இரண்டு பேருக்கும் வெற்றி தான்.. ஆனால் ஓபிஎஸ், இபிஎஸ் கோட்டையில் என்ன நிலவரம்.. சத்தியம் சர்வே
சென்னை: சத்தியம் டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் தேனி மாவட்டம் போடியில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் அபார வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாம்.
இதேபோல் சேலம் மாவட்டம் எடப்பாடியில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியும் அபார வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாம். ஆனால் அவர்களின் கோட்டைகளில் நிலவரம் வேறுமாதிரியாக உள்ளது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுகவின் தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். இருவருக்கும் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. இதில் 46 சதவீதம் ஆதரவுடன் ஓபிஎஸ் வெற்றி பெறுவார் என்கிறது சத்தியம் டிவி கணிப்பு

பழனிசாமி வெற்றி
இதேபோல் சேலம் மாவட்டம் எடப்பாடியில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக சார்பில் சம்பத்குமார் போட்டியிடுகிறார். இதில் எடப்பாடி பழனிசாமி 52 சதவீதம் வாக்குகள் பெற்று அபார வெற்றி பெறுவாராம். திமுகவின் சம்பத் குமார் 43% வாக்குகள் பெற வாய்ப்பு உள்ளதாக சத்தியம் டிவி கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது,

திமுக வெல்லும்
ஓ பன்னீர்செல்வத்தின் கோட்டையான தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கம்பம் தொகுதியில் திமுகவே வெல்லும் என்று சத்தியம் டிவி கருத்துக்கணிப்பில் கூறியுள்ளது. பெரியகுளம் தொகுதியில் திமுக 36%; அதிமுக 32%; மநீம 13%; அமமுக 12% வாக்குகள் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி தொகுதியில் திமுக 47%; அதிமுக 37%; அமமுக 7%; மநீம 2% வாக்குகள் பெற உள்ளது. கம்பம் தொகுதியில் திமுக 49%; அதிமுக 28%; மநீம 8%; அமமுக 5% வாக்குகள் பெற வாய்ப்பு உள்ளது.

மேட்டுர் ஆத்தூர்
எடப்பாடி பழனிசாமியின் கோட்டையான சேலம் மாவட்டத்தில் வீரபாண்டி தொகுதியில் திமுக 46%; அதிமுக 42% அமமுக 5%; மநீம 2% வாக்குகள் பெற வாய்ப்பு உள்ளது. மேட்டூர் தொகுதியில் பா.ம.க. 33%; திமுக 30%; மநீம 13%; நாம் தமிழர் 6% வாக்குகள் பெறும். சங்ககிரி தொகுதியில் அதிமுக 42%; திமுக 37% மநீம 9% வாக்குகள் பெறக்கூடும். ஆத்தூர் தொகுதியில் அதிமுக 45%; திமுக 37%; அமமுக 5% நாம் தமிழர் 4% பெறக்கூடும்.

திமுக அபாரம்
ஏற்காடு தொகுதியில் திமுக 46%; அதிமுக 40%; மநீம 8% பெற வாய்ப்பு உள்ளதாம். ஓமலூர் தொகுதியில் அதிமுக 47%; காங்கிரஸ் 41%; மநீம 8% வாக்குகளை பெறும் என்கிறது சத்தியம் கணிப்பு. இதேபோல் கெங்கவள்ளி தொகுதியில் திமுக 48%; அதிமுக 40%; மநீம 2% அமமுக 2% வாக்குகள் பெற வாய்ப்பு உள்ளதாம். எடப்பாடியில் அதிமுக 52%; திமுக 43%; அமமுக 4% வாக்குகள் பெறலாம். சேலம் மேற்கு: பாமக 43%; திமுக 40% மநீம 4% வாக்குகளும், சேலம் வடக்கு: திமுக 44%; அதிமுக 34%; மநீம 7% வாக்குகளும்,. சேலம் தெற்கில் அதிமுக 41%; திமுக 36% மநீம 5% அமமுக 4% வாக்குகளும் பெறக்கூடும் என்கிறது கணிப்பு.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications