அமமுக + பாஜக.. ஓ.பன்னீர்செல்வம் அறிவித்த 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி! சறுக்கும் அதிமுக!
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுக உடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைவான காலமே இருக்கும் நிலையில், அதை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு அமைத்த கூட்டணியை வைத்தே நாடாளுமன்ற தேர்தலையும் திமுக எதிர்கொள்கிறது. அதேபோல பாஜக 11 தொகுதிகளை குறி வைத்து களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறது. சமீபத்தில் பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்திருப்பதால், அதிமுகவும் தற்போது தனியாக களத்தை எதிர்கொண்டு வருகிறது.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் கூட்டணியை அறிவித்திருக்கிறார். அதாவது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக ஓபிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
திருச்சியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த நிலையில், இன்று ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் ஆலோசனை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். மாவட்ட செயலாளர்கள் சிறப்பாக செயல்பட்டால் 5 சவரன் தங்கச் செயின் பரிசாக வழங்கப்படும் என்று ஆலோசனையில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், "அதிமுக பொதுச்செயலாளர் பதவியை பழனிசாமி தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும். பழனிசாமி ராஜினாமா செய்யும் வரை தொண்டர்கள் உரிமையை காக்கும் போராட்டம், யுத்தம் தொடரும். பதவி கொடுத்த சசிகலாவுக்கே நம்பிக்கை துரோகம் செய்தவர் பழனிச்சாமி" என்று கூறினார். பாஜக உடன் கூட்டணி வைப்பீர்களா என்று எழுப்பிய கேள்விக்கு, "3ஆவது முறையாக மோடியே பிரதமராக வருவார். வாய்ப்பு தந்தால், டெல்லி சென்று பிரதமரை சந்திப்பேன்" என்று கூறியுள்ளார்.
ஓ.பன்னீர் செல்வத்தின் இந்த அறிவிப்பு எடப்பாடி தரப்பை கடுமையாக பாதிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை பிரித்து கொடுத்ததால் அவர் மீது முக்குலத்தோர் சமுதாயம் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல டிடிவி தினகரன், சசிகலாவை ஓரங்கட்டியதிலும் இந்த அதிருப்தி நீடிக்கிறது.
தென் மாவட்டங்களை பொறுத்த அளவில் மொத்தம் 35 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதில் திமுக கடந்த முறை 25 தொகுதிகளிலும் அதிமுக 14 தொகுதிகளையும் வெற்றி பெற்று இருக்கிறது. ஆனால் டிடிவி தினகரன் மட்டும் ஏறத்தாழ 4 லட்சம் வாக்குகளை பெற்றிருக்கிறார். குறிப்பாக ராமநாதபுரம் சிவகங்கை தொகுதிகளில் அதிகமான அளவில் தினகரன் வாக்குகளை வாங்கி இருக்கிறார்.
அதேபோல கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவில் இபிஎஸ்-ஓபிஎஸ் என ஒன்றாக இருந்தபோதே தென் மண்டலத்தில் மொத்தமுள்ள 10 எம்.பி தொகுதிகளில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை ஓபிஎஸ்-டிடிவி தினகரன் கைகோர்ப்பது எடப்பாடியை கலக்கத்தில் ஆழ்த்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications