சென்னையில் தீவிர பிரச்சாரத்தில் சீமான்.. மத்திய மற்றும் தென் சென்னையில் இன்று வாக்கு சேகரிப்பு!
தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய பகுதிகளில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
சென்னை: தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய பகுதிகளில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. "விவசாயி" சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், 25-03-2019 முதல் 16-04-2019 வரை தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.

இருபதாம் நாளான நேற்று சனிக்கிழமை மாலை, வட சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பி.காளியம்மாள், அவர்களை ஆதரித்து இராயபுரம் பொதுக்கூட்டத்தில் (பரத் திரையரங்கம் அருகில்) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரப்புரை மேற்கொண்டார்.
இரவ, வட சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் பி.காளியம்மாள், மற்றும் பெரம்பூர் சட்டமன்ற வேட்பாளர் செ.மெர்லின் சுகந்தி ஆகியோரை ஆதரித்து பெரம்பூர் பொதுக்கூட்டத்தில் (சத்தியமூர்த்தி நகர், அந்தோணியார் கோவில் அருகில்) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரப்புரை மேற்கொண்டார்.
பின் மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மருத்துவர் கார்த்திகேயன், அவர்களை ஆதரித்து எழும்பூர் பொதுக்கூட்டத்தில் (தானா தெரு) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரப்புரை மேற்கொண்டார்.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை, மாலை மணியளவில், தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் அ.ஜெ.ஷெரின், அவர்களை ஆதரித்து சோழிங்கநல்லூர் பொதுக்கூட்டத்தில் (கந்தன்சாவடி ஆதிபராசக்தி மண்டபம் அருகில்) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார்.

அதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு, தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் அ.ஜெ.ஷெரின், அவர்களை ஆதரித்து அடையாறு பொதுக்கூட்டத்தில் (பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில்) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார்
அதனைத் தொடர்ந்து இரவு 09 மணிக்கு, மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மருத்துவர் கார்த்திகேயன், அவர்களை ஆதரித்து டி.பி.சத்திரம் பொதுக்கூட்டத்தில் (பச்சையப்பன் கல்லூரி எதிரில்) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார்.
நாளைய திங்கட்கிழமை மாலை 5 மணியளவில், பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பூ.பாரதிப்பிரியா, அவர்களை ஆதரித்து குமணஞ்சாவடி பொதுக்கூட்டத்தில் (பேருந்து நிறுத்தம் அருகில்) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார்.
அதனைத் தொடர்ந்து இரவு 7 மணியளவில், திருபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஈரா.மகேந்திரன் அவர்களை ஆதரித்து அம்பத்தூர் பொதுக்கூட்டத்தில் (ராக்கி திரையரங்கம் அருகில்) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார்.
அதனைத் தொடர்ந்து இரவு 9 மணியளவில், திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ம.வெற்றிச்செல்வி அவர்களை ஆதரித்து செங்குன்றம் பொதுக்கூட்டத்தில் (பேருந்து நிலையம் அருகில்) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications