ஓகே ஆகுமா கூட்டணி? பாஜகவுடன் பேசும் ஓ பன்னீர் செல்வம் அணி! ரகசியம் உடைத்த பண்ருட்டி ராமச்சந்திரன்
சென்னை: அதிமுக தனது கூட்டணியில் இருந்து பாஜகவை கழற்றிவிட்டுள்ளது. இந்நிலையில் தான் இன்று ஓ பன்னீர் செல்வம் தனது அணியின் மூத்த தலைவர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்ட நிலையில் அதுபற்றிய முக்கிய தகவலை பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி உடைந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு கொண்டு கூட்டணியை தொடர பாஜக தலைவர்கள் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி பிடிகொடுக்காமல் நழுவி வருகிறார்.

இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணியில் இணைய ஓ பன்னீர் செல்வம் அணி தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் இன்று மாலையில் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் திடீரென்று ஆலோசனையில் ஈடுபட்டார்.
பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், குப கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் உள்பட பலர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். மாலை 6 மணிக்கு தொடங்கி இந்த கூட்டம் சுமார் 3 மணிநேரத்துக்கும் மேலாக நடந்தது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வியூகங்கள் குறித்து விரிவாக விவாதித்துள்ளனர். மேலும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டுவது, அணியை மாநிலம் முழுவதும் பலப்படுத்துவது குறித்தும் கருத்து பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் தலைவர்கள் விவாதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு ஓ பன்னீர் செல்வம் அணியின் மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஆலோசனை கூட்டத்தில் இன்றைய அரசியல் நிலைமை குறித்து விவாதித்தோம். வரும் 11ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கழக செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் சேர்ந்து வரும் 11ம் தேதி விரிவாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம். இதற்கிடையே உறுப்பினர் சேர்க்கை பணியை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்ய உள்ளோம்'' என்றார்.
இதையடுத்து, ‛‛நாடாளுமன்ற தேர்தல் நெருங்குகிறது. இரட்டை இலை சின்னம் உங்களுக்கு கிடைக்குமா? ஏனென்றால் சின்னம் இப்போது எடப்பாடி பழனிச்சாமியிடம் உள்ளது'' என கேள்வி எழுப்பட்டது. இதற்கு பண்ருட்டி ராமச்சந்திரன், ‛‛வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்'' என்றார்.

அதன்பிறகு, ‛‛பாஜகவுடன் பேசி வருவதாக சொன்னீர்கள். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கான முன்னெடுப்புகள் தொடர்ந்து வருகிறதா?. பாஜகவின் விபி துரைசாமி கூட அதிமுகவடன் கூட்டணியில் தொடர விரும்புவதாக கூறியுள்ளாரே?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பண்ருட்டி ராமச்சந்திரன், ‛‛ஒருங்கிணைப்பாளருடன் (ஓ பன்னீர் செல்வம்) பாஜக தலைமை தொடர்பு கொண்டுள்ளதாக கூறியிருக்கிறார். எப்படிப்பட்ட கூட்டணி அமையும் என்பதை நாம் இப்போதே கூறிவிட முடியாது. இந்த விபரங்கள் அனைத்தும் பின்னர் தான் முடிவு செய்யப்படும். தமிழ்நாட்டில் 3வது அணி அமையலாம் என பத்திரிகைகளில் எழுதப்படுகிறது. அதனை பொறுத்திருந்து பார்ப்போம்'' என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications