிகள் கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியது.
மாவட்டச் செயலாளர்களாக இருப்பவர்கள் சிலர், பல்வேறு அணிகளின் மாநில தலைவர் பொறுப்பு கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால் நடிகர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் ஆனந்த் இருவரும், ஒரு நபருக்கு ஒரு பதவி என்பதில் உறுதியாக இருக்கின்றனர். இந்த நிலையில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரையும் தவெகவில் இணைக்கும் பணியும் இன்னொரு பக்கம் நடைபெற்று வந்தது.
அந்த வகையில் சில நாட்களுக்கு முன் விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா நடிகர் விஜய்-ஐ சந்தித்திருந்தார். இந்த நிலையில் இன்று மதியம் மீண்டும் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு ஆதவ் அர்ஜுனா வந்திருக்கிறார். அவரை பொதுச்செயலாளர் ஆனந்த் கட்டியணைத்து வரவேற்று அழைத்து சென்றார். அதேபோல் அதிமுகவின் ஐடி விங் நிர்வாகி சிடி நிர்மல் குமாரும் பனையூர் அலுவலகம் வந்தார்.
இவர்களுடன் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான காளியம்மாள் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியது. கடந்த சில மாதங்களாகவே சீமான் மற்றும் காளியம்மாள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் எழுந்தது. இதுதொடர்பான ஆடியோக்களும் வெளியாகி நாம் தமிழர் கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் காளியம்மாள் நாதகவில் இருந்து விலகி மாற்றுக் கட்சிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனால் அவர் பெரும்பாலும் விஜய் தொடங்கிய தவெக உடன் இணைவார் என்று கூறப்பட்டது. ஏற்கனவே நாதகவில் முக்கிய நிர்வாகியாக உயர்ந்துள்ள அவர், விஜய் உடன் இணைந்தால், அவருக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், தாம் தவெகவில் இணையவில்லை என்று காளியம்மாள் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் யூட்யூபர் ராஜ்மோகன் தவெகவில் இணைந்துள்ளார். பிரபல யூட்யூப் சேனலில் பணியாற்றி வந்த அவர், சிறந்த பேச்சாளர் மற்றும் துணை நடிகராக வலம் வருகிறார். பல்வேறு மேடைகளிலும் தமிழில் பேசி அசத்தியுள்ள ராஜ்மோகனுக்கு, கொள்கை பரப்புச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டின் வருவாயில் 64.4% இந்த 3 விஷயத்திற்கு மட்டுமே செலவாகிறது.. அப்படி என்ன அது? -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. எந்தெந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்? -
ஒரு மாதத்தில் சிதைந்த விஜய்யின் 'ஒற்றை அதிகார மையம்' உறுதி? ஐஏஎஸ் அதிகாரிகளே புதிய பவர் சென்டர்? -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
உதயநிதி வட்டத்தை காலி செய்யும் விஜய்.. ரெடியான மெகா பிளான்.. முதல் தூண்டிலே திமிங்கலத்திற்கு! -
தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை.. பட்ஜெட் வரை அடக்கமா இருங்க.. இல்லைன்னா காலி! -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
விஜய்க்கு விஷால் கொடுத்த வித்தியாசமான பரிசு.. கையில் கவனிச்சீங்களா? இது பலருக்கு பாடம் -
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
டாஸ்மாக் ஊழியர்கள் 200 பேர் சஸ்பெண்ட்.. பாட்டிலுக்கு 10 ரூபா ஒழிக்காம விடமாட்டேன்.. விஜயின் சபதம்! -
பல் இல்லாத சிங்கம்! சிங்கப்பெண் சிறப்புப் படைக்கு அதிகாரம் இல்லை! காவல் உயர் அதிகாரிகள் அதிருப்தி












Click it and Unblock the Notifications