Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மறுபடியும் மொதல்ல இருந்தா? திடீரென குவிக்கப்பட்ட போலீஸ்! ‘அவர்’ வர்றாராமே? தடதடக்கும் ‘ராயப்பேட்டை’!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக அலுவலகத்துக்கு தான் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கபட்ட நிலையில், இன்று அதிமுக அலுவலகத்துக்கு வரலாம் என செய்தி பரவியதால் அங்கு திடீரென பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, ஔவை சண்முகம் சாலையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தங்கள் தரப்புக்கு ஆதரவான தீர்ப்பு வந்ததால் உற்சாகத்தில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அடுத்த கட்டமாக தேர்தலை கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராக பொறுப்பேற்கும் வகையில் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக அவர் பதவியேற்றது செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவர் அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் ஜெயலலிதா மாளிகைக்குச் சென்று கட்சிப் பணிகளை மேற்கொண்டார்.

 அதிமுக தலைமை அலுவலகம்

அதிமுக தலைமை அலுவலகம்

இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தானும் செல்ல வேண்டும் அதற்கு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் மனு அளித்தார். தற்போது இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் உரிய அனுமதி பெற்று வந்தால் மட்டுமே ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக தலைமை அலுவலகம் செல்ல அனுமதிக்க முடியும் என காவல்துறை அதிகாரிகள் உறுதியாக கூறியுள்ளனர். அதே நேரத்தில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தடையை மீறி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மீண்டும் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

எடப்பாடி தரப்பு

எடப்பாடி தரப்பு

இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதால் அதிமுக அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளருமான ஜெயக்குமார் நேற்று மாலை மனு அளித்தார். அந்த மனுவில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வர இருப்பதால் தேவையற்ற பிரச்சனை மற்றும் மீண்டும் மோதல் சம்பவங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் எனவே அவற்றை தவிர்க்கும் வகையில் தலைமை அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரி இருந்தார்.

ஆயுதப்படை காவலர்கள்

ஆயுதப்படை காவலர்கள்

அதிமுக அலுவலகத்திற்கு ஏற்கனவே சுழற்சி முறையில் பத்துக்கு மேற்பட்ட ஆயுதப்படை காவலர்கள் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் தற்போது ஓபிஎஸ் எந்த நேரத்திலும் அதிமுக அலுவலகத்திற்கு வரலாம் என இன்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் ஆதிமுக அலுவலகத்திற்கு இன்று கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் அங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்கள் சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 தீவிர கண்காணிப்பு

தீவிர கண்காணிப்பு

மேலும் அதிமுக தலைமை அலுவலகம் உள்ள ஔவை சண்முகம் சாலை ராயப்பேட்டை மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீவிர கண்காணிப்பு பணியில் உளவுத்துறை போலீசாலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அதிமுகவில் ஓ .ன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி இடையே என மோதல் முடிவடையும் வரை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் எப்போது அதிமுக அலுவலகத்திற்கு வருவார் என அவரது ஆதரவாளர்கள் பல இடங்களிலும் காத்துக் கிடக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+