இது எம்.எல்.ஏ செய்யும் வேலையா? 'ஆளுங்கட்சி தலையீடு.. அராஜகம்’ எஸ்.ஆர்.ராஜா செயலுக்கு ஓபிஎஸ் கண்டனம்!
சென்னை : திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் வகையில் செயல்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மறைமலைநகரை அடுத்த மெல்ரோசாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தின் உள்ளே சென்ற திமுக-வை சேர்ந்த தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, அந்நிறுவன நிர்வாகிகளை கடுமையாக திட்டி, கை கால்களை உடைத்து விடுவதாக மிரட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தனியார் நிறுவன நிர்வாகிகளை மிரட்டிய திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. திமுக எம்.எல்.ஏவின் அடாவடி செயலுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

ஆளும் கட்சியினரின் அராஜகம்
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு அதிகாரிகளை மிரட்டுவது, காவல் துறையினரை மிரட்டுவது, ஒப்பந்ததாரர்களை மிரட்டுவது, அரசாங்க அலுவலகங்களின் செயல்பாடுகளில் தலையிடுவது என்ற வரிசையில் தற்போது காவல் துறைக்குள்ள அதிகாரத்தை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பயன்படுத்தியிருப்பதைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்பதும், ஆளும் கட்சியினரின் அராஜகம் கொடிகட்டி பறக்கிறது என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.

நில விவகாரம்
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரை அடுத்த மெல்ரோசபுரம் பகுதியில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம், தனியருக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்து பல ஆண்டுகளாக வணிகம் செய்து வருவதாகவும், குத்தகை காலம் 2028 ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், நிலத்தின் உரிமையாளர் இடத்தை காலி செய்து கொடுக்கும்படி தனியார் நிறுவனத்தை வற்புறுத்தியதாகவும், ஆனால் குத்தகை காலம் முடிவடையாத சூழ்நிலையில் இடத்தை காலி செய்து தர முடியாது என்று தனியார் நிறுவனம் தெரிவித்து விட்டதாகவும், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மிரட்டிய எம்.எல்.ஏ
இந்தச் சூழ்நிலையில், மேற்படி இடத்தின் உரிமையாளருக்கு ஆதரவாக, தனியார் நிறுவன அதிகாரியை தொலைபேசியில் அழைத்து இடத்தை காலி செய்து தருமாறு தி.மு.கவைச் சேர்ந்த தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மிரட்டும் தொனியில் கேட்டுக் கொண்டதாகவும், இதனைத் தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு தனியார் நிறுவன அலுவலகத்திற்கு நேரில் சென்ற தாம்பரம் எம்.எல்.ஏ, அங்குள்ள நிறுவன அதிகாரிகளை நாகரிகமற்ற முறையில், ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாகவும், கை கால்களை உடைத்து விடுவதாக மிரட்டியதாகவும், இதுகுறித்து 'தலைமைச் செயலகத்தில் புகார் அளிப்போம்' என்று தெரிவித்ததற்கு, 'நிறுவனத்தை இழுத்து மூடிவிடுவோம்' என்று அச்சுறுத்தியதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

இது எம்.எல்.ஏவின் வேலையா
இதுகுறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய ஒரு சட்டமன்ற உறுப்பினர் சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் வகையில் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. சட்டமன்ற உறுப்பினரின் பணி என்பது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது, தொகுதிக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் தெரு விளக்குகள் எரிகின்றனவா என்பதைக் கவனிப்பது, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து தொகுதி மக்களுக்கு எந்தத் திட்டங்களை நிறைவேற்றிக் கொடுக்கலாம் என்பது குறித்து கருத்துகளை கேட்பது, பழுதடைந்த சாலைகளை பராமரிப்பதற்கான பணிகளை மேற்கொள்வது போன்றவையாகும். இதை விடுத்து, ஓர் இடத்தின் உரிமையாளருக்கு ஆதரவாக இடத்தை காலி செய்து கொடுக்குமாறு ஒரு தனியார் நிறுவனத்தை மிரட்டுவது என்பது சட்டமன்ற உறுப்பினரின் பணியே அல்ல.

ஓபிஎஸ் கண்டனம்
இது குறித்த வழக்கு காவல் துறையில் நிலுவையில் உள்ள நிலையில், காவல் துறையை முற்றிலும் புறக்கணித்து, தனியார் நிறுவனத்திற்குள் எம்.எல்.ஏ நுழைந்தது என்பது சட்ட விரோதமான செயல். இடத்தின் உரிமையாளருக்கு உண்மையிலேயே பாதிப்பு இருக்குமேயானால், நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளுமாறு சட்டமன்ற உறுப்பினர் ஆலோசனை கூற வேண்டுமே தவிர, சட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் கையில் எடுத்துக் கொள்வது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. இதுபோன்ற செயல் சட்டம் ஒழுங்கு சீரழிவிற்கு வழி வகுக்கும். தி.மு.க எம்.எல்.ஏவின் இந்தச் செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆளும்கட்சி தலையீடு இல்லாமல்
தற்போது, தாம்பரம் எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக செய்தி வந்துள்ளது. இருந்தாலும், இந்த வழக்கினை நீர்த்துப் போகச் செய்யாமல் பார்த்துக் கொள்வதோடு, இதுபோன்ற அத்துமீறலில் அரசியல்வாதிகள் ஈடுபடாதிருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, காவல்துறை மூலமும், நீதிமன்றத்தின் மூலமும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கையினை எடுத்து, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுமாறு அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications