Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எப்படிங்க பேசலாம்.. சட்டசபையில் கொந்தளித்த ஈபிஎஸ்.. கூலாக ஓபிஎஸ் கொடுத்த ரியாக்சன்.. கவனீச்சிங்களா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை மசோதா இன்று தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக மசோதா மீது ஓ பன்னீர் செல்வம் பேச அனுமதிக்கப்பட்டார். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து கொந்தளித்து பேசிய நிலையில் இருஅணியினரும் கருத்து மோதலில் ஈடுபட்டனர். இந்த வேளையில் தனது இருக்கையில் அமர்ந்து ஓ பன்னீர் செல்வம் கொடுத்த ரியாக்சன் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து 40க்கும் அதிகமானவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதனால் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் வகையில் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் ஒப்புதல் அளிக்காமல் சட்டமசோதாவை திருப்பி அனுப்பினார்.

இந்நிலையில் தான் இன்று மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் சட்டமசோதாவை கொண்டு வர எதிர்ப்பு இன்றி சட்டமசோதா நிறைவேறியது.

 ஓ பன்னீர் செல்வம் பேச்சு

ஓ பன்னீர் செல்வம் பேச்சு

இந்நிலையில் தான் ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்டமசோதா மீது ஒவ்வொரு கட்சியினருக்கும் பேச சட்டசபையில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ பேசி மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்துக்கு பேச சபாநாயகர் அப்பாவு அனுமதி வழங்கினார். இதையடுத்து ஓ பன்னீர் செல்வம் எழுந்து பேசினார்.

 அதிமுக என பேசிய ஓபிஎஸ்

அதிமுக என பேசிய ஓபிஎஸ்

அப்போது பன்னீர்செல்வம், ‛‛நமது முதல் அமைச்சர் கொண்டு வந்த ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை இந்த மன்றம் விவாதமின்றி ஒருமனதாக, ஏகமனதாக நிறைவேற்றி இருக்கலாம் என்ற கருத்தினை பதிவு செய்கிறேன். இருப்பினும் பல்வேறு விவாதங்கள் இப்போது நடைபெற்று இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ள ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை அணைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் முழுமையாக வரவேற்கிறோம்'' என்றார்.

 எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு

எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு

ஓ பன்னீர் செல்வத்தின் இந்த பேச்சால் அருகே இருந்த முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அதிருப்தி அடைந்தார். உடனடியாக எழுந்த அவர் சபாநாயகர் அப்பாவுவை பார்த்து ‛‛ஒரு கட்சிக்கு ஒருவர் என்ற விதம் பேச அழைத்தீர்கள். அதிமுக என்பது எங்கள் அணி தான். நான் தான் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறேன். எங்களது சார்பில் தளவாய் சுந்தரம் பேசினார். அதன்பிறகும் பேச அனுமதிப்பது எந்த விதத்தில் இருக்கிறது'' என கொந்தளித்தார்.

 சட்டசபையில் களேபரம்

சட்டசபையில் களேபரம்

இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில் ஓ பன்னீர் செல்வம் அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அணிகளை சேர்ந்த எம்எல்க்கள் தங்களின் இருக்கைகளை விட்டு எழுந்து எதிரெதிர் தரப்பை விமர்சித்தனர். இதனால் சட்டசபையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. குறிப்பாக ஓ பன்னீர் செல்வம் அணியின் மனோஜ் பாண்டியன் ஆக்ரோஷமாக எதிர்ப்பு தெரிவித்தார்.

 ஓபிஎஸ் கொடுத்த ரியாக்சன்

ஓபிஎஸ் கொடுத்த ரியாக்சன்

இவ்வாறு சட்டசபையில் களேபரம் நடக்க எடப்பாடி பழனிச்சாமியின் அருகே அமர்ந்திருந்த ஓ பன்னீர் செல்வம் சிரித்தபடியே அமர்ந்திருந்தார். மேலும் மனோஜ் பாண்டியன் ஆக்ரோஷமாக இருந்த நிலையில் அவரது கையை பிடித்து இழுத்து நிதானப்படுத்தினார். இதையடுத்து பேசிய அப்பாவு, முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் ஓ பன்னீர் செல்வம் பேச அனுமதி வழங்கியதாக தெரிவித்தார்.

 வெளியான வீடியோ

வெளியான வீடியோ

இருப்பினும் சபாநாயகர் அப்பாவுவின் விளக்கத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஏற்கவில்லை. இதையடுத்து அவர்கள் அனைவரும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த சம்பவம் இன்று சட்டசபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே ஓ பன்னீர் செல்வம் பேச்சுக்கு எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்து பேசியது, இரு அணியினரும் மோதிக்கொண்டது, ஓ பன்னீர் செல்வம் கொடுத்த ரியாக்சன் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+