கம்யூனிஸ்ட்கள் முன்பே அறிவித்திருந்தால்.. இடைத்தேர்தலில் நாதக ஆதரவு கொடுத்திருப்போம்! சீமான் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக முன்பே அறிவித்திருந்தால், நாதக வேட்பாளர்களை நிறுத்தி இருக்காது என்று சீமான் தெரிவித்துள்ளார். வேட்பாளர்களை நிறுத்தாமல் சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சி வேட்பாளர்களுக்கு நாதக ஆதரவு அளித்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடக்கவுள்ளது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துவிட்ட சூழலில், மொத்தமாக களத்தில் 5 முனைப் போட்டி நிலவி வருகிறது. தவெக, திமுக, அதிமுக, நாதக மற்றும் கம்யூனிஸ்ட்கள் வேட்பாளர்களை அறிவித்திருக்கின்றனர்.

Seeman

இதன்படி நாதக சார்பாக தாராபுரத்தில் கார்த்திகாவும், மதுராந்தகத்தில் ஜானகிராமன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். அதேபோல் மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சுகந்தி, தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக லட்சுமணன் களமிறக்கப்பட்டுள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்திருந்தாலும், இடைத்தேர்தலில் தனித்து களமிறங்கி இருக்கிறது.

இதனால் எந்தக் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் இடைத்தேர்தலில் களமிறங்கி இருப்பது தொடர்பாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிட எடுத்த முடிவை நான் பெரிதும் வரவேற்கிறேன். இந்த முடிவினை அவர்கள் முன்பே எடுத்திருக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் தீய ஆட்சி முறைகளுக்கு இவ்வளவு காலம் துணையாக இருந்தது வருந்தத்தக்கது. புரட்சிகரமான மற்றும் சோசலிச சிந்தனைகளை எங்களுக்கு விதைத்ததே கம்யூனிச இயக்கங்கள் தான். அவர்கள் முன்கூட்டியே அறிவித்திருந்தால், நாதக வேட்பாளர்களை நிறுத்தாமல் அவர்களுக்கு ஆதரவு அளித்திருப்போம்.

அதிமுக சார்பாக வெற்றி பெற்றவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆளுங்கட்சியில் இணைந்து மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது மக்கள் பணத்தை வீணடிக்கும் செயலாகும். ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த ரூ.50 கோடி வரை மக்கள் பணம் செலவாகும். ஆளுங்கட்சியில் இருந்தால் தான் தொகுதிக்கு சேவை செய்ய முடியும் என்ற தவறான கருத்தை பரப்புவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.

பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். அப்படியில்லை என்றால் இடைத்தேர்தலுக்கு செலவாகும் ரூ.50 கோடியை சம்பந்தப்பட்டவர்களே ஏற்க வேண்டும் என்ற வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+