Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிடிஆர் வெள்ளை அறிக்கையில் சொன்ன ஒவ்வொரு விஷயத்திற்கும் பதிலடி கொடுத்த ஓபிஎஸ்.. மொத்தம் 39 பக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : பட்ஜெட்டிற்கு முன்பு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கை குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் 39 பக்கத்தில் நீண்ட பதிலடி கொடுத்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : " சட்டமன்றப் பேரவை நடவடிக்கைகளை இரண்டு நாட்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணித்துள்ளதால் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை மற்றும் 2021-2022 ஆம் ஆண்டு திருத்திய நிதிநிலை அறிக்கை மீதான எனது கருத்துக்களை நான் அறிக்கை வாயிலாக தெரிவிக்க விரும்புகிறேன்.

மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையிலே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படவில்லை, பேருந்துக் கட்டணம் ஏற்றப்படவில்லை, சொத்து வரி அதிகரிக்கப்படவில்லை, எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. கடினமான பொருளாதாரச் சூழலில் மக்களின் தலையில் சுமையை ஏற்றிவிடாமல், அதே சமயம், பொருளாதாரம் மேலும் நலிந்துவிடாமல் செலவுகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில், வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டாலும், கடன் சுமை அதிகரித்தாலும் அதை அரசு சமாளிக்க முடியும் என்ற உறுதியோடு மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு செயல்பட்டது என்பதற்கு இது ஒரு சிறந்த சான்றாக விளங்குகிறது. வரி வருவாயில் ஏற்ற இறக்கம் என்பது பொருளாதார சுழற்சியில் இயல்பான ஒன்றுதான். இவற்றையும் சமாளித்து மக்களுக்கு தொடர்ந்து நன்மை செய்வதுதான் ஒரு நல்ல அரசுக்கு அடையாளம். இதைத் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்தது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் வெள்ளை அறிக்கை குறித்த எனது கருத்துக்களை நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

உள்நாட்டு உற்பத்தி

உள்நாட்டு உற்பத்தி

வெள்ளை அறிக்கையில் பக்கம் 4 முதல் 7 வரை, வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பற்றியும், 2020-21 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் வருவாய்ப் பற்றாக்குறை 61 ஆயிரத்து 320 கோடி ரூபாய் என்றும், நிதிப் பற்றாக்குறை 92 ஆயிரத்து 305 கோடி ரூபாய் என்றும் சுட்டிக்காட்டப்பட்டு இருப்பதோடு, இவற்றை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிட்டும் காண்பிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு மாநிலத்தினுடைய நிதி மேலாண்மை என்பது, பொருளாதாரப் போக்கு, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, மாநில அரசின் சொந்த வருவாய் வளர்ச்சி, மத்திய அரசின் வரிப் பங்கீடு, மானியம், செலவினங்கள் ஆகியவற்றை பொருத்தே அமைந்துள்ளது. நிதி நிருவாகத்தின் முக்கிய காரணி அல்லது மதிப்பீடு என்பது, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதிப் பற்றாக்குறை எத்தனை விழுக்காடு என்பதுதான். இதன்படி, 2016-2017 ஆம் ஆண்டைத் தவிர, 2011-2012-லிருந்து 2018-2019 வரையிலான ஆண்டுகளில், நிதிப் பற்றாக்குறை, 3 விழுக்காட்டிற்கு குறைவாகவேதான் இருந்திருக்கிறது. மந்தமான பொருளாதார சூழல் காரணமாகவும், மத்திய வரியில் தமிழ்நாட்டிற்கான பங்கு கணிசமாக குறைந்துவிட்டதாலும், 2019-2020ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 3.26 சதவிகிதமாக இருந்தது. இதே போன்று, கடந்த பத்து ஆண்டுகளில் 2011-2012 மற்றும் 2012-2013 ஆம் ஆண்டுகளில், வருவாய் உபரி இருந்தது. 2013-2014 ஆம் ஆண்டிலிருந்து பொருளாதாரப் பின்னடைவு காரணமாக, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் மாநிலத்தின் சொந்த வருவாய் ஆகியவை, குறையத் தொடங்கியது.

திறமையின்மையா

திறமையின்மையா

வெள்ளை அறிக்கையில் 2016-17 ஆம் ஆண்டிற்குப் பிறகு மாநில நிதி நிலையில் பெரிய சரிவு ஏற்பட்டதாகவும், அதற்கு மாநில அரசின் திறமையின்மையே காரணம் என்பது போலவும், ஒரு உண்மைக்கு மாறான தோற்றத்தை, மக்கள் மனதில் பதிய வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

2016-17-க்கு பிறகு மாநில வரி வருவாயில் போதிய வளர்ச்சியில்லை என்பதற்கு, பொருளாதார மந்த நிலையும், பொருட்கள் மற்றும் சேவைகள் வரி நடைமுறைப்படுத்தியதும் தான் காரணம். அதேபோல் வருவாய் வரவு குறைந்ததற்கு முக்கியக் காரணம், மாநில வரி வருவாயில் போதிய வளர்ச்சி இல்லை என்பதுடன், 14-வது நிதிக் குழு பரிந்துரைப்படி, 2015-16-க்குப் பிறகு, தமிழ்நாட்டிற்கான வரிப் பகிர்வு ஆண்டுதோறும் 7,000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு 2016-17-ல் மத்திய நிதித் திட்டங்களில் சில மாற்றங்களை கொண்டு வந்து, சில திட்டங்களை கைவிட்டதுடன், மாநில அரசின் பங்கை 60 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக உயர்த்தியது.மத்திய அரசால் கைவிடப்பட்ட சில திட்டங்களை, மக்கள் நலன் கருதி, நாம் தொடர்ந்து செயல்படுத்தினோம். இவற்றால் கூடுதல் நிதிச் சுமை மாநிலத்திற்கு ஏற்பட்டதால், ஆண்டுக்கு 7,000 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டது. இது தவிர, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் 22,500 கோடி ரூபாய் கடனை மாநில அரசு ஏற்றுக்கொண்டது. இதனால், வருவாய்ப் பற்றாக்குறை அதிகரித்து, மாநிலத்தின் கடன் சுமை உயர்ந்தது. பின்னர் ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கடனில் ஒரு பகுதி, அதாவது, 4,563 கோடி ரூபாய், ஆண்டுதோறும் வருவாய்க் கணக்கில் மானியமாக சேர்க்கப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்டதால் 15,000 கோடி ரூபாய் செலவு கூடுதலாக அரசுக்கு ஏற்பட்டது.இவற்றில் சிலவற்றை மட்டும் வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டுவிட்டு, சிலவற்றை வசதியாக மறைத்து, நிர்வாக காணத்தால் வரி குறைந்துவிட்டது போல் ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 2017-18 ஆம் ஆண்டு பொருட்கள் மற்றும் சேவைகள் வரி அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக, மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் அளவு, ஏற்கெனவே இருந்த அளவை விட குறைந்துவிட்டது. இது வெள்ளை அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த நிலை 2019-20-லும் தொடர்ந்தது. GST அமலுக்குப் பிறகு, Tax to GSDP, எல்லா மாநிலங்களிலும் சரிந்துள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகள் வரி, 2016-2017-ல் நடைமுறைப்படுத்திய பின், மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் ஒரு சதவீதம் அளவு, வணிக வரி குறைந்துவிட்டது என வெள்ளை அறிக்கை பக்கம் 34-ல் அட்டவணை 19-லும், பக்கம் 40, அட்டவணை 21-லும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் வரியில் மாநில அரசின் பங்கும், 2019-20-ல் முந்தைய ஆண்டு பெற்ற, 30,638 கோடி ரூபாயிலிருந்து 25,392 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது. இவையெல்லாம் வரி வருவாய் மற்றும் வருவாய் வரவு குறையவும், வருவாய் செலவு அதிகரிக்கவும் காரணம். இதில் நிர்வாகத் திறமையின்மை எங்கு வருகிறது என்று புரியவில்லை.

திருத்திய மதிப்பீடு

திருத்திய மதிப்பீடு

இந்த நிலையில், 2020-21 ஆம் ஆண்டிற்கான மொத்த வருவாய், 2 இலட்சத்து 19 ஆயிரத்து 438 கோடி ரூபாய் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா தொற்றுநோய் காரணமாக, திருத்திய மதிப்பீட்டில் 1 இலட்சத்து 80 ஆயிரத்து 700 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, கிட்டத்தட்ட 40,000 கோடி சரிந்திருக்கிறது. கொரோனா தொற்றின் ரூபாய் அளவுக்கு வருவாய் காரணமாக, தமிழ்நாட்டின் பொருளாதாரம் மட்டுமல்ல, இந்தியப் பொருளாதாரம், உலகப் பொருளாதாரம் என அனைத்துமே பாதிக்கப்பட்டன. இது ஓர் அசாதாரண சூழ்நிலை. எனவே, இதனை அடிப்படையாக வைத்து மட்டுமே, தமிழ்நாட்டின் நிதி நிலைமையை கணிப்பதும், வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை உயர்ந்துவிட்டது. என அச்சத்தை ஏற்படுத்துவதும், பொருத்தமாக இருக்காது என்பதை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
இந்த திருத்திய நிதிநிலை அறிக்கையிலும், கொரோனாவை காரணம் காட்டி, அசாதாரண நிலை உள்ளதாகக் குறிப்பிட்டு, வரி வருவாய், வருவாய் வரவு ஆகியவை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை ஆகியவை, கணிசமாக இதற்குக் கூடுதல் கடன் பெறப் போவதாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை இந்தத் தருணத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

கடன் இரட்டிப்பாகும்

கடன் இரட்டிப்பாகும்

அடுத்தபடியாக, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், தமிழ்நாட்டின் வருவாய்ப் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை சதவீதத்தினை, 'இணையான மாநிலங்கள்' என்ற அடிப்படையில், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுடன் ஒப்பீடு செய்து, வெள்ளை அறிக்கை பக்கம் 9 மற்றும் பக்கம் 10-ல் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு சந்தித்த பல பிரச்சனைகளை மேற்கண்ட மாநிலங்கள் சந்திக்கவில்லை. உதாரணமாக, 14-வது நிதிக் குழு பகிர்வில் இம்மாநிலங்கள் பாதிக்கப்படவில்லை. தமிழ்நாடு தான் பாதிக்கப்பட்டது. மாறாக இந்த மாநிலங்கள் கூடுதல் பலனைப் பெற்றன. அதேபோல, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தொடர்பான பிரச்சனைகள், இந்த மாநிலங்களில் இல்லை. எனவே, இந்த மாநிலங்களுடன் தமிழ்நாட்டை ஒப்பிடுவது அடிப்படையில் தவறான ஒன்று. வெள்ளை அறிக்கை பக்கம் 13-ல், தமிழ்நாடு அரசினுடைய கடன்களின் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை கடன் இரட்டிப்பாவது என்பது, சாதாரணமான ஒன்றுதான். தி.மு.க. ஆட்சியிலும் அப்படித்தான் ஏற்பட்டது. போக்கு குறித்து, எடுத்துரைக்கப்பட்டு இருக்கிறது.

தாண்டவில்லை

தாண்டவில்லை

மாநில மொத்த உற்பத்தி மதிப்பு உயரும்போது, மாநில உற்பத்தி மதிப்பில் கடன் அளவு எவ்வளவு உள்ளது என்பதுதான் சரியான அளவுகோல். இந்தக் கடன் அளவு, நிதிக் குழு நிர்ணயித்த அளவைத் தாண்டவில்லை. இதன்படி பார்த்தால், 2020-21 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 4 இலட்சம் கோடி ரூபாயாக இருக்க வேண்டிய கடன், 4 இலட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. இதற்குக் காரணம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்காக, 22,500 கோடி ரூபாய் கூடுதலாக கடன் வாங்கியது, கொரோனா தொற்று நோய் காரணமாக ஏற்பட்ட வருவாய் இழப்பு மற்றும் கூடுதல் செலவு, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி காரணமாக மாநில அரசின் சொந்த வருவாயில் குறைவான வளர்ச்சி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் நிதி உதவி, மத்திய அரசின் வரிப் பகிர்வில் சரிவு ஆகியவை ஆகும்.

மத்திய அரசு கொண்டு வந்த மாற்றம்

மத்திய அரசு கொண்டு வந்த மாற்றம்


வெள்ளை அறிக்கையில் 2016-17 ஆம் ஆண்டிற்குப் பிறகு மாநில நிதி நிலையில் பெரிய சரிவு ஏற்பட்டதாகவும், அதற்கு மாநில அரசின் திறமையின்மையே காரணம் என்பது போலவும், ஒரு உண்மைக்கு மாறான தோற்றத்தை, மக்கள் மனதில் பதிய வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 2016-17-க்கு பிறகு மாநில வரி வருவாயில் போதிய வளர்ச்சியில்லை என்பதற்கு, பொருளாதார மந்த நிலையும், பொருட்கள் மற்றும் சேவைகள் வரி நடைமுறைப்படுத்தியதும் தான் காரணம். அதேபோல் வருவாய் வரவு குறைந்ததற்கு முக்கியக் காரணம், மாநில வரி வருவாயில் போதிய வளர்ச்சி இல்லை என்பதுடன், 14-வது நிதிக் குழு பரிந்துரைப்படி, 2015-16-க்குப் பிறகு, தமிழ்நாட்டிற்கான வரிப் பகிர்வு ஆண்டுதோறும் 7,000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு 2016-17-ல் மத்திய நிதித் திட்டங்களில் சில மாற்றங்களை கொண்டு வந்து, சில திட்டங்களை கைவிட்டதுடன், மாநில அரசின் பங்கை 60 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக உயர்த்தியது.மத்திய அரசால் கைவிடப்பட்ட சில திட்டங்களை, மக்கள் நலன் கருதி, நாம் தொடர்ந்து செயல்படுத்தினோம். இவற்றால் கூடுதல் நிதிச் சுமை மாநிலத்திற்கு ஏற்பட்டதால், ஆண்டுக்கு 7,000 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டது. இது தவிர, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் 22,500 கோடி ரூபாய் கடனை மாநில அரசு ஏற்றுக்கொண்டது. இதனால், வருவாய்ப் பற்றாக்குறை அதிகரித்து, மாநிலத்தின் கடன் சுமை உயர்ந்தது. பின்னர் ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கடனில் ஒரு பகுதி, அதாவது, 4,563 கோடி ரூபாய், ஆண்டுதோறும் வருவாய்க் கணக்கில் மானியமாக சேர்க்கப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்டதால் 15,000 கோடி ரூபாய் செலவு கூடுதலாக அரசுக்கு ஏற்பட்டது.இவற்றில் சிலவற்றை மட்டும் வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டுவிட்டு, சிலவற்றை வசதியாக மறைத்து, நிர்வாக காணத்தால் வரி குறைந்துவிட்டது போல் ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், 2017-18 ஆம் ஆண்டு பொருட்கள் மற்றும் சேவைகள் வரி அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக, மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் அளவு, ஏற்கெனவே இருந்த அளவை விட குறைந்துவிட்டது. இது வெள்ளை அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த நிலை 2019-20-லும் தொடர்ந்தது. GST அமலுக்குப் பிறகு, Tax to GSDP, எல்லா மாநிலங்களிலும் சரிந்துள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகள் வரி, 2016-2017-ல் நடைமுறைப்படுத்திய பின், மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் ஒரு சதவீதம் அளவு, வணிக வரி குறைந்துவிட்டது என வெள்ளை அறிக்கை பக்கம் 34-ல் அட்டவணை 19-லும், பக்கம் 40, அட்டவணை 21-லும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் வரியில் மாநில அரசின் பங்கும், 2019-20-ல் முந்தைய ஆண்டு பெற்ற, 30,638 கோடி ரூபாயிலிருந்து 25,392 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது. இவையெல்லாம் வரி வருவாய் மற்றும் வருவாய் வரவு குறையவும், வருவாய் செலவு அதிகரிக்கவும் காரணம். இதில் நிர்வாகத் திறமையின்மை எங்கு வருகிறது என்று புரியவில்லை.

நிதி பற்றாக்குறை

நிதி பற்றாக்குறை

இந்த நிலையில், 2020-21 ஆம் ஆண்டிற்கான மொத்த வருவாய், 2 இலட்சத்து 19 ஆயிரத்து 438 கோடி ரூபாய் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா தொற்றுநோய் காரணமாக, திருத்திய மதிப்பீட்டில் 1 இலட்சத்து 80 ஆயிரத்து 700 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, கிட்டத்தட்ட 40,000 கோடி சரிந்திருக்கிறது. கொரோனா தொற்றின் ரூபாய் அளவுக்கு வருவாய் காரணமாக, தமிழ்நாட்டின் பொருளாதாரம் மட்டுமல்ல, இந்தியப் பொருளாதாரம், உலகப் பொருளாதாரம் என அனைத்துமே பாதிக்கப்பட்டன. இது ஓர் அசாதாரண சூழ்நிலை. எனவே, இதனை அடிப்படையாக வைத்து மட்டுமே, தமிழ்நாட்டின் நிதி நிலைமையை கணிப்பதும், வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை உயர்ந்துவிட்டது. என அச்சத்தை ஏற்படுத்துவதும், பொருத்தமாக இருக்காது என்பதை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

தமிழ்நாடு கடன்

தமிழ்நாடு கடன்

வெள்ளை அறிக்கை பக்கம் 69, அட்டவணை 41-ல், வருவாய் வரவில் வட்டிச் செலவு, 2006-07-ல் 15.27 சதவீதமாக இருந்தது, 2020-21-ல் 13.83 சதவீதமாக குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. இந்தப் புள்ளி விவரங்களின் அடிப்படையில் கடன் சுமையும், வட்டி செலவினமும் கட்டுக்குள்தான் உள்ளது என்பது தெளிவாகிறது. இருப்பினும், அரசியல் ஆதாயத்திற்காக, இந்த அரசுக் கடனை குடும்பக் கடனாக கணக்கிட்டு, இல்லாதப் பிரச்சனையை பூதாகாரமாக்கி, மக்களை அச்சுறுத்தும் வகையில் இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளை அறிக்கை பக்கம் 16-ல், 31-03-2019 அன்று தமிழ்நாட்டின் மொத்த கடன் பொறுப்புகள், 4 இலட்சத்து ஓர் ஆயிரத்து 503 கோடி ரூபாய் என்றும், இது, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 24.6 விழுக்காடு என்றும், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, இது அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக, மத்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வு சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள புள்ளி விவரங்கள்கூட உத்தேசமானவைதான்.இறுதிப் புள்ளி விவரம் வெள்ளை அறிக்கை பக்கம் 13, அட்டவணை-6-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, 31-03-2019-ல் கடன் அளவு. 3 இலட்சத்து 45 ஆயிரத்து 751 கோடி ரூபாயாகவும், 31-03-2020-ல் கடன் அளவு, 3 இலட்சத்து 97 ஆயிரத்து 24 கோடி ரூபாயாகவும், 31-03-2021-ல் கடன் அளவு, 4 இலட்சத்து 85 ஆயிரத்து 502 கோடி ரூபாயாகவும் உள்ளது. தமிழ்நாட்டின் இந்தக் கடன் அளவு கூட, பதினான்காவது நிதிக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கடன் சதவிகித வரம்பான 25 விழுக்காட்டிற்கும் கீழ்தான் உள்ளது என்பதையும், நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மற்ற மாநிலங்கள்

மற்ற மாநிலங்கள்

இந்தியாவிலேயே தமிழ்நாட்டைப் போன்று அதிகமான செலவில் அதிகமான மக்கள் பயன் பெறுகின்ற, மக்கள் நலத் திட்டங்கள், எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படவில்லை. வெள்ளை அறிக்கையில் ஒப்பிடப்பட்டுள்ள மாநிலங்களான, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், தமிழ்நாட்டில் இருப்பது போல உணவு மானியம், மின்சார 'மானியம், கல்வி உதவித் தொகைகள், வீட்டு வசதித் திட்டங்கள், மருத்துவ வசதிகள், ஓய்வூதியத் திட்டங்கள், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு மற்றும் பொருட்கள் வழங்கும் திட்டம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும் மடிக்கணினி திட்டம், கட்டணமில்லாக் கல்வி, மாணவ, மாணவியருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, ஏழைப் பெண்களுக்கான பேறுகால உதவித் திட்டம், தாலிக்கு தங்கத்துடன் கூடிய திருமண உதவித் திட்டம் போன்ற மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறதா என்றால், நிச்சயமாக இல்லை.

எங்கள் நிலைப்பாடு

எங்கள் நிலைப்பாடு

பொது விநியோகத் திட்டத்திற்கு மட்டும், தமிழ்நாட்டில் 9,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் பாதி தொகையை கூட, மேற்கண்ட மாநிலங்கள் செலவழிப்பதில்லை. அதேபோல், மின்சார மானியம் கணிசமாக உயர்ந்துள்ளதை வெள்ளை அறிக்கையே சுட்டிக்காட்டியுள்ளது. இதில் தேவையற்ற செலவு எதுவும் இல்லை என்பது எங்கள் நிலைப்பாடு. குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டிலும் மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருந்தால், இன்றைக்கு வருவாய் உபரி மாநிலமாக, நிதி உபரி மாநிலமாக தமிழ்நாடு நிச்சயம் இருந்திருக்கும். ஆனால், இதனை மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா வழியில் நடைபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு விரும்பவில்லை. இது "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" என்ற பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிக்கேற்ப ஆட்சியை நடத்தியதற்கு, சிறந்த எடுத்துக்காட்டு. எனவே, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுடன் தமிழ்நாட்டை ஒப்பிடுவது, தவறான கண்ணோட்டம் என்பதை நான் எடுத்துக்கூற கடமைப்பட்டிருக்கிறேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தால் செய்யப்பட்ட செலவினங்கள் அனைத்தும், மக்களுக்குத் தேவையானவை தான். "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்பதற்கேற்ப, மக்களுக்காக ஆட்சி நடத்திய அரசு ஜெயலலிதா அவர்களின் வழிகாட்டுதலோடு நடைபெற்ற அதிமுகு அரசு, என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். வெள்ளை அறிக்கை, பக்கம் 31-ல், மாநிலத்தின் வருவாய் வரவினங்களின் முக்கியக் கூறாக இருக்கும், மாநில சொந்த வரி வருவாய், 2013-14 ஆம் ஆண்டு வரை, மொத்த வருவாயில் ஏறக்குறைய 70 சதவீதமாக இருந்தது, என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், அதற்கு கீழுள்ள அட்டவணையைப் பார்த்தால், மாநிலத்தின் சொந்த வருவாய் ஆனது, 2007-2008 ஆம் ஆண்டிற்கான மொத்த வருவாயில், 62.33 விழுக்காடாகவும், 2008-2009 ஆம் ஆண்டில் 61.20 விழுக்காடாகவும் 2009-2010 ஆம் ஆண்டில் 65.44 விழுக்காடாகவும் இருந்திருக்கிறது. இவையெல்லாம் ஏறக்குறைய 70 விழுக்காடு என்று குறிப்பிடுவது சரிதானா? அதாவது, 2006-07 முதல் 2010-11 வரையிலான தி.மு.க. ஆட்சியையும் சேர்த்து 70 விழுக்காடு என்பது முற்றிலும் தவறான தகவல் ஆகும். ஆனால், 2012-13 ஆம் ஆண்டில் 72.10 விழுக்காடாக உயர்த்தியது மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு என்பதைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

கட்டணங்கள்

கட்டணங்கள்

வெள்ளை அறிக்கை பக்கம் 20 மற்றும் 21 இல் உத்தரவாதங்கள் குறித்து குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதில் 2019-20-ஆம் அரசின் ஆண்டில், 47,318 கோடி ரூபாயாக இருந்த அரசின் உத்தரவாதங்கள், 2020-21 ஆம் ஆண்டு, 91,818 கோடி ரூபாயாக உயர்ந்தது என்றும், இவற்றில் மின் துறைக்கான உத்தரவாதத் தொகை, 82,916 கோடி ரூபாய் என்றும், தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக, தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது என்றும், குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மின்சாரக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் போன்றவற்றை உயர்த்தி, மக்களின் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தாததன் காரணமாக, இந்த நிலைமை ஏற்பட்டது. ஒருவேளை, கட்டணங்கள் ஏற்றப்பட்டிருந்தால், எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக, அதை எதிர்த்து, அப்போது தி.மு.க. போராட்டத்தில் குதித்திருக்கும். இப்போது ஆட்சிக்கு வந்துவிட்டதால் மாற்றிப் பேசுகிறார்கள். பொதுப் பணிகளை தொடர்ந்து மக்களுக்கு வழங்க வேண்டிய கடமை, அரசிற்கு இருந்ததன் காரணமாக, அரசின் உத்தரவாதங்கள் அதிகரித்து இருக்கிறது. உத்தரவாதங்களை குறைக்க இந்த அரசு. என்ன நடவடிக்கை எடுக்கப் அரசின் உத்தரவாதங்களை குறைக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதற்கான பதில் வெள்ளை அறிக்கையிலும் இல்லை, நிதிநிலை அறிக்கையிலும் இல்லை. உதாரணமாக, விவசாயத்திற்காக மின் பகிர்மானக் கழகத்திற்கு வழங்க வேண்டிய மானியத் தொகையான 8,225 கோடி ரூபாயை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு, முழுமையாக ஒதுக்கவில்லை என்று கூறிவிட்டு, இந்த ஆண்டு விவசாய நிதிநிலை அறிக்கையில், மின் மானியமாக 4,305 கோடி ரூபாய் தான் இந்த அரசால் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. நாங்கள் செய்ததைத்தான் நீங்களும் செய்து இருக்கிறீர்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு அறிக்கையில் ஓ பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். மொத்தம் 39 பக்கத்திற்கு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மேலும் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டுள்ளார். 2013ல் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த மக்கள் தொகை எண்ணிக்கை கணக்கீடு முறை குறித்த அறிவிப்புகளால் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் மத்திய தொகுப்பில் குறைந்துவிட்டதாகவும் ஓபிஎஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+