நாம் தமிழர் கட்சியினர் தைப்பூசம் கொண்டாட்டம் : தேன் தினைமாவு உருண்டை பிரசாதம் கொடுத்த சீமான்
தைப்பூசத்தை முன்னிட்டு சீமான் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள திருமுருகன் குடிலில் முருகவழிபாடு மற்றும் வேல்வழிபாடு நடைபெற்றது.
சென்னை: தைப்பூசத்தை முன்னிட்டு சீமான் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள திருமுருகன் குடிலில் முருகவழிபாடு மற்றும் வேல்வழிபாடு நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பொதுமக்கள் அனைவருக்கும் தேன் தினை மாவு உருண்டை, இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.
தைப்பூசம் திருவிழா இன்று தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. முருகன் ஆலயங்களிலும் சிவ ஆலயங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. காவடிகள் எடுத்து வந்தும் அலகு குத்தியும் முருகப்பெருமானுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆண்டு தோறும் தைப்பூசம் திருவிழா கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் தைப்பூசம் விழா திருமுருகத் திருநாளாக கொண்டாடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர்
கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:

தலைநிலம் குறிஞ்சி தந்த தலைவன், தமிழர் இறை, நமது இன மூதாதை! முருகன் பெரும்புகழைப் போற்றிக் கொண்டாடும் திருமுருகன் திருநாளையொட்டி இந்த ஆண்டும் நாம் தமிழர் கட்சியின் தமிழர் மெய்யியல் மீட்புக்கான பாசறையான வீரத்தமிழர் முன்னணி சார்பாக தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் தமிழர்கள் பரவி வாழும் நிலங்களிலும் மிகுந்த எழுச்சியோடு கொண்டாடப்பட்டுவருகிறது.

இதனையொட்டி நாம் தமிழர் கட்சியின் மதுரவாயல் சட்டசபைத் தொகுதி மற்றும் வீரத்தமிழர் முன்னணி சார்பாக, இன்று 28-01-2021 வியாழக்கிழமையன்று காலை 09 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள திருமுருகன் குடிலில் சீமான் அவர்களின் தலைமையில் முருகவழிபாடு மற்றும் வேல்வழிபாடு நடத்தி, பொதுமக்கள் அனைவருக்கும் தேன்-தினை மாவு உருண்டை, இனிப்பு பொங்கல் வழங்கி திருமுருகத் திருநாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில், நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் திரளாகப் பங்கேற்று முப்பாட்டன் முருகனின் பெரும்புகழைப் போற்றிக் கொண்டாடினர். இந்த நிகழ்வை சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications