இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே.. கர்நாடகா தேர்தலில் களமிறங்கும் ஓபிஎஸ்.. தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் வரும் மே 10ஆம் தேதி நடைபெற இருக்கும் சூழலில், ஓ.பன்னீர்செல்வம், கர்நாடக மாநிலத்தில் அதிமுக நிர்வாகிகளையும், தொகுதிப் பொறுப்பாளர்களையும் நியமித்து, அதிரடி காட்டியுள்ளார்.

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் போட்டியிட ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசியல் களத்தில் கடுமையாக மோதிக்கொள்ளும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணியினர் கர்நாடகத் தேர்தலிலும் தங்கள் பலத்தை நிரூபிக்க போராடுவார்கள் எனக் கருதப்படுகிறது.

அதிமுகவின் கர்நாடக மாநிலக் நிர்வாகிகளை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது, ஓபிஎஸ் அணியினர் இந்த தேர்தலில் களமிறங்கப்போவதை உணர்த்தியுள்ளது.

ஈபிஎஸ்- ஓபிஎஸ்

ஈபிஎஸ்- ஓபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவைக் கூட்டி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி, எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்வு செய்தது முதலாகவே ஓபிஎஸ் அணியினர் தொடர் சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சட்டப்போராட்டத்தில் பல வழக்குகளில் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு சாதகமாகவே தீர்ப்புகள் வந்துள்ளன. இதனால், ஈபிஎஸ் அணியின் கையே ஓங்கியுள்ளது. சமீபத்தில் ஐகோர்ட், ஓபிஎஸ் தரப்பினரின் மனுக்களை தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிசாமி. இதை எதிர்த்து மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளார் ஓபிஎஸ்.

கர்நாடகா தேர்தல்

கர்நாடகா தேர்தல்

இதுஒருபுறமிருக்க, கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அம்மாநிலத்தில் உள்ள கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. கர்நாடக மாநிலத்தில் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சி 124 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்து, அடுத்தகட்ட பட்டியலை வெளியிட தயாராகி வருகிறது. பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் விரைவில் வேட்பாளர் பட்டியலை அறிவிக்க திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், அதிமுகவினரும் கர்நாடக சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பாக, ஓபிஎஸ் அணியினர் கர்நாடகாவில் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு

ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு


எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுகவிற்கு கர்நாடகத்தில் நல்ல செல்வாக்கு உண்டு. பெங்களூர் புகழேந்தியை கர்நாடக மாநில அதிமுகவின் பொறுப்பாளராக ஜெயலலிதா நியமித்திருந்தார். தற்போது புகழேந்தி ஓபிஎஸ் ஆதரவாளராக இருப்பதால் கர்நாடகா தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு போட்டியிடுவதற்கு ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிகிறது. மைசூர், பெங்களூர், கோலார் தங்கவயல் போன்ற தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஓபிஎஸ் தரப்பில் நிர்வாகிகளை நியமனம் செய்து அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். ஓபிஎஸ் தற்போது தேர்தல் பொறுப்பாளர்களாக அறிவித்துள்ள நிர்வாகிகளில் பலர் முன்பிருந்தே கர்நாடக அதிமுகவின் நிர்வாகிகளாக இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகா நிர்வாகிகள்

கர்நாடகா நிர்வாகிகள்

அதிமுகவின் கர்நாடக மாநில நிர்வாகிகளை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநிலக் கழக அவைத் தலைவர் A.ஆனந்தராஜ், மாநிலக் கழகச் செயலாளர் கே.குமார், மாநில கழக இணைச் செயலாளர் கே.வசந்த ராணி, மாநிலக் கழக துணைச் செயலாளர் ஜி.ராஜு, மாநிலக் கழகத் துணைச் செயலாளர் ஆர்.அனிதா, மாநில கழகப் பொருளாளர் மனோகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். BTM சட்டமன்ற தொகுதி தலைவர் இளங்கோவன், BTM சட்டமன்றத் தொகுதி செயலாளர் ஆர்.இஸ்ரேல், BTM சட்டமன்ற தொகுதி இணைச் செயலாளர் வி.சசிகலா, BTM சட்டமன்றத் தொகுதி துணைச் செயலாளர் மணிமாறன், BTM சட்டமன்றத் தொகுதி துணைச் செயலாளர் பி.சுமித்ரா, BTM சட்டமன்றத் தொகுதி பொருளாளர் என்.ரமேஷ், கோலார் தங்க வயல் சட்டமன்றத் தொகுதி தலைவர் ஜெ.ராஜா சிங், கோலார் தங்க வயல் சட்டமன்றத் தொகுதி செயலாளர் பி.மூர்த்தி, கோலார் தங்க வயல் சட்டமன்றத் தொகுதி இணைச் செயலாளர் கோகிலா, கோலார் தங்க வயல் சட்டமன்றத் தொகுதி துணைச் செயலாளர் சாந்தி, கோலார் தங்க வயல் சட்டமன்றத் தொகுதி பொருளாளர் எப்.எஸ் பிரசாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 காந்தி நகர் - பங்காருபேட்டை

காந்தி நகர் - பங்காருபேட்டை

காந்திநகர் சட்டமன்ற தொகுதி தலைவர் எம்.கே.பாண்டுரங்கன், காந்திநகர் சட்டமன்றத் தொகுதி செயலாளர் சி.கிருஷ்ணமூர்த்தி, காந்திநகர் சட்டமன்ற தொகுதி இணைச் செயலாளர் எம்.தேவகி, காந்திநகர் சட்டமன்ற தொகுதி துணைச் செயலாளர் எம்.சிவக்குமார், காந்திநகர் சட்டமன்றத் தொகுதி துணை செயலாளர் எஸ்.கலாவதி காந்திநகர் சட்டமன்ற தொகுதி பொருளாளர் எம்.குணசேகரன், பங்காருபேட்டை சட்டமன்றத் தொகுதி தலைவர் டி.மதன்குமார், பங்காருபேட்டை சட்டமன்ற தொகுதி செயலாளர் கே.ரங்கசாமி, பங்காருபேட்டை சட்டமன்ற தொகுதி இணைச் செயலாளர் பி.பாரதி, பங்காருபேட்டை சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் ஆர்.ரஜினிகாந்த், பங்காருபேட்டை சட்டமன்றத் தொகுதி துணைச் செயலாளர் பி.பரிமளா, பங்காருபேட்டை சட்டமன்ற தொகுதி பொருளாளர் எம்.ஐ.அமீர்ஜான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோலார்

கோலார்

கோலார் மாவட்டக் கழக தலைவர் எம்.சபியுல்லா, கோலார் மாவட்ட கழக செயலாளர் பி.சாயின்கா, கோலார் மாவட்ட கழக இணைச் செயலாளர் டி.மணிலா, கோலார் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் சுகுமார், கோலார் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் கே.ஜோதி, கோலார் மாவட்ட கழக பொருளாளர் ஆர். மோகன், கோலார் மாவட்டம் புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் எம்.ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் (தங்க வயல் சட்டமன்றத் தொகுதி) வி.சி.நடராசன், பொதுக்குழு உறுப்பினர் (பங்கார்பேட் சட்டமன்றத் தொகுதி) சி.சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் (BTM சட்டமன்ற தொகுதி) எஸ்.சாஜத் பாஷா, பொதுக்குழு உறுப்பினர் (காந்திநகர் சட்டமன்றத் தொகுதி) எம்.ரவி, பொதுக்குழு உறுப்பினர் (ராஜாஜி நகர் சட்டமன்ற தொகுதி) திருச்சி குருமூர்த்தி, ராஜாஜி நகர் தொகுதி கழக அவை தலைவர் எஸ்.வாசுதேவன், ராஜாஜி நகர் தொகுதி கழக செயலாளர் கே.பரசுராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராஜாஜி நகர் - லிங்கராஜபுரம்

ராஜாஜி நகர் - லிங்கராஜபுரம்

இதேபோல், ராஜாஜி நகர் தொகுதி கழக இணைச் செயலாளர் எஸ்.வனிதா, ராஜாஜி நகர் தொகுதி கழக துணை செயலாளர் எச்.சோமேஷ் குமார், ராஜாஜி நகர் தொகுதி கழகத் துணைச் செயலாளர் பி.குமாரி, ராஜாஜி நகர் தொகுதி கழகப் பொருளாளர் எம்.ரமேஷ், பெங்களூர் மாவட்ட கலெக்டர் அவை தலைவர் வி.வேடியப்பன், பெங்களூர் மாவட்ட கழக செயலாளர் சி.முனிரத்தினம், பெங்களூர் மாவட்ட கழக இணைச் செயலாளர் ஆர்.மனோன்மணி, பெங்களூர் மாவட்ட கழக துணைச் செயலாளர் சி.லிங்கராஜ், மாவட்ட கழக துணை செயலாளர் எஸ்.ருக்மணி, பெங்களூர் மாவட்ட கழக அவைத்தலைவர் வி.தேவராஜ், லிங்கராஜபுரம் தொகுதி கழக அவை தலைவர் ஆ.பிரகாஷ், லிங்கராஜபுரம் தொகுதி கழகச் செயலாளர் ஆர்.கௌரவ், லிங்கராஜபுரம் தொகுதி கனக இணைச் செயலாளர் கே.நந்தினி, லிங்கராஜபுரம் தொகுதி கழக துணை செயலாளர் எச்.ஜாரமியா, லிங்கராஜபுரம் தொகுதி கழக துணை செயலாளர் எச்.இன்பன்ட் பார்த்தின், லிங்கராஜபுரம் தொகுதி கழகப் பொருளாளர் ஆர்.பாலமுருகன், பொதுக்குழு உறுப்பினர் (லிங்கராஜபுரம் சட்டமன்றத் தொகுதி) கே.அஸ்வின் குமார், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் எஸ்.ரவி, மாநில எம்ஜிஆர் மன்ற செயலாளர் கே.நாகராஜ் நாயுடு, பெங்களூர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சி.கருணாநிதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+