'லியோ' படப் தலைப்பு.. நடிகர் விஜய்-க்கும் பொறுப்பு இருக்கிறது.. சீமான் சொன்ன அறிவுரை!
லியோ படத்தின் தலைப்பு குறித்து நடிகர் விஜய்-க்கு சீமான் அறிவுரை கூறியுள்ளார்.
சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் படங்களுக்கு தொடர்ந்து ஆங்கிலத்தில் தலைப்பு வைப்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுரை கூறியுள்ளார். தாய் மொழியை சிதையாமல் பார்த்துகொள்ளும் பொறுப்பு விஜய்-க்கும் இருப்பதாக கூறிய சீமான், ஆங்கிலத்தில் தலைப்பு வைப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
'செஞ்சமர்' படத்தின் தொடக்க விழா சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக் கொண்டார்.
இந்த விழாவில் சீமான் பேசுகையில், செஞ்சமர் என்பது ரத்த சிந்தி போராடிய போராட்ட வரலாறு. சில நேரங்களில் தவறாகவோ, உண்மைக்கு மாறாகவோ ஒரு செய்தியை சொல்லிவிட்டால் பின் விளைவுகள் வரும்.

திரைக்கலை
ஒவ்வொரு தேசிய இனத்தின் அழகிய கலை முகம் தான் திரைக்கலை. பிரெஞ்சு மொழி திரைப்படங்களில் அவர்களின் அடையாளம் இருக்கிறது. ஆனால் நமது திரைக்கலையில் மொழி, உணர்வு, உடை, கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை, தலைப்பு என எதுவும் இல்லை. பிரபாபரகனுக்கு விடுதலை புலிகள் போராட்ட வரலாற்றை காட்சிப்படுத்தும் ஆசை இருந்தது. அதற்காக இயக்குநர் மகேந்திரன் அங்கு சென்று பயிற்சியளித்தார். அதேபோல் அங்கேயே இயக்குநர் ஜான் மகேந்திரன் ஒரு படத்தையும் உருவாக்கினார்.

பிரபாகரன் வரலாறு
5 பேரில் தொடங்கிய இயக்கம், ஆயிக்கரக்கணக்கான வீரர்களோடு வளர்ந்தது. அதனால் அதனை சாதரணமாக தொட்டுவிட முடியாது. மிகவும் உணர்வுப் பூர்வமான வீரர் வரலாற்று காவியம். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக எடுக்க வேண்டும் என்று நானும், இயக்குநர் வெற்றிமாறனும் பேசி இருக்கிறோம். ஒருநாள் நடக்கும். ஆனால், தற்போது அதற்கான அரசியல் சூழல் மற்றும் பொருளாதார சூழல் இல்லை என்று தெரிவித்தார்.

மக்களை ஏமாற்றுகிறார்கள்
தொடர்ந்து, மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த காசு இல்லை என்கிறார்கள். ஆனால், தேர்தல் வந்துவிட்டால் மட்டும் எங்கிருந்துதான் இந்தக் காசு வருகிறது எனத் தெரியவில்லை. மக்களை நினைத்தால் பாவமாக உள்ளது. ஸ்மார்ட் வாட்ச், செல்போன் வரை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். நம்ம ஊருக்கு எம்எல்ஏ வருவாரா என்ற நிலை மாறி எம்எல்ஏ இறந்து எப்போது இடைத்தேர்தல் வரும் என நிலை மாறி வருவது வருத்தமாக உள்ளது என்று தெரிவித்தார்.

விஜய்-க்கு சீமான் அறிவுரை
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் விஜய்யின் 'லியோ' படத்திற்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைத்திருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தமிழர்கள் தானே படம் பார்க்கிறார்கள். நாம் தான் நம் தாய் மொழியை சிதையாமல் பார்த்துகொள்ள வேண்டும். அந்தப் பொறுப்பு நடிகர் விஜய்க்கும் உண்டு. முன்பு தமிழில் பட பெயர்கள் வெளியிடப்பட்டன. தற்போது பிகில், பீஸ்ட்' என பெயர்கள் வருகின்றன. அதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
-
மாட்டிக்கிட்ட பங்கு..பயிர்க் கடன் தள்ளுபடி! ரூல்ஸ் தெரியாமல் சிக்கிய விஜய்! நேக்காக எஸ்கேப்பான திமுக -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
விஜய் வெற்றி.. மக்கள் முடிவை தவறுன்னு சொல்ல நீங்க யார்? சிவக்குமார் சொன்னதும் சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் -
TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக் -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
விஜய்யுடன் டெல்லி பயணித்த அந்த இளைஞர் யார்? போகுமிடமெல்லாம் கூடவே இருந்தாரே.. பின்னணி -
விஜய்யை திட்டமிட்டு புறக்கணித்த அமித்ஷா? கேரள முதல்வரை மீட் பண்ணிருக்காரே.. டெல்லியில் நடந்தது என்ன? -
'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications