Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘ஏய் தம்பி.. நான் பயணம் போறேன்.. வெறியாக்காதே..’ - மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு ஒரு சில மாதங்களே உள்ளது. அரசியல் கட்சிகளிடையே கார சார விவாதம், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் அனல் பறக்க தொடங்கிவிட்டது. விசிக தலைவர் திருமாவளவன் நாம் தமிழர் சீமான் மற்றும் தவெக விஜய் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். செய்தியாளர் சந்திப்பில் சீமான் செய்தியாளர்களை ஒருமையில் திட்டுவதாக புகார் உள்ளது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பியவரிடம், தம்பி நான் பயணம் போறேன். என்னை வெறியாக்காதே என்று சீமான் எச்சரித்துள்ளார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம், "அவர்கள் திராவிடர்கள் என்கிறார்கள். நாங்கள் தமிழர்கள் என்கிறோம். அந்த அடிப்படையில் தானே தேர்தலை சந்திக்க முடியும். திட்டமிட்டு என் மொழியை அழிக்கிறார்கள். அதற்கு நான் தனி மேடை போட்டு விவாதிக்கிறேன். நான் ஏன் திராவிடனாக இருக்க வேண்டும். கீழடி நீங்கள் திராவிட நாகரீகம் என்கிறீர்கள். அவர்கள் இந்தி நாகரீகம் என்கிறீர்கள்.

ntk-seeman-got-anger-against-reporter-in-press-meet

தமிழ் வளர்ப்பதில்லை

2,600 வருடங்களுக்கு திராவிடம், தெலுங்கு, மலையாளம் எல்லாம் எங்கே இருந்தது. இதை தமிழர் நாகரீகம் என்று சொல்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை. திட்டமிட்டு என் இனத்தை மீட்க அவர்கள் திட்டமிடுகின்றனர். என் மொழியை காக்க, அடையாளத்தை மீட்க நான் அவர்களை அழிக்க நினைக்கிறேன். பெருவுடையார் கோயிலை திராவிட கட்டிட கலை என்கிறார்கள்.

பொங்கல் பண்டிகையை திராவிட திருநாள் என்கிறார்கள். திராவிட பண்பாடு என்கிறார்கள். இப்படி சொன்னால் வெறி ஆகுமா, ஆகாதா. தமிழ் எங்கு வளர்க்கப்படுவது. வணிகர்களை கூட்டத்தில், முதலமைச்சர் அவர்களிடம் ரெயின்போவை ரெயின்போ என்றே எழுத சொல்கிறார். 80,000 முதுநிலை ஆசிரியர்கள் தமிழில் தோல்வியடைந்தனர். பத்தாம் வகுப்பு தேர்வில் 50,000 பேர் தமிழ் தேர்வை எழுத வருவதில்லை. தமிழ்நாட்டில் தங்கிலீஷ் தான் வளர்க்கப்படுகிறது." என்றார்.

என்னை எரிச்சலாக்காதே

அப்போது செய்தியாளர் தொடர்ந்து கேள்வி எழுப்பினார். அதற்கு சீமான், "காலையில் உனக்கு ஏதாவது பிரச்சனை ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். நான் பயணம் போகிறேன் தம்பி. என்னை வெறியாக்காதே. காலை நேரத்தில் என்னை எரிச்சல் ஆக்காதே. என் இனத்தை மண்ணாக்கிவிட்டு, இது பெரியார் மண் என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும். முக்கியமான வேலை போய் கொண்டிருக்கிறது. காலையிலேயே வெறியாக்காதே.

பாஜகவுடன் கூட்டணி வைத்து எம்எல்ஏ ஆனது நானா, அண்ணன் திருமாவா. வாஜ்பாய்க்கு வீரவணக்கம் செலுத்தியது அரசியல் நாகரீகம் என்று திருமாவளவன் சொல்கிறார். நான் பாரதியாருக்காக ஒரு மேடை ஏறுவது அரசியல் அநாகரீகம் ஆகிறதா. என் அண்ணன் என்பதால் அவரை மதித்து ஒதுங்கி போகிறேன். எனக்கு எதிரி விசிக கிடையாது. அவரை எதிர்க்க நான் கட்சி தொடங்கவில்லை. வைகோ, ராமதாஸ் ஆகியோரை எதிர்க்க நான் அரசியல் செய்யவில்லை.

அவர்களை விடவா நான் பேசுகிறேன்

இங்கு திராவிடர் - தமிழர் போர் நடக்கிறது. அண்ணாவும், கருணாநிதியும் பெரியாரை எதிர்த்து பேசியதை விடவா நான் அவரை எதிர்த்து அதிகம் பேசுகிறேன். திராவிடம் எங்களுக்குள் மோதலை உருவாக்க நினைக்கிறது. திமுக கட்சி எதற்காக, யாரை எதிர்த்து தொடங்கியது. திராவிடர் கழகத்தில் இருந்து திமுக ஏன் தொடங்கப்பட்டது. இதற்கு யார் பதில் சொல்வார். இன்னும் இந்த கிளவனை கைது செய்யவில்லை என்று சட்டமன்றத்தில் பேசியது யார்." என்று கேள்வி எழுப்பினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+