Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்வு? மறைமுகமாக திமுக அரசு உயர்த்துவதாக ஓபிஎஸ் குற்றச்சாட்டு!

ஆவின் பால் விலையை மீண்டும் திமுக அரசு உயர்த்த திட்டமிட்டிருப்பதாக ஓபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஆவின் ஒன்றியங்கள் தங்கள் நிதிநிலைக்கு ஏற்ப பால் விலையை உயர்த்திக் கொள்ளலாம் எனக் கூறி, ஆவின் பால் விலையை மறைமுகமாக திமுக அரசு உயர்த்துவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு என பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள மக்களை மேலும் வாட்டி வதைக்கும் விதமாக ஆவின் பால் விலையை மீண்டும் திமுக அரசு உயர்த்த திட்டமிட்டிருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

சமீபத்தில் ஆவின் நெய், ஆவின் வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டது கடும் கண்டனங்களைச் சந்தித்த நிலையில், ஆவின் பச்சை நிற பாக்கெட் விலை உயரப்போவதாக ஓபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பால் விலையை உயர்த்திக் கொள்ளலாம்?

பால் விலையை உயர்த்திக் கொள்ளலாம்?

இது தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகிறோம் என்று கூறி, ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துவிட்டு, அதை ஈடுசெய்யும் விதமாக, பல்வேறு ஆவின் பொருட்களின் விலையையும், ஆரஞ்சு நிற பாலின் விலையையும் உயர்த்திக் கொண்டே வந்த திமுக அரசு, தற்போது ஆவின் ஒன்றியங்கள் தங்கள் நிதிநிலைக்கு ஏற்ப பால் விலையை உயர்த்திக் கொள்ளலாம் என்ற உத்தரவை பிறப்பித்து இருப்பதும், ஆவின் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருப்பதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

பச்சை பால் பாக்கெட்

பச்சை பால் பாக்கெட்

தற்போது ஆவின் பால் விலையையும் அந்தந்த ஒன்றியங்களே உயர்த்திக் கொள்ளலாம் என்ற அதிகாரத்தை திமுக அரசு வழங்கியுள்ளதாக செய்தி வந்துள்ளது பொதுமக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவின் பாலின் உற்பத்தி விலையை குறைக்கும் வகையிலும், ஆவின் மொத்த விற்பனையாளருக்கான திருத்தப்பட்ட தரகினை ஈடுசெய்யும் வகையிலும், பச்சை வண்ண பாக்கெட் பாலின் கொழுப்புச் சத்தினை 4.5 விழுக்காட்டிலிருந்து 3.5 விழுக்காடாக குறைத்துள்ளதாகவும் திருநெல்வேலி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அங்கீகரிக்கப்பட்ட மொத்த விற்பனையாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், இனி ஒரு லிட்டர் பால் விலை 40 பைசா உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

2 ரூபாய் உயரும்?

2 ரூபாய் உயரும்?

இதனை சில்லறை விற்பளையாளர்களுக்கு விற்பனை செய்யும்போது மொத்த விற்பனையாளர்கள் லிட்டருக்கு மொத்தமாக ஒரு ரூபாய் உயர்த்துவார்கள் என்றும், சில்லறை விற்பனையாளர்கள் பொதுமக்களுக்கு மேலும் ஒரு ரூபாய் கூடுதல் தொகைக்கு விற்பனை செய்வார்கள் என்றும், மொத்தத்தில் ஒரு லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட்டிற்கு பொதுமக்கள் கூடுதலாக இரண்டு ரூபாய் செலுத்த நேரிடும் என்றும், ஏற்கெனவே பால் கவரில் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச விற்பனை விலை என்பது சில்லறை விற்பனையாளர்களால் பின்பற்றப்படவில்லை என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

விலை ஏற்றம் + தட்டுப்பாடு

விலை ஏற்றம் + தட்டுப்பாடு

தற்போதைய விலை மாற்றம் என்பது விதிமீறல்களுக்கு வழிவகுக்கும் என்றும், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் கூடுதல் விலை கொடுத்து ஆவின் பாலினை வாங்கும் நிலை ஏற்படுவதோடு, தனியார் பாலினை பொதுமக்கள் நாடக்கூடிய நிலையும் உருவாகும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். விலையேற்றம் ஒருபுறம் என்றால், மறுபுறம் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. ஆவின் பொருட்களான வெண்ணெய், நெய் போன்றவற்றின் உற்பத்தி குறைக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் பெரும்பாலானவை மொத்தமாக வெளிச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும், ஆவின் பாலகங்களில் நெய், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் இருப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

ரத்து செய்க

ரத்து செய்க

ஆவின் நிறுவனத்தில் நிலவும் குளறுபடி காரணமாக ஏழையெளிய மக்கள் பாதிக்கப்படுவதோடு, ஆவின் நிறுவனமும் நலிந்து போகும் சூழ்நிலை உருவாகும். அடுத்ததாக, நீல நிற பாக்கெட் பாலிலும் திமுக அரசு தன் கயரூபத்தைக் காட்டிவிடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவி வருகிறது. எனவே நிதிநிலைக்கேற்ப அந்தந்த ஒன்றியங்களே பால் விலையை உயர்த்திக் கொள்ள அனுமதிப்பது ஆகியவற்றை ரத்து செய்யவும், ஆவின் பொருட்கள் அனைத்தும் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+