விஜய்க்கு பாதுகாப்பு கேட்டு தீர்மானம் போட்டுட்டு இப்படி சவால் விடுறீங்க! இடும்பை கார்த்திக் கிண்டல்
சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற பொதுக்குழு தீர்மானம் குறித்த நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார். கட்சியின் தலைவருக்குப் பாதுகாப்பு வேண்டுமென பொதுக்குழுவில் தீர்மானம் போடுவதெல்லாம் தமிழக அரசியல் வரலாற்றில் எவரும் காணாத விசித்திரம் என்றே சொல்லலாம் என்றும் கூறியுள்ளார்.
கரூர் துயரச் சம்பவம் நடந்த 38 நாட்களுக்கு பின், தவெக தலைவர் விஜய் பொதுவெளிக்கு வந்துள்ளார். தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற விஜய், உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகளை முன் வைத்து முதல்வர் ஸ்டாலினையும், திமுகவையும் கடுமையாக சாடினார். அதற்கு முன்பாக தவெக சிறப்பு பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் 8வது தீர்மானமாக, மக்கள் சந்திப்பு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கழகத் தலைவர் விஜய்க்கும், அவரைக் காண வரும் பொதுமக்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் தமிழக அரசு, முழுமையாக பாதுகாப்பு வழங்க வேண்டும். அதுமட்டுல்லாமல் விஜய் பாதுகாப்பு மற்றும் மக்கள் பாதுகாப்பில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாகவும் குற்றம்சாட்டின.
இதுகுறித்து நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ஒரு கட்சியின் தலைவர் (!) என்ற அடிப்படையில், விஜய்க்கு தமிழகக் காவல்துறை பாதுகாப்பை வழங்கும்; வழங்குகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் Y பிரிவும் ஏற்கனவே விஜய்க்கு இருக்கிறது.
இதுமட்டுமல்லாது, Bouncers எனப்படும் கறுப்புடை தரித்த தனியார் பாதுகாவலர்களும் பாதுகாப்புக்கு அமர்த்தப்படுகிறார்கள். இருந்தபோதிலும், விஜய்க்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமெனப் பொதுக்குழுவில் தீர்மானம் போட்டிருக்கிறது தவெக. கட்சியின் தலைவருக்குப் பாதுகாப்பு வேண்டுமென பொதுக்குழுவில் தீர்மானம் போடுவதெல்லாம் தமிழக அரசியல் வரலாற்றில் எவரும் காணாத விசித்திரம் என்றே சொல்லலாம்.
ஒரு பக்கம் கட்சித் தலைவருக்குப் பாதுகாப்பு கொடுங்கன்னு தீர்மானம் போட்டுட்டு, அதே மேடையில, என் தலைவன முடிஞ்சா தொட்டுப் பாருங்கடான்னு வாய்ச்சவடால் விடும் முரண்பாட்டு மூட்டைகளை எல்லாம் அந்தக் கூமூட்டைக்கூட்டத்திலே மட்டும்தான் காண முடியும் என்று பதிவிட்டுள்ளார். இவரின் பதிவால் தவெக மற்றும் நாதக இடையில் சோசியல் மீடியாவில் மோதல் ஏற்பட்டுள்ளது.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்











Click it and Unblock the Notifications