"எதிர்க்கட்சி தலைவர் 4 முறை எழுந்து எழுந்து உட்கார்றாரு”.. ஓபிஎஸ் எழுப்பிய பிரச்சனை! சபாநாயகர் பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்க்கட்சி தலைவருக்கான மரியாதை சட்டப்பேரவையில் தரப்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், சட்டசபையில் இன்று தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது பலமுறை குறுக்கீடுகளை அனுமதிப்பது எந்த வகையில் நியாயம் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

சட்டசபையில் இன்று பேசிய திமுக எம்.எல்.ஏ ஓ.பன்னீர்செல்வம், "முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் இருந்து பேரவையில் இருக்கிறீர்கள். அதற்கென்று விதி இருக்கிறது, மரபு இருக்கிறது. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு மரியாதை தரவேண்டும். கடந்த வாரம் உதயநிதி பேச எழுந்தபோது 4 முறை அமர வைக்கப்பட்டார், இது எந்த வகையில் நியாயம்?

O Panneerselvam Demands Respect for LoP Udhayanidhi Stalin in Assembly

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசிக் கொண்டிருக்கும் போதே அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எழுந்து பேசுகிறார். நீங்கள் மற்றவர்களை பேச அழைக்கிறீர்கள். இது சரியா? கேபினட் அமைச்சர் பதவிக்கு இணையான எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குரியவருக்கு மரியாதை தர வேண்டும்" என்றார்.

அதற்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், "நீங்கள் பேசுவது எனக்கு புரிகிறது. முதலமைச்சர் பற்றி பேசும்போது, அமைச்சர் எழுந்து பேசாமல் போனால், இங்கு அமர்ந்திருப்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். நீங்கள் சொன்னதையும் கவனத்தில் எடுத்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+