Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதெல்லாம் வேற லெவல் பிளானிங்கா இருக்கே! ஓபிஎஸ்சை திணறடித்த ஓபிஎஸ்கள்.. நடுங்கிய "ராம்நாடு"!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் ஓ பன்னீர்செல்வத்திற்கு புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டு உள்ளது. அங்கே முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போஸ்டர் ஒட்டுவதில் கூட அவருக்கு பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

O Panneerselvam facing another big issue with posters in Ramanathapuram

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இது போக மற்ற நான்கு ஓபிஎஸ்களும் சுயேச்சைகளாக போட்டியிடுகின்றனர். அவர்களில் ஒருவர் உசிலம்பட்டியில் வசிப்பவர், மற்றொருவர் காட்டூரைச் சேர்ந்தவர், இருவர் மதுரையைச் சேர்ந்தவர்கள். எல்லோரும் சுயேச்சை என்பதால் கண்டிப்பாக வாக்குகள் சிதறும் வாய்ப்புகள் உள்ளன.

இதில் வேட்பாளர் நம்பர் 61ன் பெயர் பன்னீர்செல்வம். இவரின் அப்பா பெயர் ஒட்டகரத்தேவர். முன்னாள் முதல்வரின் ஓ பன்னீர்செல்வம் தந்தையின் பெயரும் ஒட்டகரத்தேவர். தமிழில் பன்னீர்செல்வம் என்ற பெயர் பொதுவானது, ஒட்டகரத்தேவர் என்பது பொதுவானது அல்ல. ஆனாலும் அதே பெயர் கொண்டவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

O Panneerselvam facing another big issue with posters in Ramanathapuram

'ஓ'வில் தொடங்கும் பெயர் அரிது. மற்ற பன்னீர்செல்வங்களின் அப்பாக்களின் முறையே ஒச்சப்பன், ஒய்யாரம் மற்றும் ஒய்யாத்தேவர் ஆகும். இவர்களுக்கு விரைவில் சுயேச்சை சின்னம் ஒதுக்கப்படலாம்.

ஏற்பு; ஓ பன்னீர்செல்வம் உட்பட மொத்தமாக 5 ஓ பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்கள் இதில் ஏற்கப்பட்டுள்ளன. இதனால் அங்கே போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டு உள்ளது.

அதன்படி ஓ பன்னீர்செல்வத்திற்கு பலா பழ சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இன்னொரு ஓ பிஎஸ்சுக்கு திராட்சை சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டு சின்னமும் பார்க்க கொஞ்சம் ஒரே மாதிரியாக இருப்பது ஓ பன்னீர்செல்வத்திற்கு சிக்கலாக மாற வாய்ப்பு உள்ளது. ஒரே மாதிரி இரண்டு சின்னமும் இருப்பதால் ஓ பன்னீர்செல்வத்திற்கு சிக்கல் ஏற்படலாம்.

புதிய சிக்கல்; இது போக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போஸ்டர் ஒட்டுவதில் கூட அவருக்கு பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. அங்கே ஓ பன்னீர்செல்வம் தன்னுடைய பலா பழ சின்னத்தில் எங்கெல்லாம் போஸ்டர் ஒட்டுகிறாரோ அங்கெல்லாம் அதே கலரில் ஓபிஎஸ் என்று போட்டு மற்ற 4 போட்டியாளர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.

அவர் போஸ்டரில் இருக்கும் அதே வாக்கியத்தை பயன்படுத்தி, அதே போன்ற பெயர்களை வைத்து போஸ்டர் ஒட்டி வருகின்றனர். பார்க்க எது உண்மையான ஓ பன்னீர்செல்வம் என்று தெரியாத அளவிற்கு பக்கா பிளானிங்குடன் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.

5 பேர் தாக்கல்: இப்படி 5 பேர் ஒரே பெயரில் மனு தாக்கல் செய்ததன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றிலேயே மிகப்பெரிய சாதனை ஒன்று ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் நடந்துள்ளது. ஏற்கனவே இப்படி பல முறை நடந்துள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் மூத்த அரசியல்வாதி கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் போட்டியிட்டார். அவர் எதிர்த்து 6 ராமச்சந்திரன் சுயேச்சையாக போட்டியிட்டனர். அதுதான் அதிக நபர்கள் ஒரே பெயரில் போட்டியிட்ட தொகுதி ஆகும்.

அதற்கு அடுத்து ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் 5 ஓ பிஎஸ் போட்டியிடுவது இரண்டாவது பெரிய சாதனை ஆகும்.

இது போல நடப்பது தற்செயல் நிகழ்வு அல்ல, இது கவனமாக கட்டமைக்கப்பட்ட அரசியல் திட்டமிடல் மூலம் நடப்பது ஆகும். உதாரணமாக 2016 சட்டமன்றத் தேர்தலில் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த வி.சி.க தலைவர் தொல் திருமாவளவனின் தோல்விக்கு பெயர் குழப்பம் முக்கிய காரணம். அவரின் பெயரை கொண்ட டி.திருமாவளவன், சுயேட்சையாக 289 வாக்குகள் பெற்றார். இதுவும் கூட திருமா தோல்வி அடைய காரணம் ஆகும்.

அதே போன்ற சவால் தற்போது ஓ பன்னீர்செல்வத்திற்கு ஏற்பட்டு உள்ளது.

ஓ பன்னீர்செல்வம் சுயேச்சை ஆனது எப்படி?:

ஓ பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் தனி சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் ஓ பன்னீர்செல்வத்திற்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. 6 இடங்களை அவர் கேட்ட நிலையில் 4 இடங்களை கொடுக்க பாஜக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. பாஜக கூட்டணிக்கு வர எடப்பாடி பழனிசாமி இதற்கு இறங்கி வராத காரணத்தால் ஓ பன்னீர்செல்வத்திற்கு சீட் கொடுக்க பாஜக ரெடியாகிவிட்டது. ஆனால் உங்களுக்கு இரட்டை இலை சின்னம் இல்லை.

அப்படி இருக்க தனியாக சின்னத்தில் நிற்க வேண்டாம். உங்கள் மகன் உள்ளிட்டோர் நிற்க வேண்டும் என்றால்.. தனியாக சின்னத்தில் நிற்க வேண்டாம். பாஜகவின் தாமரை சின்னத்திலேயே நில்லுங்கள். அதுதான் முக்கியம். அப்போதுதான் நீங்களும் வெல்ல முடியும்.. தனி சின்னத்தில் நின்றால் 1 சீட்தான் என்று பாஜகவினர் நெருக்கடி கொடுத்துள்ளனர்.

கோரிக்கை: இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்துள்ளார். அப்போது, நாம் இரட்டை இலைக்குத்தான் போராட வேண்டும். தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் நாம் பாஜக என்று ஆகிவிடும். அதிமுகவில் சேரவே முடியாது.

தனி சின்னத்தில் நிற்க வேண்டும். ஆனால் தனி சின்னத்தில் நின்றால் 1 சீட்தான் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. தனி சின்னத்தில் 2 - 3 சீட்டாவது வேண்டும் என்று கேளுங்கள் என்று கூறியுள்ளனர். இதையடுத்து வேறுவழியின்றி சுயேச்சை சின்னத்தில் ராமநாதபுரத்தில் போட்டியிட ஓ பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+