தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்த சத்துணவுப் பணியாளர்கள்
சென்னை: அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதில் சத்துணவு ஊழியர்கள் இடம்பெறவில்லை. இந்நிலையில், காலமுறை ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் சத்துணவுப் பணியாளா்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7,850 வழங்கப்பட வேண்டும். வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், பணிக்கொடை ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, சமூக நலத் துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், இயக்குநர் சங்கீதா உள்ளிட்டோர் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் நிா்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் நேற்று பேச்சுவாா்த்தை மேற்கொண்டனர். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதுமட்டுமல்லாமல், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஜனவரி 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் காத்திருப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இன்று முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications