இந்திய குடியரசுக் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம்.. அப்போ சீமான் சின்னம் என்ன? குழம்பும் நாதக!
சென்னை: 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் மணிப்பூரைச் சேர்ந்த இந்தியக் குடியரசுக் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்திருக்கிறது. இந்த சின்னத்தில் 2021 சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டிருந்தது. தற்போது கலப்பை சுமக்கும் விவசாயி சின்னத்தை சீமான் வைத்துள்ளார்.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 2021 சட்டசபைத் தேர்தல் வரை கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலின் போது நாதகவுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இந்த சின்னத்தின் மூலமாக அந்தக் கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் சில ஆயிரம் வாக்குகளை பெற்றனர். இது சீமானின் வாக்கு சதவிகிதத்தை பாதித்ததாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் லோக்சபா தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி, 8.19 சதவிகித வாக்குகளை பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது.
இதன்பின் நாம் தமிழர் கட்சி மீண்டும் விவசாயி சின்னத்தை கைப்பற்றியது. இதுதொடர்பான அறிவிப்பை சீமான் சில மாதங்களுக்கு முன்பாகவே வெளியிட்டார். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் தரப்பில் கரும்பு விவசாயி சின்னம் இந்தியக் குடியரசுக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரைச் சேர்ந்த இந்தியக் குடியரசுக் கட்சி தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 2016 முதல் 2021 வரை சீமானின் நாதக போட்டியிட்டு வந்த கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கலப்பை விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சட்டசபைத் தேர்தலின் போது கலப்பை விவசாயி சின்னமும், கரும்பு விவசாயி சின்னமும் அருகருகே இருந்தால், வாக்காளர்கள் குழம்புவதற்கு வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.
கடந்த லோக்சபா தேர்தலிலேயே கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காததால், ஒவ்வொரு தொகுதியிலும் சில ஆயிரம் வாக்குகளை நாதக இழந்தது. தற்போது விஜய் கட்சி தேர்தலில் போட்டியிடுவதால், வெற்றி தோல்வி சில நூறு வாக்குகளில் மாறும் என்று பார்க்கப்படுகிறது. இந்த சவாலை சீமான் எப்படி சமாளிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications