அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் நியமனம்! இபிஎஸ் ஆதரவாளர்கள் 10 பேரை நீக்கி ஓபிஎஸ் அதிரடி
சென்னை: ஓபிஎஸ் அணியின் இணை ஒருங்கிணைப்பாளராக ஆர்.வைத்திலிங்கத்தை அந்த அணியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் நியமித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து எழுந்த பிரச்சினையில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 11 ஆம் தேதி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து அதிமுகவிலிருந்து ஓபிஎஸ், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன் உள்ளிட்ட 18 பேரை எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார். இதையடுத்து "என்னை நீக்க எடப்படி பழனிச்சாமிக்கோ , கே பி முனுசாமிக்கோ அதிகாரம் இல்லை என கூறிய ஓபிஎஸ் அவர்கள் இருவரையும் கட்சியிலிருந்து நான் நீக்குகிறேன்" என கூறி நீக்கினார்.

திண்டுக்கல் சீனிவாசன்
மேலும் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, உதயகுமார், வளர்மதி, கோகுல இந்திரா, சிவி சண்முகம், ஓ எஸ் மணியன், செல்லூர் ராஜூ உள்பட 22 பேரை நீக்குவதாகவும் ஓபிஎஸ் அறிவித்திருந்தார்.

கொரோனா தொற்று
இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த ஓபிஎஸ், வீடு திரும்பியதும் நேற்றைய தினம் 14 மாவட்டச் செயலாளர்களை ஓபிஎஸ் நியமித்து அதிரடி காட்டினார். அதன்படி ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக தர்மர், கோவை மாநகர் மாவட்டச் செயலாளராக கோவை செல்வராஜ், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்பி ஆர் கோபாலகிருஷ்ணன் என 14 பேர் நியமிக்கப்பட்டனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்
இந்த நிலையில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லை என கூறப்பட்ட நிலையில் ஓபிஎஸ்ஸோ தன்னை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்றே கூறிக் கொள்கிறார். மேலும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தனது ஆதரவாளரையும் ஓபிஎஸ் நியமித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் நியமிக்கப்படுகிறார்.
Recommended Video

இபிஎஸ் ஆதரவாளர்கள் 10 பேர் நீக்கம்
அது போல் துணை ஒருங்கிணைப்பாளர்களாக கு.ப.கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் நியமனம் என கூறியுள்ளார். மேலும் இன்னொரு அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் 10 பேரை நீக்கியுள்ளார். அதாவது முன்னாள் அமைச்சர்கள் கேடி ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், சிறுணியம் பலராமன், எம்சி சம்பத், சொரத்தூர் ராஜேந்திரன், பாலகிருஷ்ண ரெட்டி, கிருஷ்ண முரளி, வி எஸ் சேதுராமன், ரவிச்சந்திரன் ஆகிய 10 பேரை ஓபிஎஸ் நீக்கியுள்ளார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications