அதிமுகவுக்கு கூட்டணி கதவு திறப்பு? அமித்ஷாவின் ஓபன் டாக்! எல்லாம் 'நல்ல எண்ணம் தான்' ஓபிஎஸ் கருத்து
சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்காக கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கும் என அமித்ஷா கூறியிருப்பது அவரது நல்ல எண்ணத்தை காட்டுவதாக ஓபிஎஸ் தெரிவித்திருக்கிறார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலை எந்த கூட்டணியை வைத்து திமுக எதிர்கொண்டதோ, அதே கூட்டணியுடன் லோக்சபா தேர்தலுக்கு திமுக தயாராகி வருகிறது. ஆனால் மறுபுறம் அதிமுகவும், பாஜகவும் இரு துருவங்களாக பிரிந்து தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளன. ஆனால், இதுவரை இந்த கட்சிகள் தங்கள் கூட்டணியை இறுதி செய்யவில்லை.

கடந்த முறை பாஜகவும், ஒபிஎஸ்ஸுடன் கூடிய அதிமுகவும் சேர்ந்துதான் தேர்தலை எதிர்கொண்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் டிடிவி தினகரன், சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகியோருக்கு பலம் இருப்பதாக சொல்லப்பட்டாலும் மொத்தம் இருந்த 35 எம்எல்ஏ தொகுதிகளில் அதிமுக 14 தொகுதிகளிலும், பாஜக இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்த முறை ஓபிஎஸ் அதிமுகவிலிருந்து கழற்றிவிடப்பட்டிருக்கிறார், பாஜகவும் பிரிந்திருக்கிறது. அதிமுகவை பொறுத்த அளவில், பாஜக இல்லாமல் இந்த தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டிருக்கிறது. ஆனால் பாஜக அதற்கு தயாராக இல்லை. அதிமுக+பாமக+தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை கொண்டுதான் தேர்தலை எதிர்கொள்ள பாஜக தலைமை திட்டமிட்டிருக்கிறது. இதற்காகவே ஜி.கே.வாசனை தூது அனுப்பியிருக்கிறது. ஆனால் அதிமுக இதுவரை அசைந்து கொடுக்கவில்லை.
அதிமுகவை பொறுத்த வரையில், சிறுபான்மையினரின் வாக்குகளை முழுமையாக கைப்பற்றுவது, தவிர இதர சிறு கட்சிகளை ஒன்றிணைத்து தேர்தலை எதிர்கொள்வது என்கிற ரீதியில் செயல்பட்டு வருகிறது. எனவே, தென் மாவட்டங்களில் திட்டமிட்ட பிரசாரத்தை தீவிரமாக்கியிருக்கிறது. இந்நிலையில், அதிமுகவுடனான கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கிறது என்று நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அமித்ஷா கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "பாஜக வேண்டுமானால் கூட்டணி கதவுகளை திறந்து வைத்திருக்கலாம். பாஜகவுக்கு அதிமுக கூட்டணி கதவுகள் சாத்தப்பட்டுவிட்டன. பாஜக கூட்டணிக்கு வரக்கூடாது என்பதற்காக கதவை சாத்திவிட்டோம்" என்று கறாராக கூறிவிட்டார்.
மறுபுறம் அமித்ஷாவின் கருத்து குறித்து பேசிய ஓபிஎஸ், "அதிமுகவுக்கு கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கும் என்கிற அமித்ஷாவின் கருத்து அவரது நல்ல எண்ணத்தையே காட்டுகிறது" என்று கூறியுள்ளார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications