சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகையே வெல்லும் தமிழ் பெண்களின் வலிமையை கமலா ஹாரிஸ் நிரூபித்துள்ளார்.. ஓபிஎஸ் சூப்பர் வாழ்த்து

Google Oneindia Tamil News

சென்னை: அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வான கமலா ஹாரிஸுக்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்பை வீழ்த்தி, ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார்.

O Paneerselvam wishes Kamala Harris the Vice President elect of US has proved the woman power

ஜோ பிடன் 290 வாக்குகள் பெற்றுள்ளார். அதேநேரம் டிரம்ப் 214 வாக்குள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

இதே போல் துணை அதிபர் பொறுப்பில் உள்ள குடியரசுக் கட்சியின் மைக் பென்சை ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார்.

பிடன், கமலா வெற்றியை கொண்டாடும் பாகிஸ்தான்.. உற்சாகத்தில் இஸ்லாமாபாத்... என்ன காரணம்! பிடன், கமலா வெற்றியை கொண்டாடும் பாகிஸ்தான்.. உற்சாகத்தில் இஸ்லாமாபாத்... என்ன காரணம்!

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக பொறுப்பேற்க உள்ளதை பலரும் பாராட்டி உள்ளார்கள். தமிழகத்தில் உள்ள பலரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்பட தமிழத்தைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

O Paneerselvam wishes Kamala Harris the Vice President elect of US has proved the woman power

இந்நிலையில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள கமலா ஹாரிஸ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில். அமெரிக்காவின் துணை அதிபராக பொறுப்பேற்கும் கமலா ஹாரிஸ் பெண்களின் சக்தியை நிரூபித்துள்ளார். உலகை வெல்லும் மனநிலையுடன் இருக்கும் ஒரு தமிழ் பெண்ணின் வலிமையை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார். உங்கள் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.

English summary
O Paneerselvam on twitter: Kamala Harris the Vice President elect of US has proved the woman power. She has once again re established the strength of a Tamil woman, who has the grit to conquer the world. My heartfelt wishes for your success.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X