ஓபிஎஸ் பீச் பக்கம் வந்தாலே அல்லு கிளம்புகிறது.. அம்மா சமாதிக்கு விசிட்.. மகனுடன் டீகுடித்து ரிலாக்ஸ்

ஜெயலலிதா சமாதியில் ஓ பன்னீர்செல்வம், அஞ்சலி செலுத்தியபின்னர் டீ குடித்தார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓபிஎஸ் எங்க போனாலும்.. டீ சமாச்சாரத்தை மட்டும் விடமாட்டார் போல இருக்கு. இன்றைக்கு மகனுடன் ஜெயலலிதா சமாதிக்கு சென்று கும்பிட்டுவிட்டு, ஒரு கப் டீ அடித்துவிட்டு வந்திருக்கிறார்!

ரிசல்ட் வந்து இத்தனை நாள் ஆகியும், அதிமுக தரப்பில் ஒருத்தரும் பீச் பக்கம் போகவே இல்லை. மத்திய அமைச்சரவையில் போஸ்டிங் தரவில்லையே என்ற பதைபதைப்பு, வருத்தத்திலேயே இருந்தனர். அதனால் டெல்லியிலேயே சில முக்கிய தலைகள் முகாமிட்டு வந்தனர்.

தேனியில் வெற்றி பெற்ற அந்த ஒருத்தராவது பீச்சுக்கு வந்துட்டு போவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்தான் அதிக நாள் டெல்லியில் இருந்தவர் என்று தெரிகிறது.

பீச்சில் ஓபிஎஸ்

பீச்சில் ஓபிஎஸ்

இன்று காலை திடீரென ஓபிஎஸ், மகன் ரவீந்திரநாத்தைகூட்டிக் கொண்டு பீச்சுக்கு வந்தார். இதை பார்த்ததும் ஒரு நிமிஷம் தூக்கி வாரிப்போட்டுவிட்டது. ஏற்கனவே கட்சிக்குள் புகைச்சல் ஓடுகிறது, மகனுக்கு சீட் கேட்கிறார் என்று மூத்த நிர்வாகிகள் டென்ஷனில் உள்ளனர். இப்தார் நோன்பையும் எடப்பாடி புறக்கணித்தார் என்று தகவல் கசிந்தது.

பரபரப்பு

பரபரப்பு

இந்நிலையில், ஓபிஎஸ் எதுக்கு பீச்சுக்கு படையுடன் கிளம்பி வருகிறார் என்ற கலக்கம் வந்தது. எதையாவது சொல்லி பரபரப்பை தெறிக்க விடப்போகிறாரோ என்ற நினைப்பும் ஏற்பட்டது. இதனால் மீடியாக்களும் ஒரு நிமிஷம் மும்முரமாயின.

டீ சாப்பிட்டார்கள்

டீ சாப்பிட்டார்கள்

கடைசியில் விஷயம் ஒன்றுமில்லை.. மகன் ஜெயித்து வந்ததால் ஜெயலலிதா சமாதிக்கு மரியாதை செலுத்த வந்துள்ளார் என்பது தெரியவந்தது. மலர்தூவி கும்பிட்டு முடித்ததும், அப்படியே எல்லாரும் உட்கார்ந்து ஒரு கப் டீ சாப்பிட்டார்கள். சுற்றிலும் சேர் போடப்பட்டு, நடுவில் ஒரு டேபிள் வைக்கப்பட்டிருந்தது. சுடச்சுட பீங்கான் கப்பில் தரப்பட்ட டீயை குடித்துவிட்டு அனைவரும் கிளம்பி சென்றனர்.

ஓய்வு

ஓய்வு

ஆனால் இந்நிகழ்வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பல் வலி அதிகமாக உள்ளது. முகமெல்லாம் வீங்கி விட்டதாம். பாலாஜி ஆஸ்பத்திரியில்தான் தங்கி ஓய்வு பெற்று வருகிறாராம்! இருந்தாலும் ஓபிஎஸ், பீச் பக்கம் வந்தாலே, இனம் புரியாத ஒரு அள்ளு கிளம்பிவிடுகிறது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+