தமிழகத்தில் தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது! திமுக அரசை கடும் சொற்களால் விமர்சித்த ஓ.பன்னீர்செல்வம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக ஆட்சியில் தீவிரவாதம், பயங்கரவாதம், கொலை, கொள்ளை, வன்முறை ஆகியவை தலைவிரித்து ஆடுவதாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளார்.

எப்போதுமே அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டால் அதில் மென்மையான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தும் ஓபிஎஸ், இந்த முறை மிகக் கடுமையான சொற்களை பயன்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் வருமாறு;

சட்டம் ஒழுங்கு

சட்டம் ஒழுங்கு

கடந்த ஒன்றரை ஆண்டு கால திமுக ஆட்சியில் தீவிரவாதம், பயங்கரவாதம், கொலை, கொள்ளை, வன்முறை ஆகியவை தலைவிரித்து ஆடுகிறது என்றும்; சட்டம்-ஒழுங்கு சீர்செய்யப்பட்டால்தான் தமிழ்நாடு தொழில் வளத்திலும், பொருளாதார வளர்ச்சியிலும் முன்னேறும் என்றும் சுட்டிக்காட்டி, சட்டம் ஒழுங்கை சீர் செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எனது அறிக்கைகள் வாயிலாக அவ்வப்போது வேண்டுகோள் விடுத்து வந்துள்ளேன். ஆனால், சட்டம் ஒழுங்கு சீர் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

2,500 ரவுடிகள்

2,500 ரவுடிகள்

உதாரணமாக, காவல் துறையினரால் தமிழ்நாடு முழுவதும் 2,500 ரவுடிகள் பிடிக்கப்பட்டதாக பத்திரிகைகளில் சில மாதங்களுக்கு முன் செய்தி வந்தது. நான்கூட அரசு ஏதோ நடவடிக்கை எடுக்கிறது என்று தான் முதலில் நினைத்தேன். ஆனால், இதற்குப் பின் சட்டம் ஒழுங்கு இன்னும் மோசமாகத்தான் சென்று கொண்டிருக்கிறது.

திமுக ஆட்சி

திமுக ஆட்சி

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, தமிழ்நாட்டில் அன்றாடம் ஒரிரண்டு கொலைகள் என்ற நிலை படிப்படியாக மாறி, தினமும் சராசரியாக எட்டு முதல் பத்து கொலைகள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது. அண்மைக் காலமாக பெட்ரோல் குண்டு கலாச்சாரம் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறது. பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவங்கள் எல்லாம் நடைபெற்று வருகின்றன. இதைத் தவிர ஏராளமான தற்கொலைகள் வேறு. அண்மையில் கூட, 'ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை' என்ற பெயரில் 1,310 ரவுடிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால், கள யதார்த்தம் என்பது வேறு மாதிரியாக இருக்கிறது. வன்முறைக் கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது.

கோவை கார் வெடிப்பு

கோவை கார் வெடிப்பு

இதற்கு எடுத்துக்காட்டு தான் நேற்று முன் தினம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம். கோயம்புத்தூர் மாவட்டம், கோட்டைமேட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகில் நேற்று முன்தினம் பலத்த வெடி சத்தத்துடன் கார் ஒன்று வெடித்து சிதறியதாகவும்; இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும்; இதற்குக் காரணம் எரிவாயு உருளை வெடிப்பு என்று கூறப்பட்டாலும், காருக்குள் இருந்தவர் காவல் துறையினரின் கண்காணிப்பில் இருந்ததாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

 அதிமுக சார்பில் கண்டனம்

அதிமுக சார்பில் கண்டனம்

காவல் துறை தலைமை இயக்குநர் அவர்களே சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்கிறார் என்றால் இதன் பின்னணியில் ஏதோ இருக்கிறது என்பது தெளிவாகிறது. மேலும், இது 1998 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தை நினைவூட்டுகிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை. சட்டம்-ஒழுங்கை சீரழித்துக் கொண்டிருக்கிற தி.மு.க. அரசிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனிக்கவனம் தேவை

தனிக்கவனம் தேவை

தீவிரவாதத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் அழிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு காவல் துறைக்கு உள்ளது. முதலமைச்சர் அவர்கள் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையில் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி, தமிழ்நாட்டை, தமிழ்நாட்டு மக்களை வன்முறையாளர்களிடமிருந்தும், தீவிரவாதிகளிடமிருந்தும், பயங்கரவாதிகளிடமிருந்தும் காப்பாற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+