ரைட்ல இண்டிகேட்டர் போட்டு.. லெஃப்ட் எடுத்த அன்புமணி! திமுக -அதிமுகவுக்கு டாடா! தளபதியுடன் சின்னய்யா?
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் முழுதாக ஒரு ஆண்டு இருக்கும் நிலையில் தற்போதைய அரசியல் கட்சிகள் கூட்டணி உள்ளிட்ட பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து விட்டன. திமுக கூட்டணி கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியை மெகா கூட்டணியாக மாற்ற சிந்தித்து வருகிறது. இந்த நிலையில் அதிமுக திமுக மீது அதிருப்தி கொண்ட பாமக, விஜய் உடன் கூட்டணி அமைக்கலாம் எனவும், நாம் தமிழர் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாடு அரசியல் களம் தற்போதைய சூடாக இருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன. முதன்முறையாக அடுத்தடுத்து இரண்டு முறை ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையைப் பெற ஸ்டாலின் காத்திருக்கிறார்.
இன்னொரு புறம் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அடுத்தடுத்து இரண்டு முறை தோற்காத ஒரே கட்சி என்ற பெருமையை தக்க வைக்க எடப்பாடி பழனிச்சாமி முயன்று வருகிறார். அந்த வகையில் அதிமுக திமுக தற்போது இருந்து தேர்தல் வேலைகளை ஆரம்பித்துவிட்டது.

திமுகவை பொருத்தவரை அந்த கட்சியின் கூட்டணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது தான். கடந்த 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்கள், 2024 மக்களவைத் தேர்தல் என தொடர் வெற்றியை அந்த கூட்டணி வெற்றி வருகிறது. தற்போதைக்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொமதேம, மமக, மஜக, மநீம உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. இதே கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலையும் எதிர்கொள்ளும் என கூறப்படுகிறது.
அதிமுகவை பொறுத்தவரை நிலையான கூட்டணி இன்றி தள்ளாடுகிறது. 2021 மக்களவைத் தேர்தலில் கூட்டணியில் இருந்த பாஜக, பாமக, அதற்குப் பிறகு விலகியது. அப்போது தனியாக கூட்டணி அமைத்த தேமுதிக, இப்போது அதிமுகவின் பக்கம் வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. தற்போதைய சூழலில் அதிமுக கூட்டணியில் பாஜக மட்டுமே அதிகாரப்பூர்வமாக இருக்கிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கிட்டத்தட்ட கூட்டணியில் இணைந்தது போலத்தான். ஆனால் தேமுதிக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இருக்கிறதா? இல்லையா? என உறுதிப்படுத்தப்படவில்லை.
பாஜகவோ, தினகரன் நம்முடன் தான் கூட்டணியில் இருக்கிற என கூறினாலும், அதனை அதிமுக ஏற்றுக் கொள்வதாக தெரியவில்லை. இப்படியாக குழப்பங்கள் சென்று கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் பலமாக இருக்கும் பாமக எந்த கட்சியோடு கூட்டணி அமைக்கப் போகிறது என்பதுதான் தற்போதைய எதிர்பார்ப்பு.
திமுகவுடன் பாமக கூட்டணி அமைக்காது என கிட்டத்தட்ட உறுதியாக இருக்கிறது. அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னணியில் பாஜக இருப்பதாகவும் சொல்கின்றனர் அரசியல் நிபுணர்கள். அதே நேரத்தில் மாநிலங்களவை உறுப்பினர் விவகாரம் தொடர்பாக அதிமுக பாமக இடையே மோதல் வெடித்திருக்கிறது. தற்போதைக்கு தந்தை மகன் மோதல் விவகாரம் பேசுபொருளாக இருந்தாலும் அது விரைவில் சரி செய்யப்படும் எனவும், கூட்டணி குறித்து அன்புமணி ராமதாஸ் முடிவெடுப்பார் என்கின்றனர் அந்த கட்சி நிர்வாகிகள்.
இதுபுறம் இருக்க தமிழகத்தில் மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கும் அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்துடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைக்கலாம் என சொல்லப்படுகிறது. விஜய்க்கு வடமாவட்டங்களில் நல்ல செல்வாக்கு இருப்பதாக சில கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. அந்த வகையில் விஜய் உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் கூடுதலாக சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைப்பார்கள் என்பது அன்புமணியின் எண்ணம்.
மேலும், எட்டு சதவீத வாக்கு வைத்திருக்கும் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 10 முதல் 20 சதவீதம் வாக்குகள் நிச்சயம் பாமக கூட்டணிக்கு கிடைக்கும் என்கின்றனர். பலமான கூட்டணி அமைந்துவிடக் கூடாது என திமுக திட்டமிட்டு வரும் நிலையில் அதிமுக, பாமக, பாஜக தவிர்த்து புதிய கூட்டணி அமையலாம் என்ற பேச்சு அரசியலில் புதிய புயலை கிளப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications